உங்களுக்கு தெரிந்த டிப்ஸை சொல்லுங்க PLEASE

நான் வேலைக்கு செல்கிறேன். ப்ரிட்ஜ்-ல முன்பே என்ன உணவு பொருட்களை தயார் படுத்தி வைக்கலாம். அதாவது, என் பக்கத்து வீட்டில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் முன்பே செய்து வைத்தால் தேவைபடும் போது எடுத்து உபயோகிக்கலாம், என்று டிப்ஸ் சொன்னாங்க. உங்களுக்கு தெரிந்த டிப்ஸை சொல்லுங்க PLEASE

mrng lunch prepare pannara mathiri erutha carrot cabbage ebid night free time la cut panni oru container la tight ah close panni vechi next day use pannalam fired items previous day la senji oru box la white papper pottu apparam itemsa ulla vechi tighta close pannita neenga next day kuda use pannalam pa ennaku therija naa use pannara tips ethan frnd

சப்பாத்தி, பூரிக்கு மாவு பினைந்து வைத்து பிரிட்ஜில் வைக்கலாம். சமைக்க போகும் அரை மணி நேரத்துக்கு முன்னாடி மட்டும் வெளியே எடுத்து வச்சா போதுமானது.

கோஸ்,கேரட்,பீன்ஸ் நறுக்கி வைக்கலாம்

சின்ன வெங்காயம் உரிச்சு வச்சுகிட்டா ஈசியா இருக்கும்

கீரையை முதல் நாள் இரவே ஆய்ந்து வச்சுகிட்டா காலையில் உடனே செய்து முடிச்சுடலாம்

பருப்பை வேக வச்சு டப்பாவில் வைத்து ப்ரீசரில் வச்சுகிட்டா தேவைப்படும் போது எடுத்துக்கலாம்.

ப்ரிட்ஜில் வைத்தால் அப்பளம் ரொம்ப நாளைக்கு அப்படியே பொரிச்சது போலவே இருக்கும். சோ நீங்க பொரிச்சு வச்சுகிட்டு டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வச்சுடுங்க. தேவைப்படும் போது எடுத்து சாப்பிடுங்க (கூளிங்க் கம்மியா தானே இருக்கும். அவ்வளவா தெரியாது).

முதல் நாள் இரவே என்ன சமைக்கலாம், என்ன செய்யலாம்னு முடிவு பன்ணி அதுக்குண்டான பொருட்களை எடுத்து வச்சுகிட்டா ரொம்பவே சுலபம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சப்பாத்தி,பூரி,புரோட்டா ஆகியவற்றை ப்ரீ டைமில் செஞ்சு ப்ரிட்ஜில் வச்சுகிட்டா தேவைப்படும் போது இட்லி சட்டியில் 2 நிமிஷம் அவிச்சு லஞ்ச் பாக்ஸ்ல கொண்டுட்டு போகலாம்

வெஜ் குருமா,க்ரேவி,சன்னா மசாலா ஆகியற்றை முதல் நாள் சமைக்கும் போது அதிகமாவே சமைத்து வச்சுகிட்டு கண்டெய்னர்ல பிரிட்ஜ்ல வச்சுகிட்டா தேவைக்கு ஏற்ப எடுத்து சூடு பண்ணி சாப்டுக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

chinna vengayam urithu vaika kudathu fridgeil

மேலும் சில பதிவுகள்