களைப்பு ஏன் வருது ?

ஹாய் எல்லாருக்கும் வணக்கம் ..என் கணவர் தினமும் ஆபீஸ் போய்ட்டு வந்ததும் வழக்கம் போல டீ குடிச்சு அப்புறம் வெளில கிளம்புவம் .. இருந்தாலும் அடிக்கடி களைப்பா பீல் பண்ணுறதா சொல்லுறாரு ... ஆபீஸ் ல கூட களைப்பா இருக்கிறதா சொல்லுறாரு(Tired) ... எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல .. அவர் ரொம்ப நேரம் கம்ப்யூட்டர் முன்னால இருந்து வேலை செய்யிறார் .. அவருக்கு என்ன சாப்பிட குடிக்க கொடுக்கலாம் அல்லது இதுக்கு என்ன தீர்வுன்னு சொல்லுங்க தோழிகளே ?( அவரோட வயசு 28 தான் )

hemoglobin check pani parungal,kuraivaga irundhale ipadi irukalam

ப்ரஷர் சுகர்
டெஸ்ட் பாருங்களேன் ஏதாவது அவுட்டோர் கேம் விளையாடசொல்லவும்

ஜனனி கூறுதை போல்தான் நானும் உணர்கிறேன், நானும் ரொம்ப நேரம் கம்ப்யூட்டர் முன்னால இருந்து வேலை செய்கிறேன். வயசு 27 தான்.
ப்ரஷர் சுகர் டெஸ்ட் செய்ததில் நார்மல் தான்.
களைப்பை தவிர்க்க எந்தமாதிரியான உணவை எடுக்க வேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும்.

பதிவு போட்ட எல்லாருக்கும் நன்றி .. அவருக்கும் எல்லாமே நோர்மல் தான் ... என்னென்ன உணவு கொடுக்கலாம் கொடுக்க கூடாதுன்னு சொல்லுங்க .. ப்ளீஸ் ...

ஹாய் ஜனனி சிவா & சங்கர்....... எனது கணவரும் நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்னிலையில் உட்கார்ந்திருக்கும் வேலை தான். அவருக்கும் இந்த டயர்ட்னஸ் பிரச்சனை அதிகமாக இருந்தது. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் மல்ட்டிவிட்டமின் மாத்திரை, காலையில் கொஞ்சம் உடர்பயிர்ச்சி(கண், வயிறு, கழுத்து பகுதிகளுக்கான உடற்பயிற்சி), தினமும் மாலை சிறிது வாக்கிங் போன்றவைகளை தவறாமல் கஷ்ட்டப்பட்டு செய்யாமல் இஷ்ட்டப்பட்டு செய்துவரச்சொன்னார். தற்ப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. உட்கார்ந்தே இருப்பதால் தொப்பை, உடல் சூடு, தலைவை, கண் எரிச்சல், பித்தம் போன்ற பிரச்சனைகள் அதிகம் அவ்வப்போது ஏற்படும். வாரம் இருமுறை இஞ்சி சாறு கொடுக்கலாம், அல்லது காலை மாலை இஞ்சி டீ, சுக்கு காபி குடிக்கலாம். சுறுசுறுப்பு தரும். மாலை விதவிதமான பழங்கள், மூன்று அ நான்கு முந்திரி, பாதாம் பருப்புகள் சாப்பிடலாம்,. அதிகம் சாப்பிட கூடாது. பணி முடிந்து வந்து இரவு உறங்கும் முன் நன்கு வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து விட்டு தூங்களாம். கண்களுக்கு மேல் ஏதாவது (உருளை கிழங்கு, வெள்ளரி போன்றவைகள்) வைத்து தூங்க செல்லலாம். ஏனென்றால் கண் சூடு குறையும்.

கடந்த 4 மாதமாக என் கணவர் மேற்கண்ட முறைகளை தவறாமல் பின்பற்றி வருகிறார். இரவு நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூகம் இருக்க வேண்டும். நல்ல முன்னேற்றமான பலன் தெரிகின்றது.

நீங்களும் முயறித்து பாருங்கள். நம் அறுசுவை தோழிகளும் வேற எனா சொல்றாங்க என்று நானும் உங்களோடு சேர்ந்து ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஆனந்த பிரியா சொன்னது ரொம்ப சரி... இந்த பணியில் கண் சோர்வு தான் உடல் சோர்ந்து போக முதல் காரணம். நானும் இது போல் பணியில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன்... நீண்ட நேரம் ஒரே பொஷிஷனில் இருக்க கூடாது... 1 மணி நேர, அல்லது 2 மணி நேரத்துக்கு பின் கொஞ்சம் ரெஃப்ரெஷ்மண்ட் தேவை. எழுந்து ஒரு சின்ன நடை... அல்லது கேண்டீன் போய் வர சொல்லுங்க. ஃப்ரெஷ்’அ ஃபீல் பண்ணுவாங்க. எவ்வளவு வேலை இருந்தாலும் இரவு தூக்கம் கெடாம பார்த்துக்கங்க. ரொம்ப ஹெவியான உணவு வேண்டாம். ஆனா சத்தான சாலட் போன்ற உணவை உணவில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சேருங்கள். அடிக்கடி சிஸ்டம் முன்னாடி இருந்தாலும் கொஞ்சம் ஒரு 2 நிமிடம் கண்களை மூடி ஓய்வு கொடுக்க சொல்லுங்க. மெடிடேஷன், யோக போன்றவை இந்த பணியில் இருப்பவர்களுக்கு ரொம்பவே உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகள் பிரியா மற்றும் வனிதா ஆலோசனைக்கு நன்றிகள்.
பிரியா நீங்கள் சொன்ன மாதிரி, எனக்கு தலைவலிதான் பெரும் பிரச்சினை. நான் எல்லா டாக்டரையும் பார்த்துட்டேன். CT ஸ்கேன் முதல் எல்லா tetsum எடுத்துட்டேன், எந்த பாதிப்பும் இல்லை என்றுதான் கூறுகிறார்கள். டேபிலேட் தருகிறார்கள், இரத்தம் டெஸ்ட் செய்ததில் பித்தம் சற்று அதிகமாக இருந்தது அதையும் மருந்து சாப்பிட்டு குறைத்து விட்டேன். எல்லாம் எடுத்தும் தலைவலி குறையவே இல்லை. கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிர்க்க சொல்கிறார்கள், என் பணியே அதுதான் எப்படி நிறுத்த முடியும். அடிக்கடி என்னால் தாங்கமுடியாத அளவுக்கு தலைவலி வருது. ஒரு சாரிடன் மாத்திரை எடுத்தால் குறைகிறது (சைட் எபக்டை நினைத்தா பயமாக உள்ளது), நேற்றுகூட இதே பிரச்சினைதான், இன்று மாலைதான் இன்றைய பிரச்சினை தெரியும்.
நீங்கள் கூறிய ஆலோசனையையும் முயற்சி செய்கிறேன். தலைவலி குறைந்தால் சந்தோசம்.

அன்புத்தோழர் சங்கர்.......... எனது கணவருக்கும் அதே தீராத தலைவலி பிரச்சனைதான் தொடர்ந்தது. கண்ணில் பவர் கூடவோ குறைந்தாலோ தலைவலி வரும். சென்றமாதம் கண் செக்கப் செய்து கண்ணாடி மாற்றினார். காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலியோடுதான் எழுந்திருப்பார். சாயங்காலமும் தலைவலியோடு தான் வருவார். பித்தம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இஞ்சி சாறு சாப்பிட்டு சரி செய்தோம். அவரும் அடிக்கடி தலைவலி மாத்திரை எடுத்துக்கொள்வார். மேலும் அவருக்கு சிறுநீரகக்கல் பிரச்சனையும் இருப்பதால் எங்களின் திருமணத்திற்குப்பின் அவர் சாப்பிடும் மாத்திரையின் அளவை அடியோடு குறைத்து விட்டேன். எதற்க்கெடுத்தாலும் அடிக்கடி அதிகமாக மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரகம் பாதித்துவிடும். எனவே கண் செக்கப் செய்யுங்கள். பித்தத்திற்க்கும் மாத்திரை சாப்பிடாமல் இஞ்சி அதிகமாக தினசரி உணவில் சேருங்கள். அதற்க்கு மேலும் கண்ணுக்கு உண்டான எக்ஸசைஸ் செய்யுங்கள். கண்களை சுற்றி எண்ணெய்யோ அல்லது மஸாஜ்கிரீம் அப்ளை செய்து சர்க்குலர் டைரக்க்ஷனில் மஸாஜ் செய்யுங்கள். இவையெல்லாம் நன்கு பலன் தந்தது. காலை மாலை நன்கு காற்றாட வெளியில் சென்று வாக்கிங் செய்து ரிலாக்ஸ் செய்யுங்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ரொம்ப நன்றி
பதிவு போட்ட எல்லாருக்கும் ... நான் நீங்க எல்லோரும் சொன்னவற்றை இனி செய்கிறேன் ....... thanks again ...

Dear Janani,
Ask him 2 mingle with friends & relatives. It gives mental relaxation. When he is mentally relaxed automatically he feels energitic. He may feel tired because of continous work preasure. Because I am also working women. This is my experience.

மேலும் சில பதிவுகள்