உடல் எடை குறைப்பது / உடற்பயிற்சி பற்றிய சந்தேகம் தீர்ப்போம்!!!

அனைவருக்கும் வணக்கம், இந்த தலைப்பை போன்று தினம் தினம் குழப்பங்கள் எல்லோருக்கும் இருக்கும். என்ன செய்வது எப்படி செய்வது என்று... ஏன் இங்கே கூட தினம் ஒரு இழையாவது உருவாகிறது இதுபற்றி!
இது ஒரு பொது தளம் இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு பொதுவாக அனுபவஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள், தெரிந்தவர்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். அதை மட்டுமே முழுமையாக எடுத்து கொண்டு செயல் படாமல் இதனை ஒரு முதல் உதவி போல் கருத்தில் கொண்டு முடிந்தவர்கள் முறையாக அதற்கான ஸ்பெஷலிஸ்ட்டிடம் சென்று தீர்வு காண்பது அவசியம் என்பது என் கருத்து.
இந்த தலைப்பை பற்றி நானே சில இழைகள் தொடங்கினேன், அதில் பற்பல சந்தேகங்களும் முக்கிய விஷயங்களும் விரிவாக பேசப்பட்டன. அவற்றை திரும்ப திரும்ப கூற வேண்டிய நிலை பல இடங்களிலும் ஏற்பட்டது. இங்கேயும் ஏற்படலாம்.
பழைய இழைகளின் லிங்க் இங்கே இருக்கிறது.... யாரும் அங்கே சென்று
பார்க்க மாட்டீங்கன்னு தெரியும்!!!... இருந்தாலும் எனது திருப்திக்காக கொடுக்கிறேன்....

ஆரோக்கியம் பற்றிய தலைப்புக்கள்:
********************************
Part 1 - http://www.arusuvai.com/tamil/node/11771
Part 2 - http://www.arusuvai.com/tamil/node/12650
Part 3 - http://www.arusuvai.com/tamil/node/12890

அழகு குறிப்புகள்:
****************
Part 1 - http://www.arusuvai.com/tamil/node/12454
Part 2 – http://www.arusuvai.com/tamil/node/12714
Part 3 - http://www.arusuvai.com/tamil/node/13176
Part 4 - http://www.arusuvai.com/tamil/node/13873

இரண்டும் இணைந்தவை - http://www.arusuvai.com/tamil/node/15785

உடல் எடை குறைப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, வயிறு குறைய, கால்கள், கன்னங்கள்,... இப்படி எது பற்றிய சந்தேகம் இருந்தாலும் தனி தனி இழை தொடங்காமல் (இது பற்றிய படிப்பும் அனுபவமும் இருப்பதால் என்னால் உதவ முடிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக தேடிபிடித்து பதில் அளிப்பது மிகவும் சிரமம்.) ஒரே இடமாக இருந்தால் நல்லது. எனவே உங்கள் சந்தேகம் இங்கே கேட்கப்பட்டால் கண்டிப்பாக என்னால் முடிந்த பதில் அளித்து உதவ முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னப்பா யாரெல்லாம் ரெடியோ வாங்க... உங்க கேள்விகளை கொஞ்சம் தெளிவாக விளக்கமாக கேட்கவும். அதனால் பிரச்சனையை புரிந்து விளக்கம் கொடுக்க ஏதுவாக இருக்கும்.
யாரெல்லாம் லைன்ல இருக்கீங்க.... நானே முதல்ல இருக்கேன்.... ஃபோலோ மீ!!!

நல்ல இழை தான் ...

வயிறு குறைப்பது பெரும் பிரச்சனை ....... எத்தனையோ முறைகள் யோகா என்று கேள்விபட்டாலும் வயிறாய் குறைப்பது கஷ்டமாக உள்ளது ...அனுபவத்தில் நீங்கள் உணர்ந்த விரைவாக தொப்பையை குறைக்கும் முறையை சொல்லுங்களேன் ப்ளீஸ் ...அத்துடன் எனக்கு கையும் குண்டாக உள்ளது ... இதுதான் உடனே ஆட்களை குண்டாக காட்டி விடும் .. இதற்கும் ஏதாவது உடல் பயிற்ச்சி சொல்லுங்க ..:)

பாப்ஸ் உங்க பேர் உமா தானே.உங்க குறிப்புகள் எல்லாம் படிச்சிருக்கேன்.பயனுள்ள குறிப்புக்கள்.எனக்கும் வயிரு மற்றும் இடுப்பு பகுதிதான் குண்டாக இருக்கும்.கால் கை நார்மலா தான் இருக்கும்.வயிற்று பகுதியை குறைக்க வழிசொல்லுக்கப்பா

ஹாய் உமா எப்படி இருக்கீங்க என்னோட உயரத்திற்கு நான் 56 இருக்கனும் நான் 80 இருக்கேன் இப்ப 1 கிலோ குறைஞ்சி இருக்கேன் நோன்பு பிடிப்பதால் எனக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது ஒரு மாதம் விட்டுதான் வரும் எனக்கு தாடையில் முடி இருக்கு நான் வேக்ஸ் செய்றேன் நம்ம எடை குறைச்சி மாதவிடாய் சீராக் வந்தால் முடி வளர்வது குறையுமா நான் டெரெட் மில் வாங்கலாம்னு நினைக்கிறேன் என்ன ப்ராண்ட் வாங்கலாம் நான் எடை குறைக்க வயிறு தொடை பின்பகுதி குறைக்க வழி சொல்லுங்கள் என்னதான் எல்லாம் இருந்தாலும் அல்ட்சியம்தான் காரணம் தொடர்ந்து செய்ய வர மாட்டுது உங்க அனுபவத்தை சொல்லுங்க i am in india

ayurslim tablet பக்க விளைவுகள் இல்லை என்று சொல்கிறார்கள். அதை try பண்ணலாமா? Please give your suggestion.

காலை வணக்கம்...... நல்ல இழை தா தொடங்கீர்கீங்க.... நானும் வெயிட் குறைக்கனும்... எதாவது டிப்ஸ் குடுங்க திரிபலா சூரனம் வாங்கீட்டேன் ஆனா அதுல உணவுக்கு பின்னு போட்டுருக்கு... நம்ம இழைல தோழிங்கலா உணவுக்கு 1மணி நேரத்துக்கு முன்னாடி எடித்துக்கனும்னு போட்ருக்காங்க என்ன பன்ரது எப்படி சாப்பர்ரதுனு தெறியலா கா...ப்ளீஸ் ஹெல்பு பன்னுங்கோ......

அன்புடன்
லதா.....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

ஜனனி, சுந்தரி, ஃபர்வின், சத்யா, லதா... அனைவருக்கும் ஹாய்,
. இங்கே நான் பலமுறை கூறிய பதில்கள் திரும்ப திரும்ப வரலாம். காரணம் ஒன்று தான்... அனைவருக்கும் ஒரே கேள்வி தான் எழும்புகிறேது அதனால் ஒரே பதிலும் வருகிறது.

* மூன்று முறை ஒரு நாளில் அளவாய் உணவு உட்கொள்ள வேண்டும். மற்ற நேர நொறுக்கு தீனிகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

* பச்சை காய்களை, பழங்களை தின்பண்டங்களாக எடுத்துக்கொள்ளலாம். அசைவம், ஆயிலி உணவுகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* வறுத்த, பொறித்த உணவுகள், ஐஸ்கிரீம், கேக் போன்ற ஹாய் கலோரி அயிட்டங்களை திரும்பி கூட பார்க்க கூடாது.

* நிறைய தண்ணீர் ஒரு நாளில் குடிக்க வேண்டும். ஒரு பெரிய கிளாசில் எட்டுக்கும் மேற்பட்ட முழு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* வயிறு குறைய, குனிந்து நிமிர்ந்த வேலைகள் அதிகம் செய்தல் வேண்டும். எதையாவது பிடித்துக்கொண்டு வேண்டுமானாலும் வயிறு தசைகள்
அழுந்துமாறு/இறுக்கி பிடித்தவாறு அமர்ந்து அமர்ந்து எழுவது போல் தினமும் காலை மாலை செய்யலாம்.

* உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் நம்பிக்கையோடு இருந்தால் மட்டுமே சில நாட்களில் விரும்பியதை பெறலாம். இவை கண்டிப்பாக உடனடி ரிசல்ட் கொடுக்காது.

* மருந்து, மாத்திரை போன்ற உடல் எடை குறைக்கும் உணவுகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகப்படுத்தவும்.

* உடற்பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த அவற்றை பற்றி முழுமையாக அறிந்து, பயன் படுத்தும் முறை தெரிந்து பிறகு பயன் படுத்தலாம். வாக்கிங் முறையாக செல்லலாம்.

பொதுவா இவை அனைத்தும் கடைபிடித்தாலே வயிற்று பகுதி, பின்புறம், கால்கள், கைகள் போன்ற இடங்களில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பு குறைந்து உடல் மெலியும்.

வேறு சந்தேகமிருந்தால் கேளுங்கள்.

வணக்கம் தோழிகளே ..

நான் இந்த இலைக்கு புதிது ........எனக்கு நீங்க சொல்லுவது போல் பல பிரச்சனை உள்ளது..........எனக்கு வெயிட் reduction பண்ண சொல்லி டாக்டர் சொல்லி இருகிறாங்க .....கொஞ்சம் கொஞ்சம் செய்ட வேய்ட் ரெடுசே ஆகுது பட் எப்படியாவது தீடிருன்னு வெயிட் வசிருது.டீத் டிப்ஸ் கொஞ்சம் சொல்லவும்.........திருபல சூரணம் எந்த சைடு எப்பிச்டும் பண்ணதா..அத எப்படி உபயோகம் பண்ணனும்நு சொல்லுங்க.

by ,
சபினா சாதிக்

ஹாய் வணக்கம் என் பேரு திவ்யா நான் முனடியே வெயிட்லாஸ் எ பத்தி கேட்டேன் திருப்பியும் கேக்குறேன் எனக்கு 19 ய்ர்ஸ் ஆகுது நான் 90 கிலோ இருக்கேன் என் உயரம் 5 '7 நான் ஜிம் போனேன் ஆனால் என் கை மற்றும் இடுப்பு சதை அசிங்கமாக தொங்குது எனக்கு 19 வயசு என்றல் யாரும் நம்ப மாட்டாங்க எனக்கு இப்போ நல்ல அட்வைஸ் பண்ணுங்க எனக்கு பிளஸ் உங்க பொண்ண சிஸ்டர் ஆ நினச்சு பிளஸ்

திவ்யா நீங்க கவனிச்சீங்களோ என்னவோ யோக செய்ய சொல்லியிருந்தேன்..எல்லா இடத்திலும் இருக்கும் சதையை கரைக்கலாம்.சின்ன வயசு தானே இப்போ உங்களுக்கு எங்க வேணா போகலாம் அதனால் யோகா கத்துக்குங்க கண்டிப்பா நல்ல பலன் கிடைக்கும்

மேலும் சில பதிவுகள்