தயவு செய்து பதில் போடுங்க பீளிஸ்

எனக்கு ஒரு சந்தேகம், நான் 16.07.2011 அன்று மாதவிலக்கு ஆனேன். இன்று வரை மாதவிலக்கு வரவில்லை. போன தடவை கூட 50 நாள் கழித்து தான் தலை குளித்தேன் 28.08.2011வீட்டில் பிரகன்சி கிட் வாங்கி பரிசோதனை செய்தேன். நெகடிவ் தான் வந்தது.ஆனால் அடிக்கடி பசி எடுக்கிறது. வாந்தி ,மயக்கம் எதும் கிடையாது, எதனால் இப்படி இருக்கிறது.

ungala maathiri nakum ethae prob tha.period pinthi varatha vechi etha conform panna mudiyathu unguku mrg aahi yethana varusham aahuthu unga hus unga koodatha erukara ella gulf poiruvara.ungluku yaaravatu msg pannaathu yenakum usefula erukum nu nenaikiraen.

எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகிறது. 10 மாத குழந்தை உள்ளது. கணவர் என்னுடன் தான் இருக்கிறார்.தயவு செய்து யாரவது பதில் போடுங்க

குழந்தைக்கு பத்து மாதம் ஆகிறது என்றால் பால் குடுக்குறிங்களா?அப்பபடி என்றால் அதனால் தள்ளி போகும். ஆனால் கணவரை பக்கத்தில் மட்டும் சேர்க்கதிங்க அப்படி சேரும்போது ஜாக்கரதையா இருங்க .

ஏன் என்றால் தாய்பால் குடுக்கறதால தள்ளி போகுது என்று என் தோழி ஒருத்தி ஐந்து மாதம் கரு உள்ளே உள்ளதை பிறகுதான் கவனித்தாள் .இன்னொன்னொன்று ரத்தம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம் இருக்கும் .

கவுசல்யா, நான் வேலைக்கு போகிறேன். குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். (டாக்டர் ஆலோசனை படி).

என்ன மல்லி?இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க?சரி எதுக்கும் கேர்புல்லா இருங்க!!45வது நாள் ஒரு தடவை கிட் வாங்கி டெஸ்ட் பண்ணுங்க அப்படியும் ஒன்னும் இல்லைன்னா டாக்டர்கிட்ட போங்க,பாஸிட்டிவ்ன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கலாம்?இந்த மாதிரி எனக்கும் ஆகியிருக்கு,சூர்யாவுக்கு அப்புறம்,இதே மாதிரி 12மாசத்துல,கவலைப்படாதீங்க,அப்போதான் எனக்கு சிஸ்ட் இருந்ததாலதான் இந்த பிராப்ளம்னு கண்டுபிடிச்சாங்க,ஏதும் காண்ட்ரசெப்டிவ் யூஸ் பண்றீங்களா?அந்த ஆப்ஷன் யோசிங்க.

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி ரொம்ப நன்றி பா. எனக்கு சிசேரியன் பண்ணும் போது டாக்டர் இரத்தம் இல்லை என்றார். சில பேர் ஹார்மோன் பிரச்சினை எங்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மேலும் சில பதிவுகள்