சாக்லெட் கேக்

தேதி: September 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (12 votes)

 

கன்டெண்ஸ்ட் மில்க் - ஒரு டின்
ஆல் பர்பஸ் மா - 2 1/4 டின் (கன்டெண்ஸ்ட் மில்க் டின்னால்)
சீனி - 10 தேக்கரண்டி
பட்டர் - ஒரு கப் ( 2 ஸ்டிக் - 225 கிராம்)
பேக்கிங் சோடா - 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கொக்கோ பவுடர் - 2 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர்/பால் - ஒரு டின் (கன்டெண்ஸ்ட் மில்க் டின்னால்)
பேக்கிங் தட்டு - 10" (x 2") வட்டத்தட்டு


 

அவனை 350 F இல் முற்சூடு செய்யவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பேக்கிங் தட்டிற்கு பேக்கிங் ஸ்பிரே செய்து வைக்கவும்.
மா, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலித்து வைக்கவும்.
பட்டரை சிறிது உருக்கி சீனி, கன்டெண்ஸ்ட் மில்க் மற்றும் தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்கு அடிக்கவும்.
பின்னர் இந்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதனுள் சிறிது சிறிதாக மாக்கலவையை கொட்டி கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும். அடிக்க தேவையில்லை.
பின்னர் இக்கலவையை பேக்கிங் தட்டில் கொட்டி சமமாக பரவி முற்சூடு செய்த அவனில் 35- 40 நிமிடங்கள் அல்லது வேகும் வரை வைக்கவும். (ஒரு டூத் பிக் அல்லது கத்தி அல்லது போர்க்கால் குற்றி பார்த்து கலவை ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக கொள்ளவும்)
பின்னர் வெந்த கேக்கை எடுத்து ஒரு வலைத்தட்டில் போட்டு ஆற விடவும்.
பின்னர் விரும்பிய முறையில் அலங்கரித்து (ஐஸிங் செய்து) பரிமாறவும்.
இலகுவான ஐஸிங் செய்முறை: (Owlet Cake) "பட்டர் ஐஸிங் செய்முறை எனது இந்த குறிப்பில் உள்ளது. http://arusuvai.com/tamil/node/5526 " பட்டர் ஐஸிங் - வெள்ளை, சாக்லெட் பட்டர் ஐஸிங், sliced Almonds, பதப்படுத்திய (dried) அன்னாசி துண்டுகள் அல்லது வட்டமான சிறிய பிஸ்கட்கள் சாக்கோ நட் அல்லது M&M முதலில் ஒரு பாச்மென்ட் கடதாசியில் owlet உருவத்தை வரைந்து வெட்டி பின்னர் அதனை கேக்கின் மேல் வைத்து வெட்டவும்.
பின்னர் ஒரு பிரஷால் கேக்கை க்ரம்ஸ் (crumbs) இல்லாதவாறு துடைத்து விடவும்.
பின்னர் முகம் மற்றும் உடம்பிற்கு வெள்ளை பட்டர் ஐஸிங் தடவி சமமாக பரப்பி விடவும். மிகவும் அழுத்தமாக (smooth) இருக்க தேவையில்லை.அதன் பின்னர் இறக்கைகளுக்கும் தலையின் ஓரத்திலும் கரைகளிற்கும் சாக்லெட் ஐஸிங் அல்லது பிரவுன் ஐஸிங் தடவவும். இதுவும் அதிக அழுத்தமாக இருக்க தேவை இல்லை.
பின்னர் இரு சிறிய முக்கோண கேக் துண்டுகளை ஐஸிங் தடவி காதுகள் வரவேண்டிய இடத்தில் ஐஸிங் கொண்டு பொருத்தவும் அத்தோடு கண்களிற்கு வட்டமாக வெட்டிய பதப்படுத்திய (dried) அன்னாசி துண்டுகள் அல்லது வட்டமான சிறிய பிஸ்கட்டை வைத்து கண்விழிக்கு பிரவுன் நிற சாக்கோ நட் அல்லது M&M வைக்கவும்.
பின்னர் கண்களை சுற்றியும் வெள்ளை ஐஸிங் தடவிய உடம்பிலும் ஸ்லைஸ்ட் ஆமண்டை (sliced almonds) நிரல் நிரலாக அடுக்கவும். பின் ஒரு டூத் பிக்கால் இறக்கைகளில் ஸ்கலொப் வடிவில் (scallop shape) வரைந்து விடவும். வாய் வரும் இடத்தில் சிறிய தட்டையான கேக் துண்டை ஐஸிங் பூசி வைக்கவும். விரும்பினால் பிரெட்ஸில் ஸ்டிக் (pretzil stick) கொண்டு அடியில் கூடு போல அலங்கரித்து விடவும். இலகுவாக செய்யக்கூடிய ஐஸிங் கேக் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேக் படங்கள் அருமை. ரொம்ப நல்லா அலங்கரிச்சு பண்ணி இருக்கீங்க. பாதாம், ஸ்டிக் வைச்சு செஞ்சு இருக்கறது அழகா இருக்கு நர்மதா வாழ்த்துக்கள்.

நிலா...... அழகான கேக்கை ரொம்ப பொறுமையாய் செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள். பூனைகுட்டி கேக்கை பார்த்ததுமே கேக் சாப்பிடும் ஆசை வந்திடுச்சு. சூப்பர். விருப்பப்பட்டியலிலும் சேர்த்தாச்சு.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

எளிமையான செய்முறையை தெளிவான விளக்கப்படத்துடன் காட்டி இருக்கிங்க.. டிசைன் செய்வது அழகானதா இருக்கும்.. வாழ்த்துக்கள்.. யம்மி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi Nice Cake,

I am living in USA, can you please tell me where can i buy Hershey's Coco Powder (Like walmart, Target)

Thanks

சுபர்ப் நர்மதா. வடிவா இருக்கு ஆந்தைக்குஞ்சு.
கண்ணுக்கு அன்னாசி பொருத்தமாக இருக்கிறது. ஸ்லைஸ்ட் ஆமண்ட்ஸ் ஐடியாவும் கூட்டிற்கு ப்ரெட்சில்ஸ் வைத்திருப்பதும் வெகு அழகு. பாராட்டுக்கள். க்ராஜுவேஷனுக்கு செய்யலாம்... பார்ப்போம், யாராவது மாட்டுவார்கள். ;)

‍- இமா க்றிஸ்

நர்மதா,

கண்ணை கவரும் கேக் ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப அழகாக இருக்கார்... ஆந்தையார். :)

கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

சாக்லேட் கேக் செய்முறை ரொம்ப சுலபமா பிரமாதமா இருக்கு;)

Don't Worry Be Happy.

சூப்பரா இருக்கு கேக் இப்போதே செய்து சாப்பிடனும் போல இருக்கு

பானுகமால்

அன்பு நர்மதா,

அழகான கேக். செய்முறை விளக்கம் அருமை

அன்புடன்

சீதாலஷ்மி

நர்மதா எப்படி இருக்கீங்க?
உங்கள் பொண்ணு எப்படி இருக்கா?
இப்பதான் பொண்ணு வளர்ந்துட்டாளே அதிக குறிப்புகள் கொடுக்கலாமே?

அருமையான வடிவான கேக்./ சூப்ப்பர்

இந்த கொக்கோ பவுடர் வாங்கி 2 வருடம் ஆகுது, இங்குள்ள பாக்கெட்டுகளில் சிறிய பாக்கெட் கிடைக்காது, பெரிய பாக்கெட் தான் 4, 5 முறை செய்த்தோடு ஓவனும் ரிபேர்,

அதை இப்போது பயன் படுத்தலாமா?

கேக் செய்வதில் புலிகள் கூட பதில் சொல்லலாம்.

Jaleelakamal

குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கும் மற்றும் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள். எப்போதும் எனது குறிப்பை அழகாக வெளியிடும் அறுசுவைக்கு ஸ்பெஷல் நன்றிகள் :)

@ ஷண்முகப்ரியா: நான் டார்கெட்டில்தான் (target) கொக்கோ பவுடர் வாங்கினேன். Fred Mayer, Top Food & Drug, QFC எல்லா கடைகளிலும் கிடைக்கும். Hershys தான் தேவை என்றில்லை. பல பிரான்ட்களில் இருக்கும். பார்த்து வாங்குங்கள்.

@ ஜலீலா அக்கா: உங்கள் கொக்கோ பவுடர் பாக்கெட்டில் காலாவதியாகும் திகதி போட்டிருப்பார்களே. அதனை பார்த்து உபயோகியுங்கள். இன்னும் குறிப்பு கொடுக்க விருப்பம்தான் ஆனால் நேரம் இன்னும் போதவில்லை. :) போன வாரம்தான் மகளுக்கு 3 வயது ஆகிற்று. அடுத்த வாரம் pre-school போக போறா. பார்க்கலாம்.

Thanks for your info Narmatha.....

நிலா கேக் சூப்பரா இருக்கு

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பாக்கவே சூப்பர் ஹா இருக்கு, பண்ணிக்காட்டி இருக்க விதம் அருமையிலும் அருமை..வாழ்த்துக்கள் நர்மதா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சம கேக் ;) வித்தியாசமான கேக்கும் கூட. இது போல் இது வரை பார்த்ததில்லை. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

cocoa powder bathilaga cooking choc melt panni podalama pls reply sis?if can pls npte the measurement tq