குழந்தைக்கு எந்த classes விடலாம்

ஹாய் தோழீஸ்,
பெண் குழந்தைக்கு எந்த classes (மியூசிக்,டான்ஸ் ) விடலாம்?எந்த வயதில் விடலாம்?குட்டீஸ் இப்போ அக்டிவா இருக்காங்க.அதை சரியாக கொண்டு போக வேண்டும் என்று நினைகிறேன்.உதவுங்கள்

எனக்கு தெரிஞ்சு நாலு நாலரை வயதில் டான்ஸ் கிளாஸ், கராத்தே கிளாஸுக்கு விடலாம். மியூசிக் கிளாஸ் சில இடங்கள்ல ஐந்து வயதாகானும்னு சொல்றாங்க. ஒரு சில இன்ஸ்ட்ருமென்ஸுக்கு ஆறு வயதாகனும். ஆனா உங்க குழந்தை நல்ல கிளவரா இருந்தா மூணு வயதிலேர்ந்துகூட ஸ்டார்ட் பண்ணலாம். வீட்டிலேயே சொல்லித்தரதுனா எந்த வயதில வேணாலும் சொல்லித்தரலாம். ஆனா ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு எதில் விருப்பமோ அதில் விடுங்க;)

Don't Worry Be Happy.

நீங்க பாருங்க குழந்தைக்கு எதிர் ஆர்வம் என்று உங்களுக்கே தெரியும் ..சுமார் ஐந்து வயதில் திருத்தமாக சொல்லி விடலாம் என் மகளுக்கு இதில் ஆர்வமென்று..ஒரு 2 வயதிலிருந்து அவர்களுக்கு ஆர்வமான விஷயத்தை நமக்கு தெரியப்படுத்த தொடங்குவார்கள்...ஆரவக் கோளாரில் இசை ஞானமில்லாத பிள்ளைகளை பாட வைப்பதும்,உடம்பு வளையாத பிள்ளைகளை ஆட வைப்பதும் வேஸ்ட்..வரைதல், வாசித்தல், பொது அறிவு,விளையாட்டு என எதில் விருப்பம் அதிகமாக காட்டுகிறார்கள் என்று கவனிங்க ..பிறகு சேர்த்துங்க
ஆனால் நீச்சல்,விளையாட்டு,தற்காப்புக் கலை என குழந்தைகளை எப்ப வேண்டுமானாலும் சேர்த்து விடலாம் உடலுக்கும் நல்லது

மேலும் சில பதிவுகள்