தேதி: August 31, 2011
தெர்மாக்கோல் தட்டு
அரச இலை
பேப்பரிக் பெயிண்ட் - வெள்ளை, பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
பெயிண்ட் ப்ரஷ்
கோல்டுநிற இலை மற்றும் சம்கி
லைட், டார்க் க்ரீன் மற்றும் வெள்ளைநிற கிலிட்டர்ஸ்
பச்சைநிற ஸ்டோன்
டபுள் சைடு ஃபோம் டேப் (Double sided foam tape)
அரச இலைகளை படத்தில் உள்ள வடிவத்தில் பெரியது, சிறிய, நடுத்தர என்ற அளவுகளில் எடுத்துக் கொள்ளவும். இலைகளை ஒரு புத்தகத்தில் வைத்து ஒருநாள் முழுவதும் பதப்படுத்தி வைக்கவும்.

தெர்மாக்கோல் தட்டு முழுவதும் ஆரஞ்சுநிறத்தை பெயிண்ட் செய்து காயவிடவும்.

பின்னர் அந்த இலைகளை படத்தில் உள்ள அமைப்பில் முதலில் பெவிக்கால் தடவி ஒட்டவும்.

அடுத்து காது, கை, கால் ஆகியவற்றிற்கான இலைகளை இதுப்போல் ஒட்டி வைக்கவும்.

இலைப்பிள்ளையாரின் வயிற்று பகுதிக்கு மட்டும் லைட் க்ரீன் பெயிண்ட் செய்யவும். மற்ற எல்லா பகுதிக்கும் டார்க் க்ரீன் பெயிண்ட் அடிக்கவும்.

பிள்ளையாருக்கு கண்கள் வரையவும். மஞ்சள், சிவப்பு பேப்பரிக் பெயிண்டால் பொட்டு வைக்கவும். தும்பிக்கை மேல் மஞ்சள் நிறத்தில் லேசாக பெயிண்ட் செய்துவிடவும். இலைகளின் ஓரத்தில் க்ரீன்நிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுக்கவும்.

தும்பிக்கையில் கொழுக்கட்டை பிடித்து இருப்பதுபோல் வெள்ளைநிற கிலிட்டர்ஸால் நான்கைந்து புள்ளிகள் வைக்கவும். கோல்டுநிற சம்கியை கொண்டு க்ரீடம் போல் ஒட்டவும்.

தட்டின் கீழ் சிறிது இடைவெளிவிட்டு ஓரத்தில் கோல்டுநிற இலை, பச்சைநிற ஸ்டோன் இரண்டையும் மாறி மாறி ஒட்டி முடிக்கவும். வெள்ளைநிற பெயிண்டால் வயிற்றுப்பகுதியில் பூணூல் போல் மெல்லிய கோடு வரைந்துவிடவும். தெர்மாக்கோல் தட்டில் செய்த அரச இலைப்பிள்ளையார் தயார். தட்டின் பின்பக்கம் ஃபோம் டேப்பை சதுரமாக நறுக்கி ஒட்டி வால் ஹேங்கிங்காக பயன்படுத்தவும்.

Comments
பிள்ளையார்
ஐடியா நல்லா இருக்கு டீம்.
- இமா க்றிஸ்
எப்பிடில்லாம்
எப்பிடில்லாம் யோசிக்கிறீங்க!வித்தியாசமா இருக்கு அழகா இருக்கு.நேர்த்தியா செஞ்சு காண்பிச்சிருக்கிங்க! வித்தியாசமான ஐடியா!! பாராட்டுக்கள்!
அன்புடன்
Vasu
அரச இலை பிள்ளையார்
அன்பு அறுசுவை டீம்,
சூப்பராக இருக்கு. விழாக் காலத்துக்கான பொருத்தமான வேலைப்பாடு.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி
டீம்ம்ம்
ஓஹோ! விநாயகசதுர்த்தி ஸ்பெஷலா? அழகா இருக்கு தட்டு.
அறுசுவை டீம்,
அறுசுவை டீம்,
அழகு பிள்ளையார்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
very nice
Hi this is very good idea and so nice to see, can you give some tips for the navratri golu, for making park zoo in my home it will be very helpful and useful also
ரேவதி, பத்மா
சூப்பர் ஐடியா. இது போல் நான் செய்ய வேண்டும் என பல நாள் நினைத்திருந்தேன். அழகா செய்திருக்கீங்க. நீங்க கோவிக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா... இலையை 1 நாள் பதப்படுத்தினா போதாது. அரச இலை விரைவில் பழுதாகும். 1 வாரமாவது இருக்க வேணும் இலை. அதுவும் வெவேறு பக்கங்களில் மாற்றி மாற்றி வைத்து ஈரம் போக பதப்படுத்தனும். இது எனக்கு தெரிஞ்சது... தப்பா சரியான்னு நீங்க தான் சொல்லனும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா