"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1 :-))"

தோழிகளே,
நம்மில் பலர் தாய்மையடைந்துள்ளனர்,தாய்மைக்காக காத்துகொண்டும் இருக்கின்றனர்....காத்திருப்போருக்கு தனி இழை ஆரம்பித்தாகிவிட்டது...இந்த தனி இழைக்கும் காரணம் அதுவேதான்........
பெண்களின் பலபல சந்தேகங்கள்.......கேட்ட அதே கேள்விகள்.....சொன்ன அதே பதில்கள்........பின்னால் வரும் தோழிகளுக்கு தேடிப்பிடிக்க சிரமம்.......ஆகவே இந்த இழை,தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்கலாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :
http://www.arusuvai.com/tamil/node/23381 ""

கர்பம் சில அறிகுறிகள்:
**********************************
1. மாதவிலக்கு நிற்பது:
*********************************
கர்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும்.
இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணி யாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியாநெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாத விலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு:
*****************
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை:
****************
இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற் கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

மசக்கை ஏன் வருகிறது?
************************************
கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிடாமல் தவிர்க்கவேண்டியிருக்கும்.
இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக் குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டி யுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
****************************************
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம்.
இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்
*******************************************
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப் புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்
***********************************************************
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

7. வயிறு பெரிதாகுதல்
*********************************
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.
கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

எனக்கு இடதுபக்கம் வயிறு அடிக்கடி துடிக்குற மாதிரி இருக்கு ஏன் அப்டி 2 மாசம் முன்ன தீட்டு அதிகம் ஆகல 1நாள் தான் ஆச்சு ஆனா போன மாசம் அதிகமா ஆச்சு இது எதனால any problem with me

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுதேவ்:
இந்த தகவல்களெல்லாம் தெரிந்து கொண்டு பகுத்தறிவை வளர்க்கத்தன். உடனே சந்தேகமோ,பயமோ கொள்வதற்காக இல்லை.அதிக வேலை இடைவிடாமல் செய்யும்போது இப்படியெல்லாம் இருக்கும்ப்பா.....

"ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி"
*********************************************
ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை காணலாமா தோழிகளே....

1.ஒன்றாம் மாதம் : 
******************
  கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாகத் தெரியும்.
முதல் பாகம் :
***************
மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.  

இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
*******************
முன்றம் பாகம் :  இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.
*****************
2.இரண்டாம் மாதம் :  
*********************
சிசுவிற்கு முகம் உருவாகிறது.  கண் பகுதி குழி தோன்றும். மூளை,  இதயம்,  சுவாசப்பகுதி,  கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும்.  இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.

3.முன்றாம் மாதம்:   
********************
உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும்.  நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.

4.நான்காம் மாதம்: 
********************
தலைமுடி, புருவம்  போன்றவை  லேசாக  வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.

5.ஐந்தாம் மாதம்:  
****************
சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார்.  "லாலுனுகோ"  என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.

6.ஆறாம் மாதம் :  
******************
சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில்
இருந்து குழந்தை  தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

7.ஏழாம்  மாதம் :  
******************
குழந்தை கண் திறக்கும்.  எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.

எட்டாம் மாதம் :  
******************
நகம் வளரும். முடி வளர்ச்சி  அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி
தலைகீழாக  குழந்தை செல்லும்.

9.ஒன்பதாம் மாதம் :  
*********************
ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.  பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.

இப்பதிவில் தோழிகள் பதிலளியை கிளிக் செய்யவேண்டாம். புதிதாக தகவல் தெரிந்தால் இதில் சேர்க்க வேண்டும்...Plz

என்னோட கடைசி period மே 25 அதுக்கு அப்பறம் எனக்கு இன்னும் period வரல. நான் இதுவரைக்கு 3 urine test,1 blood test எடுத்தாச்சு. எல்லாமே நெகடிவ். நான் போன வாரம் டாக்டர் கிட்ட போனேன். அவங்க checkup பண்ணி பாத்துட்டு கர்ப்பம் இல்லைனு சொல்லிட்டாங்க.எனக்கு period வர tablet கொடுத்தாங்க.tablet சாப்பிட்டு முடிஞ்சி இன்னும் period வரல.ஆனா டாக்டர் சொன்னது period வரலைனா ஒருவேளை கரு இருந்தாலும் இருக்கலாம்னு சொன்னாங்க. அப்படி இருக்க சான்ஸ் இருக்கா. இல்ல நான் எதாவது ஸ்கேன் செய்து பார்த்தா தெரியுமா.எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.எனக்கு ஒரு தெளிவான பதிலா சொல்லுங்க.

எனக்கு renuraj sonadu pa tv scan pani parunga pa karu chinada irundalum theriadu pa k try pani parunga pa k

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு renuraj sonadu pa tv scan pani parunga pa karu chinada irundalum theriadu pa k try pani parunga pa k engaloda matha padipayum parunga pa

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

doctor enna 22nd vanthu parka solli irukkanga.poittu vanthu than aduthu enna pandrathunnu yosikkanum. ninga sona mathiri scan pannithan pakkanum vera vali illa.

poi parunga pa all the best pa k manasa potu kollapikadenga k va happyah irunga k elam naladave nadakum k va

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்