குழந்தை பிறந்த பிறகு எப்படி சமாளிப்பது?

ஹாய் தோழிகளே,எனக்கு குழந்தை பிறந்து 2 வாரங்கள் ஆகிறது,எனக்கு 4 வயதில் 1 பைய்யன் இருக்கிறான்,அவனுக்கு அடுத்த வாரம் முதல் பள்ளி தொடங்கிவிடும்,எனது 2 வார குழந்தை இரவில் சரியாக தூங்க மாட்டாள் பகலில் தான் தூங்குவாள்,இன்னும் 1 மாதத்தில் ஹவுஸ்மெயிட் வேலையை விட்டு போய்விடுவார்,
எப்படி வீட்டு வேலைகளை சமாளித்து குழந்தைகளை கவனிப்பது,ஐடியா குடுங்கள் தோழிகளே

இரவில் தூங்காவிட்டாலும் என்ன தான் அழுதாலும் இரவில் மெல்லிய வெளிச்சமுள்ள லைட் மட்டும் போடுங்க...பளிச்சுன்னு லைட் போட்டு வச்சுட்டு தூஉங்க வைக்க வேண்டாம்..அழுவாங்க தான் இருந்தாலும் சில நாட்கள் தான் பிறகு அவர்களுக்கும் புரியும் இது இருட்டு தூங்கும் நேரம் நாமும் தூங்கி விட வேண்டுமென்று...இதில் எத்தனை பேருக்கு உடன்படிக்கையோ எனக்கு தெரியாது என்றாலும் ஒரு 2 மாதம் வரை பாருங்க..சில குழந்தைகளை சமாளிப்பது ஈசி சில தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரவில் அம்மாக்களை தூங்கவே விடாது அப்படியான பட்சத்தில் இரவில் படுக்க போடும் முன் புட்டிப் பால் கொடுத்து பழக்கலாம்..கணவரின் சப்போர்ட் இருந்தால் வேலையை சமாளிக்கலாம்.
குறிப்பாக உங்களுக்கும் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டும் அப்ப தான் அடுத்த நாள் வேலை பார்க்க தெம்பு இருக்கும்.சின்னதை தேவைக்கு மட்டும் தூக்குங்க மற்ற நேரம் படுத்து தனியாக விளையாடட்டும்..பெட்ரூமில் போட்டு வைக்காமல் சிட்டிங் ரூமில் படுக்க வைத்து டிவி போட்டு வால்யூம் கம்மி பண்ணி வைத்தால் யார் யாரோ பேசுவது போல் நினைத்து கொஞ்சம் தனியாக விளையாடுவார்கள்..பெரிய குழந்தைகளிம் தொடாதே பிடிக்காதே என்று அதட்ட வேண்டாம்..மென்மையாக சொல்லி புரியவைய்யுங்க பாப்பாவுக்கு வலிக்குமென்று.
மற்ற வேலை செய்கையில் பெரிய குழந்தையிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருங்க.நான் உப்புமாவுக்கு கூட இரவில் தாளுத்து விட்டு பகலில் தான் தண்ணீர் கொதிக்க வைத்து ரவை போடுவேன்..எதுக்கு அதிகம் புட்டு கூட குழாயில் நிரப்பி ஃபாயில் போட்டு மூடி ஃப்ர்ட்ஜில் வைப்பேன் காலை எழுந்ததும் அவிக்க..அந்த மாதிரி முன்கூட்டி முடியுமான வேலைகளை செய்யலாம்.
குழந்தைகளுக்கு டயபர் போடுவதே ஒரு பாவம் என்பது போல சொல்லுவார்கள்..அப்படி சிந்திக்காமல் துணியை விட சுத்தமாக டயபரில் வைக்கலாம்...நேரா நேரத்துக்கு அதை மாற்றுவதும் அட்லீஸ்ட் இரவில் மட்டுமாவது டயபர் போடலாம்..னம்பர் வன் போனால் வைப்ஸால் மட்டும் துடைக்கலாம்..இப்படி செய்வதால் குழந்தையுடனான வேலை நிறைய குறிஅயும்.
குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்க அதான் நல்லது..அந்த நேரத்தில் நீங்க வேலை முடிக்கலாம் என்றால் பிறகு ரொம்ப உடம்பு சோர்ந்து போகும் பிறகு அத்தியாவசிய வேலை கூட ஓடாது.சில மாதங்கள் தான் பிறகு எல்லாம் பழகிடும்.
இன்னுமொருமுறை சொல்கிறேன் பெரிய குழந்தையை சின்னதுகளை பக்குவமாக கவனிக்க வறுபுறுத்தாதீர்கள்..அவர்களும் குழந்தைகள் வீட்டில் புது ஆள் அவர்களுக்கும் புதுசு மெல்ல மெல்ல சில மாதத்தில் தம்பி தங்கயுடன் விளையாட பழகுவார்கள்..நானே கேட்டிருக்கிறேன் டேய் போட தொடாதடா என்பார்கள்..அல்லது வருகிற போகிற உறவுகள் சின்னதை சுற்றி நின்று பெரிசு முழித்துக் கொண்டு நிற்கும்..இதெல்லாம் எங்களுக்கும் ஏற்பட்ட நாங்கள் கவலை கொண்ட விஷயம்.
அவருகிறவர்களிடம் நீங்களே சொல்லி பெரிய பிள்ளையிடம் பேச விசாரிக்க கொஞ்ச சொல்லுங்கள்...ஒரு இரண்டு வருஷம் தாங்க பிறகு எல்லாம் பழகிடும்

மேலும் சில பதிவுகள்