சிம்பிள் க்ரீட்டிங் கார்ட்ஸ்

தேதி: August 17, 2011

5
Average: 4.3 (11 votes)

 

வாழ்த்து அட்டைகள் - கன்ஸ்ட்ரக்ஷன் கடதாசிகள் (construction papers)அல்லது பலநிற கடதாசிகள் (or Color papers)
ஆல்பபெட் (Alphabet) ஸ்டிக்கர்ஸ்
ரெடிமேட் பூக்கள்
சம்கி
க்ளூ(Glue)
கத்தரிக்கோல்
பெயிண்டிங் ஸ்டிக்ஸ் (painting sticks)

 

மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாழ்த்து அட்டையில் ஆல்பபெட் ஸ்டிக்கர்ஸ் கொண்டு விரும்பிய வாழ்த்தை எழுதவும்.
பின்னர் பூக்களை விருப்பமான ஒழுங்கில் ஒட்டவும்.
பூக்களின் நடுவே சம்கியை ஒட்டவும்.
பச்சை சிவப்பு நிற கன்ஸ்ட்ரக்ஷன் கடதாசியில் இலைகள் வெட்டி பெயிண்டிங் ஸ்டிக்கால் நரம்புகள் வரையவும்.
இலைகளை பூக்களின் இடையே ஒட்டவும். பின்னர் பெயிண்டிங் ஸ்டிக்கால் அல்லது சிறிய பூக்கள் ஸ்டாம்பால் சிறிய கொத்துக்களாக பூக்கள், இலைகள் வரையவும்.
எளிமையான இலகுவான குழந்தைகள் செய்யக்கூடிய வாழ்த்து அட்டை தயார். இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப கிராண்டா கொள்ளை அழகா இருக்குங்க இந்த கார்ட்ஸ் இவளோ சிம்ப்ளா இப்படி ஒரு கார்டா வாழ்த்துக்கள் by Elaya.G

நர்மதா அக்கா ரொம்ப அழகா இருக்கு சிம்பில் ஆனா கிராண்ட், என் பையனுக்கு செய்யக் கொடுக்கனும் இந்த முறை ஈத் கிரீட்டிங்காட் உங்க கைவண்ணம் தான்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எல்லாமே வடிவாக இருக்கு நர்மதா. சின்னவங்களை பிசியாக வைக்க, க்ரியேடிவ் ஆக வளர வைக்க இது நல்ல வழி. எப்போதும் சொல்வதுதான்.. இப்போதும் சொல்கிறேன், நர்மதாவின் பிள்ளைகள் லக்கி. ;) பாராட்டுக்கள்.

* நானே மறந்து போன குறிப்புகளை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கிறீங்கள். ;)

* அட்மின் குழுவினர் 'நல்லநாள்' பார்த்துக் குறிப்புப் போடுகினமோ!! ;))

‍- இமா க்றிஸ்

சூப்பர்பா நானும் இப்படிலாம் செஞ்சி farewell dayku en friendsku koduthen pa inum avanga pathrama vecirukanga pa en gyabagama இதப் பாத்ததும் எனக்கு அதப்பத்தி ஞாபகம் வந்துடுசுபா thanks pa nice

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அன்பு நர்மதா,

அழகாக, அருமையாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினர் மற்றும் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்!
இவை என் மகள் செய்தவைதான் எனது சிறு உதவியுடன் :)
-நர்மதா :)

நர்மதா,

குட்டீஸ்க்கு ஏற்ற craft ..இன்னும் நிறைய குறிப்புகளை பகிர்ந்துக்கோங்க
உங்க மகளுக்கும்,ஸ்மார்ட் அம்மாக்கும் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அட்டகாசமா இருக்குங்க;) கண்டிப்பா குழந்தைகளுக்கு (எங்களுக்கும்)செய்ய ரொம்ப பிடிக்கும் ;) நீங்க சொன்னமாதிரி க்ளு எல்லாம் கொடுக்கிறோமே;)

Don't Worry Be Happy.

நர்மதா குட்டீஸ் ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய க்ராஃப்ட் நான் கூட இதுமாதிரி ஒன்னு செஞ்சு வைச்சுக்க போறேன். அழகா இருக்கு. வாழ்த்துகள் பெரியவங்க செய்யறமாதிரியும் ஒரு க்ராஃப்ட் சொல்லி கொடுங்க.

உங்க வீட்டு சுட்டி ரொம்ப அழகாக செய்திருக்காங்க....குழந்தைகளை பிசியாக வைக்க நல்லதொரு கிராப்ட் .....கண்டிப்பாக என் பெண்ணுடன் சேர்ந்து நானும் ட்ரை பண்றேன்.

அந்த கார்டில் அவர்கள் வைத்திருக்கும் வாசகத்தை பார்க்க பார்க்க ஆசையாய் இருக்கிறது :) What more we can ask on birthday ;)

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்ல சுலபமான குட்டீஸ்க்கு ஏற்ற குறிப்பு. நாங்க சிறுவயதில் சுயமாக ஏதாவது கார்டுகள் செய்வது உண்டு... வீட்டில் கற்று கொடுக்கலாம் தெரியாது யாருக்கும்... தத்தக்கபித்தக்கான்னு நாங்களா யோசிச்சு செய்வோம். இப்போ குட்டீஸ்க்கு இது போல் ஐடியா கொடுக்க முடியுது, மகிழ்ச்சியா இருக்கு. :) வழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா