வயிறு பொருமல்..சீரகம்

வணக்கம் தோழிகளே
நான் இப்போ ஐந்து மாத கர்ப்பம். வயிறு பொருமலா இருக்கும் போது சீரகம் சாபிடலமா? சீரகம் கர்ப்ப பையை contract பண்ண வைக்கும் என்று படித்த நியாபகம். சீரக தண்ணீர் எப்படி செய்வது? உங்கள் பதிலுக்கு காத்திருக்கும்
விகாஷி

விகாஷி தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து அதில் சீரகத்தை போட்டு வைத்தால் சீரகத்தில் உள்ள சாறு எல்லாம் தண்ணீரில் இறங்கி இருக்கும். வெதுவெதுப்பா, ஆற வைத்தும் குடிக்கலாம். மறுநாள் இதே தண்ணீயே வைச்சு இருந்தா வீணா போயிடுது.

ஹாய் விகாஷ்
சீரக கசாயம் செய்ய . ஒரு கைப்பிடி சீரகம் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து கொள்ள வேண்டும்(எண்ணெய் விடாமல் வறுக்க வேண்டும் ) . நல்ல பிரவுன் கலர் (நல்ல மணம் வரும் )வரும் வரை வறுக்க வேண்டும் கருக்க கூடாது . பின்பு அதே பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும் . தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும் . காய்ச்சிய நீரை சூடு ஆறும் முன்பு பருக வேண்டும்( காபி , தேநீர் குடிக்கும் அளவு சூடு ). இவ்வாறு பருகுவதினால் வாந்தி கட்டுப்படும் , வயிற்று உபாதைகள் சரியாகும், false labor ஆக இருந்தால் சரியாகி விடும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. சுக பிரசவம் ஆக இறைவனை பிராத்திக்கிறேன் .

அன்பு தோழிக்கும் விநோஜவிற்கும் அன்பு நன்றிகள். ...
தோழி சீரக தண்ணீர் எப்போதும் குடிலாம் தானே ....எனக்கு இப்போ ஐந்து மாசம் தான் ஆகிறது. சீரக தண்ணீர் குடித்தால் இப்பவே கூடாத?

நான் இப்போது 11 வாரம் கர்ப்பமாக உள்ளேன். நான் இப்போது சீரக தண்ணீர் குடிக்கலாமா? காலை மட்டும் குடித்தால் போதுமா? காபி டீ போல் 2 வேளை குடிக்கலாமா? ஒரு கப் மட்டும் குடிக்கலாமா? எப்படி என தெளிவாக கூறவும்

மேலும் சில பதிவுகள்