சுத்தி போடுவது எப்படி

ஹாய் தோழீஸ்,
குழந்தைக்கு எப்படி சுத்தி போடுவது?என்ன பொருள் வைத்து சுத்த வேண்டும்?எந்த நாள் சுற்ற வேண்டும் ?தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்..

கர்பூரம் வைத்து சுத்தி வாசலில் ஏற்றி வைப்பாங்க. வியாழன், ஞாயிறு சுற்றுவாங்க. கர்பூரம் என்றால் தினமும் கூட குழந்தைகளுக்கு சுத்தலாம்னு சொல்வாங்க. சிலர் உப்பு சுத்துவாங்க. குழந்தைங்க சாப்பிட்டதும் கடைசி வாய் உணவை சுற்றி வீசுவாங்க. சிலர் மிளகாய் வற்றல், தொடப்ப குச்சி, உப்பு, மண் எல்லாம் சேர்த்து வைத்து சுற்றி அடுப்பில் போடுவாங்க. ஹரிஷ் என்று நினைக்கிறேன் ஒருவர் இது போன்ற விஷயம் பற்றி அறுசுவையில் ஒரு இழை எழுதினார்... அவர் பெயர் சரியாக நினைவில்லை. தேடி பாருங்க... கிடைக்கலாம். எனக்கு கிடைச்சா நானும் கொடுக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அவர் பெயர் சரியாக நினைவில்லை.// ;) ஹைஷ்.

‍- இமா க்றிஸ்

சுமதி வனி சொல்வதுபோல் கற்பூரம் என்றால் தினமும் சுத்தி வைக்கலாம். வாரம் ஒரு முறை(வெள்ளி, சனி தவிர) நீரில் மஞ்சள்தூள், வரமிளகாய், கொஞ்சம் கடுகு,இதோடு கொஞ்சம் காலடி மண் சேர்த்து சுத்தி போடலாம். மஞ்சள் நீர் சுத்தும் நாள் அன்று எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி சுத்தி குழந்தைக்கு பொட்டு வைக்கலாம். பின் மஞ்சள்நீர், சுத்திய எலுமிச்சை இவற்றை சாலையில் போட்டு விடவும்.
சுத்தி போடும்போது குழந்தையை உட்கார வைத்துதான் சுத்த வேண்டும்.குழந்தை இன்னும் உட்காரவில்லை என்றால் யாரவது மடியில் குழந்தையை வைத்து சுத்தலாம். சுத்தி முடித்து, பொட்டு வைத்தவுடன் உடனே எழுந்து விடவேண்டும்.
இது எல்லாம் எங்கள் வீட்டில் என் குழந்தைக்கு அம்மா,பாட்டி இப்படிதான் செய்வார்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

சுமதி கல்லு உப்பு ஒரு பிடி எடுத்து கிழைக்கே பாத்து நிக்க வச்சு சுத்தி பாத்ரூமீல் கரைச்சு உடுவேன்
ஒரு முட்டை எடுத்து சுத்தி நாலு முத்தஞ்சி ரோட்டில் போட்டு உடைத்து விடலாம்
இது இரண்டுமே நான் செய்வேன் எப்பவாச்சும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

என்ன சொல்லி சுத்தி போடா வேண்டும்.நன்றி வனிதா ,பல்கிஸ் ,மகேஷ்

மேலும் சில பதிவுகள்