குழந்தை வளர்ச்சிக்கு pediasure complen எந்த வயதில் கொடுக்க வேண்டும்?

குழந்தை வளர்ச்சிக்கு pediasure complen எந்த வயதில் கொடுக்க வேண்டும்?
எங்கள் குழந்தைக்கு 1 வருடம், 2 மாதம் ஆகின்றது, ஆனால் அவனை விட 2 மாதம் சிறியவளை விட இவன் உயரம் குறைவாக உள்ளான். (நான் நல்ல உயரம், என் மனைவியும் சற்று உயரம் தான்)
ஆண் பிள்ளையாச்சே அவன் வளர்வதற்கு வழி கூறுங்கள் சகோதரிகளே?

இங்கும் நீங்களே தானா... :) எதுவா இருந்தாலும் 2 வயதுக்கு மேல் தான் கொடுக்கனும். பொதுவா ஆண் பிள்ளைகள் சிறு வயதில் வளர்ச்சி பெண் பிள்ளையை விட குறைவாகவே இருக்கும். என் மகனும் குட்டையா தான் இருக்கான். ஆனால் பெண் பிள்ளைகள் பள்ளி பருவத்துக்கு பின் அதிகம் வளர மாட்டாங்க... ஆண் பிள்ளைகள் அந்த வயதில் தான் கடகடன்னு வளர்ந்துடுவாங்க. அதனால் உயரம் பற்றி கவலை வேண்டாம். 10வது படித்த என் உறவினர் மகனை பார்ப்பவர் எல்லாம் 6வது படிக்கிறான்னு சொல்லும்படி உயரம் இருந்தான்... திடீர்ன்னு கல்லூரி சேரும்போது அவனை பார்த்து அசந்துட்டேன்... அத்தனை உயரம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hello . En kulanthai vayathu 2 yrs . Pediasure 1 yr 6 month Anapin kandipa kodukanum solrar. Na inum koduka start panala. 2 vayasu varaikum en thaai paal thaan koduthaen . Pasum paal koduthaen. Ipa ena food kodukal nu solunga pls

உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா??? தமிழில் சொன்னா உச்சரிக்க வசதியா இருக்கும். இரண்டு வயது வரை நீங்க வேறு திட உணவே கொடுக்கலயா??? இல்ல இனி என்ன கொடுக்கலாம்னு கேட்கறீங்களா??? சொல்லுங்க ப்ளீஸ்... அப்ப தான் உணவு சொல்ல சரியா இருக்கும்.

கண்டிப்பா பீடியாஸ்யூர் 2 வயதுக்கு முன் வேண்டாம்... சில பிள்லைகளுக்கு ஒத்துக்கும், சில பிள்ளைகளுக்கு ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரெச்சனைகள் வந்துவிடும்... வயிற்றால் போவது, வாந்தி போன்றவை ஏற்படும். பீடியாஸ்யூர் மேலே உள்ள இன்ஸ்ட்ரக்‌ஷன் படிச்சாலே தெரியும்... 2வயதுக்கு மேல் தான் கொடுக்கனும்னு போட்டிருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ippodhaiku pediasure vendam Junior horlicks kuduthu parunga endha side effects irukadhu

Idhuvum kadanthu pohum....

என் மகனுக்கு 1 வயது ஆகிறது. அவனுக்கு பசும் பால் தான் கொடுகிறேன். தாய்ப்பாலும் உண்டு. அவனுக்கு பாலில் எதனைக் கலந்து கொடுக்கலாம். pediasure,complan இவை எல்லாம் 2 வயதுக்கு மேல் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் எதனுடன் கலந்து கொடுக்கலாம்?

தோழிகளே எனக்கு 3 1/2 வயது பையன் இருக்கான் அவனுக்கு வெறும் பால் மட்டும் தான் கொடுக்கிறேன் அவனுக்கு பீடியாஷுஅர் கொடுக்கலாமா அதனால் என்ன யூஸ்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்..இல்லனா வேறு என்ன கொடுக்கலாம்னும் சொல்லுங்க ..ப்ளீஸ்

அன்புடன்,
zaina.

pediasure /complan/horlicks இதை எல்லாம் கொடுத்தால் தான் குழந்தை healthyஆ வளரும் என்று யார் சொன்னது.(not in tv ads ok)வீட்டில் சமைத்த எதுனாலும் கொடுங்க.பால் குடிக்காவிட்டால் எதுனாலும் ஒன்று கலந்து கொடுங்க.(depends on their taste but not pediasure)(again and again pediasure is not a milk its a food supliment)

மேலும் சில பதிவுகள்