முந்திரி கேக்

தேதி: August 19, 2011

பரிமாறும் அளவு: 6 persons

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 1 (1 vote)

 

முந்திரி - 500 கிராம்
சர்க்கரை - 750 கிராம்
நெய் - 250 கிராம்
ஜாதி பத்ரி - சிறிது
பால் - 50 மில்லி


 

முந்திரியை சிறிதாக கட் செய்து வெது வெதுப்பான நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
முந்திரி, ஜாதி பத்ரி , பால் சேர்த்து மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும் .
அடுப்பில் வாணலியை வைத்து அரைத்த முந்திரி விழுதையும் ,சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறவும் .
20 நிமிடங்கள் நன்கு கிளறிய பிறகு நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
இதை ஒரு ட்ரேயில் ஊற்றி விருப்பமான வடிவில் வெட்டிக்கொள்ளலாம்.
இப்போது சுவையான முந்திரி கேக் தயார் .


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்று

love is god