பனானா புட்டிங்

தேதி: August 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

வாழைப்பழம் - 3
க்ரீம் - அரை கப்
பால் - ஒரு கப்
வெனிலா புட்டிங் பேக் - 2
ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு
பிஸ்கட் தூள் - அரை கப்


 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
வெனிலா புட்டிங் பேக்கில் இருக்கும் பௌடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி, குளிர்ந்த பால் சேர்த்து எக் பீட்டரால் நன்கு கலக்கவும்.(செய்முறை பேக்கிங்கின் மேலேயே கொடுக்கப்பட்டிருக்கும்)
வாழைப்பழத்தை வட்டமான வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
பிஸ்கட்களை பொடித்து வைக்கவும்.
ஒரு கண்ணாடி பௌலில், முதலில் புட்டிங் ஒரு லேயர் பரப்பவும்.
பிறகு நறுக்கிய வாழைப்பழ வில்லைகள், சிறிது ஜாதிக்காய் பொடி, பிஸ்கட் தூள், க்ரீம் என்ற வரிசையில் லேயர்களாக பரப்பவும்.
மீதம் இருக்கும் பழம், பிஸ்கட் தூள், க்ரீம், புட்டிங் எல்லாவற்றையும் இதே வரிசையில் லேயர்களாக்கவும்.
மேலே ஒரு செர்ரிப் பழத்தை வைத்து அலங்கரிக்கவும். ப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து, பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹைய்யா சீதாலஷ்மி... சூப்பர் சூப்பர். நல்ல குட்டீஸ் ரெசிபி. பார்க்கவே அழகா இருக்குன்னு சொல்ல தான் ஆசை... ஆனா நேற்று மாதிரி பாபு அண்ணா வம்பிழுப்பாரோன்னு விட்டுடறேன்... ;(

கண்டிப்பா செய்ய போறேன். ரொம்ப நல்ல ரெசிபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா செய்யப் போகிறேன் ஆனால் இங்கு ஜாதிக்காய் கிடைகாது அதுக்கு பதிலாக என்ன சேர்க்கலாம்

சீதா மேடம் சூப்பரா இருக்கு பார்த்தாலே சாப்டனும் போல உள்ளது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சீதாம்மா பனானா புட்டிங் ரொம்ப அருமையா இருக்குங்கம்மா,வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கலக்குறீங்க சீதாம்மா

செய்து பார்த்து என் குட்டிவாலுக்கும் கொடுக்குறேன் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சீதா கண்டிப்பாக செய்துட்டு வாறேன் குழந்தைகளுக்கு பிடிச்சது வாழ்த்துக்கள்

வாவ்....புட்டிங் சூப்பர். அருமையான டெசர்ட். அழகான ப்ரெசன்டேஷன்.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாவ்.. சூப்பரான ஹெல்தி குறிப்பு. பிரசண்ட் செய்து இருக்கும் விதம் அழகு..
ரொம்ப எளிமையான குறிப்பு. வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு வனிதா,

முதல் ஆளாக வந்து பதிவிட்டதற்கு நன்றி.

ஃபோட்டோ கண்டிப்பாக நல்லாதான் இருக்கும். ஏன்னா, ஃபோட்டோ எடுத்தது மருமகள் விஜி. அங்கே இந்தக் குறிப்பு செய்தோம். அனுப்ப நேரம் இல்லை. சி.டி.யில் காப்பி செய்து கொண்டு வந்தேன். இப்பதான் நேரம் கிடைச்சது அனுப்பி வைக்க.

அன்பு ரசீனா,

அவசியம் செய்து பாருங்க. ஜாதிக்காய் இல்லன்னா பரவாயில்லை. அது வாசனைக்குதான். உங்களுக்குப் பிடித்த மாதிரி, ஏலக்காய் கூட சேர்க்கலாம்.

அன்பு குமாரி,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு ஸ்வர்ணா,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு ஆமினா,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. குழந்தைகளுக்கு இந்த டேஸ்ட் ரொம்பவும் பிடிக்கும். செய்து கொடுங்க.

அன்பு ஃபாத்திமா,

செய்து பாருங்க, குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் இது.

அன்பு லாவண்யா,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. ப்ரசண்டேஷனுக்கான பாராட்டை விஜிக்கு சொல்லிடறேன். அவங்கதான் பார்த்து, பார்த்து, ஃபோட்டோ எடுத்தாங்க.

அன்பு ரம்யா,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. விஜியின் க்ரஞ்ச் டாகோவை எல்லோரும் பாராட்டியதும், அவருக்கு ரொம்ப சந்தோஷம். இந்தக் குறிப்பை, மிகவும் ஆவலுடன், அழகாகப் படம் எடுத்துக் கொடுத்தார். அவரிடம் உங்கள் பாராட்டுக்களை அவசியம் சொல்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா அம்மா,
அருமையான டெசெர்ட்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சீதாலக்ஷ்மி அம்மா,
பனானா புட்டிங் பார்க்கவே சூப்பரா இருக்கு.படங்களும்,ப்ரசென்ட்டேஷனும் அருமை.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.விஜிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

அன்பு கவிதா,

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. ஒரு முறை செய்து பாருங்க.

அன்பு ஹர்ஷா,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. விஜிகிட்டயும் உங்க வாழ்த்துக்களை சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி