சின்ன சந்தேகம்..

கர்ப்பமாக இருக்கும் போது, கருமுட்டை வெளி வருமா? இந்த மாதம் எனக்கு கருமுட்டை வருவதை உணர முடியவில்லை.. அதனால் நான் கர்ப்பமாக இருப்பதாக எடுத்து கொல்லலாமா? சரியான விளக்கம் யாராவது சொல்லுங்கள் ப்ளீஸ்..

கர்ப்பமாக இருக்கும் போது கருமுட்டை உருவாகாது ,மாதா மாதம் பீரியட் வந்தா தான் கருமுட்டை வரும் ...மேலும் இர்ரெகுலர் பீரியட் இருந்து தள்ளி போயிருந்தாலும் கருமுட்டை வராது , தோழி நீங்கள் கர்ப்பமா என அறிய சிறுநீர் பரிசோதனை செய்து பாருங்கள் ,ரிசல்ட் நெகடிவ் வந்தால் சத்து குறைவால் பீரியட் தள்ளி போயிருக்கிறது என்று அர்த்தம் ,மேலும் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை அணுகி தெளிவான விளக்கம் பெறுங்கள் ,சரியா தோழி ..விரைவில் நல்லது நடக்க வாழ்த்துக்கள் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மிக்க நன்றி தோழி, எனக்கு எப்போதும் regular periods தான் இந்த மாதம் மட்டும் தான், கருமுட்டை வருவதை உணர முடியவில்லை.. எனக்கு போன month 10thல periods ஆச்சு so இந்த month எப்போ கருமுட்டை வரும்? எப்பொதும் 15th day வரும், இப்போ வரல..

நான் 5 வருடமாக குழந்தைக்காக முயற்சி செய்கிறேன் இன்னும் குழந்தையில்லை.மிகவும் மனக்கஷ்டமாக இருக்கிறது..குழந்தைக்காக முயற்சி செய்யும்போது நடக்கலாமா?நான் தினமும் ஒன்றரை மணித்தியாலங்கள் இப்பொழுது நடக்கிறேன் இது சரியா? கரு தங்கினது தெரியாமலிருந்தால் நடந்தால் கலைந்து விடுமோ என பயமாக இருக்கிறது..

Sister en friend kum marriage aagi 3 years baby kaga try pandranga ...ipo infection iruku so tb treatment edunga sollitanga ...ivlo naal pregnant aagatha en friend antha maasam conceive aagitanga.. But apo baby venamnu doctor sollitanga.. 3 pine apple ellu , papaya nu ellam saptanga kalayave illa doctor aparam tablet koduthu solve panitanga..... Nadantha bayam venam friend neenga neengala irunga excess tension illama romba strain pani velai seiyala healthya sapidunga athu pothum..

Sister en friend kum marriage aagi 3 years baby kaga try pandranga ...ipo infection iruku so tb treatment edunga sollitanga ...ivlo naal pregnant aagatha en friend antha maasam conceive aagitanga.. But apo baby venamnu doctor sollitanga.. 3 pine apple ellu , papaya nu ellam saptanga kalayave illa doctor aparam tablet koduthu solve panitanga..... Nadantha bayam venam friend neenga neengala irunga excess tension illama romba strain pani velai seiyala healthya sapidunga athu pothum..

குழந்தை இல்லாதது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. மனசிலும் ஒரே குழப்பம் நடக்கலாமா அல்லது ரெஸ்ட் எடுக்க வேண்டுமா
உறவினர்கள் சிலர் போன் பண்ணி அவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது இவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என கூரும்போது உன்னால் இன்னும் முடியவில்லையா என்பது மாதிரி இருக்கு.தேவையில்லாத
அவர்களின் அட்வைஸ் மனதிற்கு வேதனையை தருகிறது.
எனக்கு ஒரு ஆறு மாதம் யாரிடமும் பேசாமால் அமைதியா இருந்ததால் கரு நிற்கும் என தோன்றுகிறது
எப்படி தொலைபசி அழைப்புக்களை அவொய்ட் பண்ணுவது என புரியவில்லை இது என்ன வாழ்க்கை என
தோணுது .நீங்கள் ஆலோசனை கூ றினால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் thanks friends

//நடக்கலாமா அல்லது ரெஸ்ட் எடுக்க வேண்டுமா// இப்போதே நடையை நிறுத்தி ஓய்வு என்பது தேவையில்லாத விடயம். எடை கூடலாம் & இது ஓய்வு என்பதாக அல்லாமல் நீங்கள் மனதை மேலும் வருத்திக் கொள்ளும் நேரமாக அமைந்துவிடவும் கூடும். எப்பொழுதும் ஏதாவது வேலை வைத்துக் கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.

//குழந்தை பிறந்துவிட்டது என கூரும்போது உன்னால் இன்னும் முடியவில்லையா என்பது மாதிரி இருக்கு.// மாதிரி தானே! அப்படியானால் அது உங்கள் மனது சொல்வது மட்டும்தான். அப்படி நீங்கள் எடுத்துக் கொள்ளவே தேவையில்லை. சில சமயங்கள் அவர்களுக்கும் சங்கடமானவை. சொல்லாவிட்டால், 'குழந்தை இல்லாத காரணத்தால் தான் எனக்குச் சொல்லவில்லை,' என்று உங்கள் மனது சொல்லலாம் இல்லையா! அவர்கள் பாவம், சொன்னாலும் சிக்கல், சொல்லாவிட்டாலும் சிக்கல். நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இனிமேல். 'ஆஹா! சந்தோஷம்,' என்கிறதாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் ஒரு நல்ல நாள் நிச்சயம் வரும்.

//தேவையில்லாத அவர்களின் அட்வைஸ் மனதிற்கு வேதனையை தருகிறது.// புரிகிறது. நீங்கள் ஒரு காதால் நுழைவதை மற்றக் காதால் வெளியே விடப் பழகிக் கொள்ளுங்கள். மனதில் போட வேண்டாம். முடிந்தால் சிரித்த முகத்தோடு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு ஃபோனை வைக்கலாம். நேரிலானால்... தைரியமாக பேசுவர் முகத்தைப் பார்த்து, சிரித்த முகத்தோடு, மென்மையான குரலில் 'இந்தத் தலைப்பு எனக்குக் கஷ்டமாக இருக்கு. வேறு ஏதாவது பேசலாமா?' என்று சொல்லிப் பாருங்கள். :-) இது வேலை செய்யும். என்ன, ஒவ்வொருவருக்குமாகச் சொல்ல வேண்டி இருக்கும். சொல்லி முடிந்ததும் சந்தோஷமாக நீங்களே இன்னொரு தலைப்பில் பேச ஆரம்பித்துவிட வேண்டும். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள். இதை நான் 10 வருடம் முன்பாக ஒருவருக்குச் செய்தேன். பிறகு அந்தத் தலைப்பு இதுவரை அவர் வாயிலிருந்து வரவில்லை. கவனமாக இருக்கிறார். உண்மையில்... அவரது தவறு புரிந்திருக்க வேண்டும். நன்றாகப் பேசுகிறார் ஆனால் என்னோடு எதைப் பேசுவதானாலும் கவனமாக இருக்கிறார். ;-)

//ஒரு ஆறு மாதம் யாரிடமும் பேசாமால் அமைதியா இருந்ததால் கரு நிற்கும் என தோன்றுகிறது// ம்... இப்படி நீங்கள் நினைப்பது கூட நல்ல விடயம்தான். உங்களால் வெறுமனே துக்கத்தில் புதைந்து போகாமல் தீர்வு பற்றிச் சிந்திக்க முடிகிறது. நல்லது. இடம் மாறலாம். கூடவே கணவரும் வந்தாக வேண்டுமே! வேலையில் இடமாற்றம் சாத்தியப்படுமா என்று பாருங்கள்.

//எப்படி தொலைபசி அழைப்புக்களை அவொய்ட் பண்ணுவது என புரியவில்லை//
1. ஃபோனில் caller ID இருந்தால் சுலபமாக தேவையான அழைப்புகளை மட்டும் எடுக்கலாம். அதற்கான மெஷின் தனியாக வாங்கிப் பொருத்தலாம். சின்னதாக இருக்கும். ஆனால் தொலைத் தொடர்பு ஆட்களோடு பேசி செட் பண்ண வேண்டி இருக்கும். (இங்கு அப்படித்தான் நடக்கிறது.) சிலர் சில காரணங்களுக்காக இலக்கங்கள் தெரிய வராதது போல டெலிகொம் ஆட்களோடு பேசி செட் பண்ணி இருக்கிறார்கள். அவர்களது அழைப்புகள் எல்லாம் 'ப்ரைவட் காலர்' என்று வருகிறது.
2. வாய்ஸ் மெசேஜ் இருந்தால் அதைப் பார்த்து விட்டு, பிரச்சினை இல்லாதவர்கள் என்றால், திரும்ப நீங்களாக எடுத்துப் பேசலாம். முக்கியமாக இருந்தால் நிச்சயம் மெசேஜ் வைப்பார்கள் இல்லையா!
3. நீங்கள் எடுக்காமல் உங்கள் கணவரைப் பதில் சொல்ல விடலாம். பிரச்சினை இல்லாதவர்களானால் நீங்கள் வாங்கிப் பேசலாம். அல்லாவிட்டால் அவரே பேசி முடித்து வைக்கட்டும். கேட்டால் எங்காவது போயிருப்பதாகச் சொல்லலாம். அவர்கள் நம்பாவிட்டால்... நான்காவது தடவை காரணத்தைப் புரிந்துகொள்வார்கள்.

//இது என்ன வாழ்க்கை என தோணுது.// இந்த மாதிரி மனம் தளரக் கூடாது கண்ணா. தேவையற்ற பேச்சுகளைக் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். அவை எதுவும் உங்களைப் பாதிக்க விடக் கூடாது நீங்க. தைரியமா இருங்க.

‍- இமா க்றிஸ்

நானும் உங்களை இமா அம்மா என்றே அழைக்கின்றேன் .

நீங்கள் கூறிய அறிவுரைகளாலும் ஆறுதலான சொற்களாலும் மனசு சுகமாகி இருக்கு .

''உங்களால் வெறுமனே துக்கத்தில் புதைந்து போகாமல் தீர்வு பற்றிச் சிந்திக்க முடிகிறது. நல்லது. இடம் மாறலாம். கூடவே கணவரும் வந்தாக வேண்டுமே! வேலையில் இடமாற்றம் சாத்தியப்படுமா என்று பாருங்கள்.''

இமா அம்மா நானும் என் கணவரும் வெளியூரில்தான் வசிக்கிறோம் .இந்த தொலைபேசியால்தான் எனக்கு பிரச்சினை .சில உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அழைப்புகளை எடுத்தால் மன வேதனைதான் மிஞ்சுது.
இப்ப நீங்கள் கூறிய அறிவுரைகளையும் ஐடியாக்களையும் பின்பற்றுவேன்.தைரியமாக இருப்பேன்

ரொம்ப நன்றி இமா அம்மா

மேலும் சில பதிவுகள்