எள் தட்டைமுறுக்கு

தேதி: August 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

மைதா - 2 கப்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
ரவை - ஒரு மேசைக்கரண்டி
எள் - 3 மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 5 இதழ்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை மிக்ஸியில் அரைத்து ஃப்லேக்ஸாக மாற்றவும்.
பின் அரைத்தவற்றை மேலே கூறிய பொருட்களுடன் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பின் கலவையில் 4 மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும்.
20 நிமிடம் கழித்து ஒரு பெரிய உருண்டை எடுத்து நன்றாக மெல்லியதாக தேய்க்கவும். ஃபோர்க்கால் ஆங்காங்கே குத்தி விடவும். இதனால் உப்பி வருவதை தடுக்கலாம்.
வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயை நன்றாக காய விட்டு அதில் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
க்ரிஸ்பியான, சுவையான, அதிகம் எண்ணெய் பிடிக்காத டீ, காபிக்கு ஏற்ற சிற்றுண்டி ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வித்யாசமான குறிப்பு செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ரம்யா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்யா எளிமையான குறிப்பு விருப்பப்ட்டியில் சேர்த்துட்டேன் வாழ்த்துக்கள்

நம்ம ரம்யாவா இதுன்னு அப்படியே அசந்துட்டேன்!!! இதுவரை இது போல் குறிப்பு ஏதும் கொடுத்ததில்லை தானே... சூப்பரான சுலபமான குறிப்பு. செய்துடறேன் ரம்யா செய்துடறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமையல்ல பூந்து விளையாடறீங்க, பிரமாதம். வித்தியாசமான முறுக்கு தான், ஈஸி ஹா பண்ணிடலாம் போல!! வாழ்த்துக்கள் ரம்ஸ்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்யா....
உண்மைய சொல்லுங்க
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் கார்த்திக்
ஒளிப்பதிவு-ரம்யா
சரிதானே?????

தமிழ்நாட்ல இருக்கும் போது வராத சமையல் இப்ப அமெரிக்கா போனதும் எப்படி வந்துச்சு???? டவுட்டு

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் கார்த்திக்கு ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு ரம்யா,

மைதா மாவில் தட்டை புதுமையாக இருக்கு. உப்பி வராமல் இருக்க, ஃபோர்க்கினால் குத்தி விடும் ஐடியா நல்லா இருக்கு. அதே போல, சின்ன சின்ன தட்டையாக தட்டிக் கொண்டிருக்காமல், பெரிதாக இட்டு, பின் கட் செய்து பொரிக்கும் ஐடியாவும் பிடிச்சிருக்கு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ரம்யா எள் தட்டை செய்முறை, டிப்ஸ் பார்க்கும்போது ஈஸியா இருக்கு. தீபாவளிக்கு ரம்யாவோட எள்தட்டை எங்க வீட்டுல. விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.

ரம்ஸ் சூப்பரான தட்டை ஈசியா சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்,நானும் இது போலத்தான் செய்வேன் ஒரு பிடி கடலைபருப்பு ஊறவைத்து மாவில் சேர்த்துப்பேன் அது மட்டும்தான் வித்தியாசம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செய்து பாருங்கள். நினைத்த மாத்திரத்தில் செய்து விடலாம்.. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி டா.. தீபாவளி வரை வெயிட் செய்து செய்யும் அளவு. பெரிய வேலையே இல்லை.. ஈஸியா தான் இருக்கும். நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க.. இந்த ஃபோர்க்கால் குத்திவிட எனக்கும் என் அக்காக்கும் சண்டையா இருக்கும் வீட்டில் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்கு நன்றி.. ஆடியன்ஸாக் கூட வர அவருக்கு நேரம் இருக்காது.. அப்றம் எங்கே கதை வசனமெல்லாம் :)

//தமிழ்நாட்ல இருக்கும் போது வராத சமையல் இப்ப அமெரிக்கா போனதும் எப்படி வந்துச்சு????//

சிறு திருத்தம்.. தமிழ்நாடு ,அமெரிக்கா விஷயம் இல்லை.. திருமணம் ஆகாத போது செய்யாத சமையல் திருமணம் ஆன பின் செய்யக்கூடும் எந்த பெண்ணாக இருந்தாலும் காதல் கணவர் கிடைத்தால்.. :) மேலும் வராத சமையல் இல்லை.. செய்யாத சமையல்.. நமக்கு திருமணம் முன் செய்ய டைம் இருந்தா தானே.அலுவலகமே சரியா இருக்கும்:)

//டவுட்டு// எப்பவும் ஆமிக்கும் டவுட்டு வருது.. ஒருவேளை உங்க வீட்டின் கதை திரைக்கதை வசனமெல்லாம் அவரோ ;) ..அதான் அடிக்கடி இந்த டவுட்டு .. ஹீஹீஹீ

நன்றி டா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்களும் பூந்து சும்மா சுதி அடிச்சு விளையாடுவிங்க பாருங்க.. :)
கண்டிப்பா செய்து பாருங்க :) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா செய்து பாருங்க வனி ;) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றிங்க..:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,

எளிதான ஸ்நாக் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

unga receipe super but enaku oru doubt 2 cupna evlo....

matram ondru than valvil matram illathathu

<கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாயை மிக்ஸியில்
அரைத்து ஃப்லேக்ஸாக மாற்றவும்>
என்றால் என்ன?

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

ஒன்னு இரண்டா பொடிக்கனும்னு அர்த்தம். அவங்க சொல்றது flakes. crushed என்றும் சொல்லலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்மி... அருமை.. ரொம்ப சுலபமா இருக்கே... குறிப்பு வந்த அன்னிக்கே பார்த்தேன்... பதிவு போடத்தான் நேரம் இல்லை.... 2 நாள் முன்னாடி வந்திருந்தா கோகுலாஷ்டமிக்கு கண்டிப்பா செய்திருப்பேன்... :) சரி விடு கிருஷ்ணருக்கு குடுத்து வைக்கல.... :):)

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றி.. க்ருஷ்ணருக்கு ஏன் கொருத்து வைக்கலை.. அதான் அச்த்திட்டிங்களா :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி சொன்னது தான் பா.. நன்றி

நன்றி வனி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

2 கப்னா உங்க வீட்டில் இருக்கும் சிறிய டீ குடிக்கும் டம்பலர் கூட எடுத்துக்கலாம். இல்லை சிறிய அரிசி படி..எதில் மைதா எடுத்து அளக்கறீங்களோ அதை கடலை மாவு எடுக்கவும் யூஸ் சேய்யனும். குக்கர் ரைஸ் கப்..எது வசதியோ உங்க குடும்ப ஆட்களுக்கு தகுந்தமாதிரி செலக்ட் பண்ணிக்கலாம்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி கவி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இத இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி ரம்ஸ்! வாழ்த்துக்கள்!

செய்தவுடனே காலியாகற டேஸ்ட்டியான ஸ்னேக்ஸ் தந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்டா;-)

Don't Worry Be Happy.

ஜெய்

ரொம்ப நன்றி டா

மிக்க நன்றி ப்ரியா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்மி....அது எப்படி இவ்வளவு பொறுமையா விதம் விதமான ஷேப் வேற செய்திருக்கீங்க. அதிலும் வட்டம் தான் ஹை லைட். அருமையான மாலை நேர ஸ்நாக்.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி.. ஆமாம் அது தான் கொஞ்சம் கடியா இருந்தது..
வட்டம் ஹனி பாட்டில் மூடியின் உபயம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்க குறிப்பு நேற்று செய்து பார்த்தேன் என் கணவருக்கு மிகவும் பிடித்தது நன்றி ரம்யா ..