நவதானிய ஆரத்தி தட்டு

தேதி: August 24, 2011

4
Average: 3.9 (14 votes)

 

தெர்மாக்கோல் தட்டு - ஒன்று
சிடி - ஒன்று
சிறிய வளையல் - 8
நவதானியம்
பெவிக்கால்
ஸ்கெட்ச்
வார்னிஷ்

 

கோதுமை, கேழ்வரகு, சோளம், காராமணி, கொள்ளு, கொண்டைக்கடலை, கம்பு, சோயா, பச்சைபயிறு ஒன்பது தானியத்தில் கேழ்வரகு, சோயாவைதவிர மற்றவற்றை ஒரு மேசைக்கரண்டி அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். தெர்மாக்கோல் தட்டின் நடுவில் பெவிக்கால் தடவி சிடியை ஒட்டி வைக்கவும்.
சிடியின் நடுவில் ஒரு வளையலை ஒட்டி விட்டு மற்றவற்றை தட்டின் ஒரங்களில் இடைவெளிவிட்டு ஒட்டவும்.
நடு வளையலை சுற்றி ஸ்கெட்ச்சால் ஏழு இதழ்கள் வரையவும். அதன் இதழ் வடிவம் மாறாமல் பெவிக்கால் வைத்து சோயாவை வரிசையாக ஒட்டிக் கொண்டு வரவும். இதழின் உள்ளே பெவிக்கால் தடவி கேழ்வரகை நிரப்பவும்.
அடுத்து படத்தில் உள்ளது போல் சோயாவை வளையல் இடைவெளியிலும், தட்டின் ஓரத்திலும் ஒட்டிக் வைக்கவும்.
தட்டின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் சோயாவின் உள்ளே மீண்டும் கேழ்வரகை நிரப்பவும். வளையில் இடைவெளியை சோயாவால் நிரப்பவும்.
ஒவ்வொரு வளையலின் உள்ளேயும் பெவிக்கால் தடவி மீதியுள்ள தானியங்களை ஒட்டி முடிக்கவும்.
நவதானியங்கள் ஒட்டிமுடித்ததும் வார்னிஷ் அடிக்கவும்.(வண்டுகள் அரிக்காமல் இருப்பதற்கு) நடுவில் மெழுகு அகலை ஏற்றி வைத்து நவதானிய தட்டால் ஆரத்தி எடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரா இருக்கு டீம். ;)

‍- இமா க்றிஸ்

சூப்பரா இருக்கு. அழகோ அழகு!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

loooks so beautiful...எந்த soyaனு சொல்லுஙக pls...

நட்புடன்,
திவ்யா

Be happy, make others happy

ரொம்ப அழகாக இருக்கு.

சூப்பர்வ்பா அழகா இருக்கு செய்யவும் ஈஸியா இருக்கும் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அழகான கைவண்ணம். இருந்தாலும் உங்களுக்கு ரொம்பவே பொறுமை. அதுவும் வழுக்கும் சீடியில் ஒவ்வொன்றாக சோயாவை ஓட்ட ரொம்பவே பொறுமை வேணும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாராட்டிய அனைவருக்கும் எங்களது நன்றிகள். திவ்யா இதில் வெள்ளைநிற சோயாபீன்ஸ் ஒட்டி செய்து உள்ளோம்.

பொறுமையாக செய்து இருக்கீங்க..மிகவும் அழகு!

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

hi, arusuvai team it is a nice creation and nice decorative plate. i like it very much .
BOTH OUR THOUGHTS AND METHODS MUST BE GOOD AND NOBLE.