என் அம்மாவின் பாஸ்போர்ட் பற்றிய சந்தேகம்

நான் இப்போது கர்பமாக இருக்கிறேன். நான் வசிப்பது அபுதாபி - யில். டெலிவரிகு அம்மாவை இங்கு அழைத்து வரவுள்ளேன். என் அம்மா 5 வது வரை தான் படித்துவுள்ளார் . பாஸ்போர்ட் - இல் ECNR தேவையா இல்லையா? தோழிகள் தங்கள் அம்மாவை அழைத்து வந்த அனுபவம் பற்றி கூறவும்.

முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்,..ECNR கண்டிப்பாக தேவைப்படும்.டிகிரி வாங்காத எல்லோருக்கும் அவசியம்..சில நாடுகளில் சீனியர் சிட்டிசனுக்கு அவசியம் இல்லை என்று ஒரு விதிவிலக்கு உண்டு..ஆதலால் நீங்கள் நம்ம ஊரில் உள்ள இமிக்ரேஷன் அலுவலகத்தில் விசாரித்து முடிவெடுக்கவும்.எப்பவும் அந்நிய நாடுகளில் அந்நிய சிட்டிசன்களுக்கு உள்ள சட்டங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறுப்படும்,ஆதலால் நாம் முன்ஜாக்கிரதையாக இருப்பது மிக அவசியம்..அபுதாபியில் எப்படின்னு அங்குள்ளவர்கள் வந்து கூறுவார்கள்,காத்திருங்கள்.

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்