தண்ணீரில் ரங்கோலி வரைவது எப்படி?

தண்ணீரில் ரங்கோலி

தேதி: August 20, 2011

5
Average: 4.1 (22 votes)

 

வாஸ்து பாட்
டால்கம் பவுடர்
கலர் கோலமாவு
கோலம் சல்லடை
தண்ணீர்
வடிகட்டி

 

தேவையானப்பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாஸ்து பானை
நம் வீட்டில் பயன்படுத்தும் மாவு சல்லடை போன்று கோல டிசைன் வரையப்பட்டு கோலச்சல்லடையாக விற்கப்படுகிறது. இது சிறிய சல்லடை அளவிலும் கிடைக்கும்.
கோல அச்சு
வாஸ்து பாட் முழுவதும் தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். டால்கம் பவுடரை வடிகட்டியில் கொட்டி தண்ணீர் தெரியாதவாறு வடிகட்டியினால் சலித்துக் கொண்டே வரவும்.
வாஸ்து பானை
பாட் முழுவதும் பவுடரால் நிரம்பியதும் அதன் மேல் கோலச்சல்லடையை வைக்கவும். இப்போது நடுவில் உள்ள பூக்களில் மட்டும் கலர் பவுடரைக் கொட்டி கையினால் லேசாக தேய்த்து விடவும்.
கோல அச்சு
பவுடரின் மேல் கோலச்சல்லடையில் உள்ள பூக்கள் இதுப்போல் பதிந்திருக்கும்.
பானையில் கோலமாவு
இந்த பூவின் நான்குப்பகுதியில் சிறிய பூக்கள் வருவதுப்போல் அச்சிட வேண்டும். சல்லடையில் உள்ள சிறிய பூவின் மேல் மேற்சொன்ன முறைப்படி கலர்பவுடரைக் கொட்டி தேய்க்கவும்.
பூ வடிவம் வரைதல்
இதுப்போல் சிறிய பூக்களை அச்சிட்டு முடிக்கவும். கடைசியில் பாட் ஒரத்தில் படிந்திருக்கும் பவுடரை ப்ரஷினால் துடைத்து விடவும்.
பூ வடிவம் வரைதல்
பச்சைநிற கலர் பவுடரினால் பூக்களின் இடையில் சிறிய புள்ளிகள் வைக்கவும். தண்ணீரில் வரையப்பட்ட கோலம் ரெடி. வரவேற்பறை, பிறந்தநாள் விழா, நவராத்திரி, வீட்டு விஷேங்களில் இதுப்போல் செய்து வைக்கலாம்.
தண்ணீர் கோலம்
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த ரங்கோலி செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்
செண்பகா பாபு

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நான் முயற்சித்திருக்கிறேன் இதை

கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இப்படி ஒரு கோலம் நான் பார்த்ததே இல்லை. இதுவரை பூக்கள் வைத்து நடுவே கேண்டில் தான் வைப்பதுண்டு. இது போல் நிச்சயம் செய்து பார்க்கிறேன். ரொம்ப அழகா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்..நவராத்ரிக்கு நல்ல ஐடியா..வாழ்த்துக்கள் செண்பகா.

Kalai

செண்பகா கலக்கலான ரங்கோலி ரொம்பவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரங்கோலி ரொம்ப அழகா நேர்த்தியாக இருக்கு. இது வரையில் நான் உருளியில் பூ அலங்காரம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.....இது அசத்தலாக இருக்கு. என்னங்க சொல்றீங்க.....இப்படியெல்லாம் இந்தியாவில் கிடைக்கிறதா? ரொம்பவே மிஸ் பண்றேன் :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு இந்த வகைக் கோலம் மிகவும் பிடிக்கும். எப்படிப் போடுவார்களோ என்று வியந்திருக்கிறேன். இப்போது தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி செண்பகா.

//அரிசிமாவு கலந்த கோலமாவு, வெறும் கோலமாவு கொண்டு செய்யமுடியாது.// என்று சொல்லி இருக்கிறீர்கள். இந்த வகைக் கோலமாவு வாங்குவதானால் என்னவென்று குறிப்பிட்டுக் கேட்க வேண்டும்? சொன்னால் உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

அடடா! ரொம்ப அழகா இருக்கு ரங்கோலி;) எனக்கு ரொம்ப பிடிச்ச கோலம் இது, ஸ்கூல்ல எங்க மிஸ் போடுவாங்க.. இப்ப உங்க மூலமா நானும் கத்துக்கிட்டேன்;) தேங்க்ஸ்;-)

Don't Worry Be Happy.

இது கோலப்பொடியில் கலந்து பயன்படுத்த என கடைகளில் மிக சாஃப்ட்டாக கலர் பொடிகள் சின்ன சின்ன பேக்கெட்டில் கிடைக்கும்... அது தான். தொட்டு பார்த்தா முகத்துக்கு போடும் பவுடர் போல மென்மையா இருக்கும். சாதா கோல மாவு என்பது நரநர என இருக்கும். புரியுதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள்..ரொம்ப அழகா இருக்கு.. கொலுவுக்கு வைக்க நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

இமா பண்ணிப் பார்த்தாச்சு. ;)

செண்பகா அளவுக்கு வரலன்னாலும் திருப்தியா வந்திருக்கு. அடுத்த தடவை தப்பெல்லாம் திருத்தி பண்ணிருவேன். மேசைல வச்சு பண்ணிட்டேன். அதை இடம் மாற்ற... ஆடி ஆடி வந்துது. இப்போ ஹால்ல ஒரு ஸ்டூல்ல இருக்கு. வீட்டுக்கே ஒரு அழகு வந்த மாதிரி இருக்கு. ரொம்ப நாளா ஆசைப்பட்ட விஷயம். போடத் தெரிஞ்சதுல சந்தோஷமா இருக்கு. தாங்ஸ் செண்பகா.

‍- இமா க்றிஸ்

புரியுது. உதவிக்கு மிக்க நன்றி. ;)

‍- இமா க்றிஸ்

செய்துட்டீங்களோ!!! கலக்குங்க. எனக்கு நான் சொன்னது விளக்கம் புரியும்படியா சொன்னேனா இல்லையான்னே குழப்பம்.... அதுக்குள்ள நீங்க செய்தே ஆச்சு :) சூப்பர்,.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நான் முயற்சித்திருக்கிறேன் இதை// நீங்க எந்த மாதிரி செய்து இருக்கீங்க. பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

//இப்படி ஒரு கோலம் நான் பார்த்ததே இல்லை// பார்த்தது இல்லையா நான் ரொம்ப பழைய மாடலை செய்யுறோமே என்று நினைச்சேன் பரவாயில்லை உங்களுக்கு இதுதான் புதுசு ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா செய்து பாருங்க நன்றி.

ஹாய் கலா எப்படி இருக்கீங்க. ரொம்ப நன்றி.

ஹாய் சுவர்ணா எப்படி இருக்கீங்க. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ரொம்ப நன்றி லாவண்யா. எப்படி இருக்கீங்க? பசங்க எப்படி இருக்காங்க?

இமா அம்மா ரொம்ப நன்றி. நீங்க செய்த போட்டோவும் பார்த்தாச்சு ரொம்ப சூப்பர்.

ஜெயலெஷ்மி ரொம்ப நன்றி. எப்படி இருக்கீங்க?

இமா அம்மாக்கு பதில் சொன்னதற்கு வனிதா மீண்டும் நன்றி.

லெஷ்மி வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

senbagababu

very nice, pls give some tips for navratri golu functions for making park and zoo in simple method

Hi Shenbaga

Its very nice

Mrs Madhivanan

இந்த வாஸ்த்து பாட் என்ன விலையில் கிடைக்கிறது என்று கூற முடியுமா?? தோழிகள் யாருக்காவது தெரிந்தாலும் கூறுங்கள் பா...

வாஸ்த்து பாட் ?!!

மேலே படத்துல இருக்கிற சட்டி 40 ரூபாய் (க்கு வாங்கி கொடுத்தேன் :-))

அட, எத்தனை அழகா இருக்கு! எப்படி பார்க்காம விட்டேன்னு தெரியலையே?! இப்போ சமீபத்திய கருத்துக்களால் உள்ளே வந்தேன். :)

ரொம்ப அழகா இருக்கு செண்பகா! எனக்கும் உடனே செய்துபார்க்க ஆசையா இருக்கு! :)

ஆஹா... இப்பதான் சம்மரில் இந்தியா போயிட்டு வந்தேன். இதுமாதிரி பாட் எங்கயும் கண்ணில படாமலே போச்சே. இன்னும் அடுத்தமுறை பயணம் வரை காத்திருக்கனுமா?! ம்ம்ஹீம்.., மிஸ் பண்ணிட்டனே!... :(

அன்புடன்
சுஸ்ரீ

ஹா ஹா ஹா.. சட்டி தாங்கன்னா.. சட்டியே தான்... இந்தக்காலத்துல அது வாஸ்து பாட் ஆ பெயர் மாற்றம் பெற்றுள்ளது.. ;)

தகவலுக்கு நன்றி. :)

நன்றாக இருக்கிறது