இரண்டவது பிரசவ அனுபவம் .......

காலை வணக்கம் தோழிகளே ,
நான் உங்களின் பிரசவம் அனுபவம் பற்றி படித்தான் .அதில் பலர் நல்ல விருவிருப்பாகவும் நகைசுவையாகவும் எழுதிருந்தார்கள் .அதைபோல் இரண்டவது பிரசவ அனுபவம் பற்றியும் எழுதலாமே.முதல் முறை என்பதால் நம்மில் பலர் தங்களின் அம்மா இல்லை மாமியார் துனைகொண்டுதம் இருக்கிறோம் , மேலும் முதல் முறை என்பதால் நல்ல விழுந்து விழுந்து கவனிப்பார்கள் . ரெண்டாவது முறை நாம் நம்மையும் நம் முதல் குழந்தையும் கவனிகவண்டிய கட்டாயம் . எதைல்லாம் எப்படி சமாளிதிர்கள் ..

முன்னெல்லாம் நினச்சிருக்கேன் எப்படி தான் எட்டி பிள்ளையெல்லாம் பெத்து வளத்தாங்களோ என்று..இப்பொழுது புரிகிறது அது ரொம்ப ஈசி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு வளப்பதை விட.
ஒரு குழந்தை என்றால் அதனை பற்றிய கவலைகளும் சிந்தனைகளும் எதிர்காலமும் எல்லாமாக ரொம்ப வருத்தப்படுவோம்..அதுகளுக்கு ஒண்ணு என்றால் பதறுவோம்..ஆனால் இரண்டாவது வந்ததும் பிறந்தும் பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை கொஞ்சம் கஷ்டம்..பிறகு இருவரும் ஒன்று கூடி விட்டால் நமக்கு கொஞ்சம் சுலபம்..பிறகு ஒரு இரண்டு மூன்று வயதில் அவங்க பாட்ட்டுக்கு அவங்களுக்கும் விளையாடிக்குவாங்க..ஒண்ணு என்றால் நம் முகத்தை பார்த்து போரடித்து நச்சு நச்சு என்று நச்சிக்கொண்டிருக்கும்..அதற்கு எப்படி செய்தாலும் திருதி படாது.
இரண்டாவது பிரசவத்துக்கு நமக்கு நாமே எல்லாம் தயார்படுத்த வேண்டும்..நல்லபடியாக திட்டமிட வேண்டும் எப்போது எப்படி என்று..கொஞ்சம் இடைவெளி இருப்பது நல்லது அட்லீஸ்ட் ஒரு 2 வயதாவது..மூன்று வயது இடைவெளி ரொம்ப நல்லது..
என் மகளுக்கு எதாவது வந்தால் சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன் அதுவே ஓடிக் கொண்டிருக்கும்..ஆனால் இப்ப எனக்கு இரண்டு யாருக்கு எது வந்தாலும் நான் என் வேலையை கவனிப்பேன் அவர்களையும் கவனிப்பேன் அந்தளவுக்கு மனசு தைரியப்பட்டுவிட்டது
மூத்த குழந்தையை முன்னிருந்தே ஓரளவு அம்மா செல்லமாக வளக்காமல் ஓரளவு தகம்மு தாமே சில குட்டி வேலைகள் செய்ய பழக்கலாம்..நான் சொல்வது பாத்திரம் கழுவ வீடு பெருக்கவல்ல..சாப்ப்பிட,வேண்டும் என்பதை கேட்க எடுக்க..துடைத்த டிஷ்யூ மற்ற்றும் இதர குப்பைகளை அந்தந்த இடத்தில் போட..எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க இப்படி.
சின்னதுக்கு தான் விவரமில்லையே..முதல் சில மாதங்களுக்கு பெரிய குழந்தையை கொஞ்சலாம் அவர்களுக்கு புது ஆள் வந்து தம்மை தனிமைப்படுத்தியதாக தோன்றாது..இரண்டாவது பிரசவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சிலர் பரவாயில்லை என்பார்கள்..சிலர் அதை விட சிரமம் என்பார்கள்.
ஆனால் முதல் பிரசவத்தை விட இரண்டாவதில் தெம்பு அதிகமாக இருக்கும்...வேற வழியில்லையே;-)..மற்றபடி நம்மை கவனிக்க ஆள் இல்லையே என்று கவலை கொள்ளாமலிருப்பது நல்லது..நமக்கு நாமே முடியும் எந்த வேலையும் செய்யலாம்...சமைக்க வீட்டு வேலைக்கு மட்டும் ஆள் கிடைத்தால் சமாளிப்பது எளிது..ஒரு நாலு வாரம் தான் பிறகு பழையது போல நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருக்கலாம்..
இரண்டாவதை ரொம்ப ஓவெராக கவனிக்காமல் கொஞ்சாமல் பெரிய குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்..அவர்களிடம் சொல்லி சின்ன குழந்தையை கொஞ்ச செய்யலாம்..ஒரு பாசம் உண்டாக்கலாம்..இப்ப தான் புரியுது ஒரு நாலு குழந்தைகள் இருந்தால் சமாளிப்பது ஈசி;-D

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க;-)) நாலு குழந்தை இருந்தா ஈசிதான் முதல் குழந்தையே மத்த மூணு குழந்தைகளையும் பாத்துக்கும்;))

எனக்கு இப்ப நேரம் இல்லை நேரம் கிடைக்கும்போது நானும் வந்து என் அனுபவத்த சொல்றேன்.

Don't Worry Be Happy.

ஹாய் ,
என்ன பா இது எனக்கு யாரும் பதில் போடா மடங்குறாங்க ? பக்கத்தில் அம்மா மற்றும் மாமியார் இல்லாத சூழ்நிலை . அவர் காலை வேளைக்கு சென்றால் இரவு தான் வருவர் . முதல் பிள்ளை தற்போதுதான் pre kg செல்கிறான் . எனக்கு 8 மாதம் முடியபோகுது ,ஆனால் வாந்தி இன்னும் நிக்கவில்லை . due date நெருங்க நெருங்க பயமாக இருக்கு . நீங்கள் உங்களின் அனுபவங்களை ஷேர் பண்ண என்ன பயம் சற்று குறையும் .

மேலும் சில பதிவுகள்