மென்னு சாப்பிட மறுக்கிறான்-உதவனும் தோழிகளே

என் பையனுக்கு ஒன்னே முக்கால் வயது ஆச்சு,இன்னும் உணவுகளை மென்னு சாப்பிட மறுக்கிறான்,அப்படியே கொடுத்தாலும் முழுங்கி விட்டு வாந்தி எடுக்கிறான்...என்ன செய்வது,இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது நானும் ஒரு வயதில் இருந்து போராடுகிறேன்..நீங்கள் தான் உதவனும் தோழிகளே ......

பொரி மாதிரி சின்ன சின்னதா கொறிக்கிற உணவுகளை கொடுத்து பாருங்க..

உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி .தளிகா
பொறி,கிஸ்முஸ்,முந்திரி,தோசை...இப்படி எல்லாம் கொடுத்தாச்சு ஆனாலும் ஒன்னும் பயன் இல்லை..எல்லாத்தையும் கொட்டி விளையாடுகிறான்,எனக்கு பயமஹா உள்ளது என் மகனை மாத்த முடியுமான்னு தெரியல :(

முதல்ல உங்க மகனுக்கு பல்லு எத்தனை வந்திருக்கு??? ஏன்னா சில பிள்ளைகளுக்கு கடவாய் பல் வரும் வரை இந்த தொல்லை இருக்கும். இல்லன்னா ரொம்ப நாள் வரைக்கும் இது போல் திட உணவு கொடுக்காமல் கஞ்சி போலவே கொடுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதான் பழகல. பரவாயில்லை... சில குழந்தைங்க ஸ்கூல் போகும் வயதில் கூட மென்னு முழுங்காது. வயது ஆக ஆக எல்லாம் மாறும். கவலையை விடுங்க. அவனிடம் பிஸ்கட் போன்றவற்றை ஒடைக்காம கடிச்சு சாப்பிட சொல்லி முழுசா கையில் கொடுங்க. நீங்க சின்ன பீஸா ஒடைச்சு கொடுத்தா அப்படியே தான் போட தோனும்... ஒடைக்காம முழுசா கொடுங்க கடிப்பான். பிடிச்ச மாதிரி உணவை மசிக்காம, ஒடைக்காம முழுசா கொடுத்தீங்கன்னா அதை சாப்பிடும் ஆசையில் க்டைக்க முயற்சிப்பாங்க. விடாம ட்ரை பண்ணுங்க... நிச்சயம் பழகிடுவான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபா என் மகனுக்கு இரண்டைமுக்கால் வயது இன்னமே ஏதும் மென்டு விழுங்க மாட்டேங்ரான்

முந்திரி திராச்சை பாதாம் வாயில் போட்டு மெல்லுரான் முழுங்க ஆரம்பிக்கும் போது வாந்தி எட்டுத்துடுரான்

பொருச்ச கோளிய ஆசையா வாங்குரான் மென்டும் விடுவான் முழுங்க முடியல

டோக்கடர் இடமும் காட்டியாச்சு போக போக சரியா வந்துரும் எல்லா சத்தும் பாலில்லேயே இருக்கு அதையே குடுங்க என்கிரார்

என்ன செய்ரது ரெம்ப கவலையாத்தான் இருக்கு
இப்படி உங்களில் யாருக்காவது அனுபவம் இருந்தா தயவு செய்து சோல்லுங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வனி:பதிலுக்கு நன்றி வனி.இன்னும் கடவாய் பல் வர இல்ல..கைல முழு பிஸ்கட்,சிப்ஸ்,முறுக்கு இப்படி எது கொடுத்தாலும் கைல உடைச்சு சின்ன சின்ன பீஸ் அஹ முழுங்கறான்...இவன் வயசு பிள்ளைகள் எல்லாம் கடிச்சு சாபிட்ரதுங்கள்..இப்படிye இருப்பானோ நு பயமா இருக்கு ...

பல்கிஸ்: அதே பிரச்சனை தான் இவனும்,கடிச்சுட்டு மென்ன தெரியாம ஒரே வாந்தி..கவலைய இருக்கு.காத்திருப்போம் நம்ம அறுசுவை அனுபவசாலி தோழிகள் யாரவது பதில் தருவாங்க...

இருவருமே முதலில் ENT கிட்ட குழந்தையை காட்டுங்க. இந்த பிரெச்சனை பற்றி கொஞ்சம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டப்போ தொண்டையில் ஏதும் பிரெச்சனை இருந்த கூட சில குழந்தைகளால் முழுங்க முடியாதுன்னு சொன்னாங்க. அதனால் அதை செக் பண்ணிட்டு ஒன்னும் பிரெச்சனை இல்லை எனும் போது நீங்க கடிச்சு மென்னு உண்ண கூடிய உணவுகளை தினமும் அடிக்கடி கையில் கொடுத்து பழகலாம். நிச்சயம் பழகிடும். நீங்க அவங்க கையில் கொடுக்காம முன் பல்லில் வைத்து கடி கடினு சொல்லுங்க... நீங்க வெச்சு கடிச்சு காட்டுங்க... அப்பறம் மென்னு சுவைத்து காட்டுங்க.... அம்மா போல பண்ணுன்னு சொல்லுங்க... நிச்சயம் ட்ரை பண்ணுவாங்க.... ஒரு முறை கடிச்சாலும் கை தட்டி அவங்களை அப்ரிஷியேட் பண்ணுங்க... அப்போ அடிக்கடி ட்ரை பண்ணுவாங்க. இதெல்லாம் பழக்கத்தில் சரியாக கூடியது தான்... அதனால் அப்படியே இருக்குமோ என்ற பயம் வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாதம் மட்டும் தான் நானும் இன்னமும் மென்னு சாபுடுவதில்லை

தீபா,

என் மகளும் முதன்முதலில் இது போலே செய்தாங்க..அப்படியே விழுங்குவாங்க..அப்புறம் வாந்தி தான்

முதலில் பல் சரியாக முளைத்து இருக்கா? கடைவாய் பற்கள்,முன்பற்கள் சரியாக இருக்கிறதா?

அப்புறம் பாட்டில் பழக்கம் இருந்தால்,அதை முதலில் தூக்கி போடுங்க..என் மகள் பாட்டில் விட்டதும் ஸ்லோவாக சாப்பிட ஆரம்பித்து,இப்போ நன்றாக மென்னு சாப்பிடுறாங்க..பாட்டில் தவிர்த்து கப்,டம்ளர் கொடுங்க.

நிறைய கடித்து சாப்பிடும் உணவுகளை கொடுங்க..வனிதா மேடம் சொன்ன pretend ஐடியா கூட workout ஆகும்.அரைத்து ஊட்டுவதை விட்டுட்டு,அவங்க கையில் கொடுங்க,,முதலில் கொட்டுவாங்க..ஆனால் gradually ,சாப்பிட ஆரம்பித்து விடுவாங்க..

அவங்க சாப்பிடலேன்னா உடனே ஊட்ட கிளம்பாதீங்க..give them their own time .பசி இருந்தா கண்டிப்பா சாப்பிடுவாங்க.ஒரு விஷயம்,எந்த ஒரு விஷயமும்,குழந்தை உடனே செய்யணும்னு நினைக்காதீங்க.பொறுமையா தான் செய்வாங்க.கவலை படாதீங்க.

உங்க Pediatrician கிட்ட ஒரு checkup போயிட்டு வாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்