கடல்பாசி என்றால் என்ன... எங்கே கிடைக்கும்

கடல் பாசி கடலில் இருந்து எடுக்கின்றார்களா? அதற்கு இங்கிலீஸ் பெயர் என்ன? கல் பாசி , கடல் பாசி இரண்டு ஒன்றா? இது சைவமா? அசைவமா? இதை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல் கிடையாதா? நிறைய கேள்விகள் உள்ளது. தயவுசெய்து தெரிந்தவர்கள் பதில் சொல்லவும். தமிழில் டைப் செய்ய கஷ்டமாக இருக்கிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இதே கேள்வியை மின்னஞ்சலில் கேட்டிருந்த ஷானு அவர்களுக்கும் சேர்த்து இங்கு பதில் அளிக்கின்றேன்.

கடல் பாசி என்பது கடலில் இருந்து கிடைக்கும் பாசி அல்ல. அதன் தோற்றத்தை வைத்து அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். இது ஒரு வித செடியின் தண்டுப் பகுதியில் இருந்து எடுக்கப்படும், நைலான் போன்ற நார்ப்பகுதி. இதை China grass என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

Super markets அனைத்திலும் கிடைக்கும் என்று எண்ணுகின்றேன். China grass என்று பாக்கெட்டில் போட்டு விற்கின்றார்கள். அது தூளாக இருக்கும். எல்லாம் ஒன்றுதான். இஸ்லாமியர்களின் இல்லங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ஜெல்லி வகை இனிப்புகள் இதில் இருந்துதான் செய்கின்றனர். இதனுடன் அசைவ பொருட்கள் ஏதேனும் சேர்த்து உணவு தயாரிக்காதவரை இது கண்டிப்பாய் சைவம்தான். அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் இல்லை. நன்மை தீமைகள் குறித்து ஆராய்ந்து பிறகு எழுதுகின்றேன்.

கல்பாசி என்பது வேறு. அது காய்ந்த சருகுகள் போன்று இருக்கும். வாசனைக்காக பயன்படுத்துவது.

இதுதான் கடல்பாசியா.. முதல் முறையாகப் பார்க்கின்றேன். போட்டோ வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

anaivarukum vanakkam.thamili arattai adikka aasai than. annal tamil typing migavum kastamaga ullathu. eluthuthavi pettil type seithu karuthu paguthil paste seithal actor vivek style-l gellabiya thiruppi pota mathiri than irruku please yaravathu idea sollungaleen

மேலும் சில பதிவுகள்