11 மாத குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா?

தோழிகளே, 11 மாத குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா? என் வீட்டு பக்கத்தில் அனைவரும் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். குழந்தை குண்டாகும் என்று சொல்றாங்க. ஆனால் என் மாமியார் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்றாங்க. என் மாமியார் காலை 9 மணிக்கு தான் என் வீட்டுக்கு வருவாங்க. நான் குழந்தை தூங்கி எழுந்தவுடன் காலையில் பாலுடன் சக்கரைக்கு பதிலாக தேன் கலந்து கொடுக்கலாமா?

1 வயதுக்கு கீழே உள்ள குழந்தைக்கு தேன் கொடுக்க கூடாதுனு நான் படித்து இருக்கேன்.. பாய்சனா ஆகும் வாய்ப்பு உள்ளதாம்.. சந்தேகப்பட்டு எதையும் செய்ய வேண்டாம்..

இந்த லின்க்கை பாருங்க

http://wholesomebabyfood.momtastic.com/infantbotulismhoney.htm

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா, அவனுக்கு 11.11.11 . வந்தால் 1 வயது தொடங்குகிறது. அப்பொது தேன் தரலாமா. என் கணிணியில் அந்த வெப்சைட் ஓபன் ஆக மாட்டுது. ஏன் என்றால் அவன் ரொம்ப சத்து இல்லாமல் ஒல்லியாக இருக்கான். 6 மாதம் வரை நல்ல இருந்தான். குண்டாக இருந்தான். 2 மாதமாக(6,7,8 மாதங்களில்) யூரின் இன்பெக்சன் வந்ததால் ஒல்லி ஆகி விட்டான். நான் வேலைக்கு செல்கிறேன். என் மாமியாருக்கு உணவு ஐட்டம் சரியாக கொடுக்க தெரியாது

தேன் சாப்பிட்டா பெரியவங்களுக்கு கூட Constipation வரும். பாப்பாக்கு குடுக்கக் கூடாது.

KEEP SMILING ALWAYS :-)

நன்றி ரம்யா,நாகாராம்.

குழந்தைக்கு தேன் கொடுக்க வேண்டாம்.என் பையனுக்கு சிறுவயதில் இருந்து கொடுத்தேன் அவன் குண்டாக இருப்பான் ஆனால் இப்ப ரொம்ப ஒல்லியாக ஆகிவிட்டான்.2 வயது தான் ஆகுது.இப்ப எங்க அம்மா வீட்டிலும்,மாமியார் வீட்டீலும் என்னை திட்டுகிறார்கள் பா.கொடுக்க வேண்டாம்.

நன்றி பா.

தேன் குடுக்க கூடாதுப்பா..

இதுவும் கடந்துப் போகும்.

ரொம்ப நன்றி அஸ்வினி

மேலும் சில பதிவுகள்