தேதி: September 7, 2011
சணல்
கார்ட்போர்டு அட்டை
பெவிக்கால்
கத்தரிக்கோல்
தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

சணலை தேவையான நீளத்திற்கு மூன்று துண்டுகள் நறுக்கி நுனியை நூலால் கட்டி வைக்கவும். பின்னர் ஜடை பின்னுவது போல் நீளமாக பின்னி முடிக்கவும்.

கார்ட்போர்டு அட்டை 12.5 செ.மீ உயரம் X 7.5 செ.மீ அகலத்தில் நான்கு துண்டுகள் நறுக்கி வைக்கவும்.

நறுக்கி வைத்துள்ள ஒரு அட்டையின் ஓரத்தில் பெவிக்கால் தடவி இந்த ஜடைப்பின்னலை நான்கு மூலையை சுற்றி ஒட்டவும். நடுப்பகுதியில் 7.5 செ.மீ அளவுக்கு பின்னலை நறுக்கி ஒட்டவும்.

மேற்சொன்ன முறைப்படி நான்கு அட்டைகளிலும் செய்யவும். அதில் இரண்டு அட்டையின் உட்புறம் முழுவதும் பெவிக்கால் தடவி முழுசணலை நான்கு மூலையும் சுற்றி நடுவில் ஒட்டிய பின்னலோடு கொண்டு வந்து முடிக்கவும். அடிப்பக்கத்திற்கு நீளம் 8.5 செ.மீ X அகலம் 6.5 செ.மீ அளவுக்கு அட்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அடிப்பக்கத்திலுள்ள அட்டையில் நான்கு பக்கமும் பெவிக்கால் தடவி சணல் ஒட்டிய ஒரு அட்டையை வைக்கவும். அதன் பக்கத்தில் சணலால் நிரப்பிய அட்டையை வைக்கவும்.

மற்ற இரண்டு அட்டையையும் இதுப்போல் ஒட்டி நன்கு காயவிடவும்.

சணல் பென் ஹோல்டர் ரெடி. சணல் ஒரிஜினல் நிறமாக இருக்கட்டும் என்று பெயிண்ட் எதுவும் செய்யவில்லை. விரும்பினால் பெயிண்ட் செய்து ஸ்டோன் ஒட்டி அலங்கரிக்கலாம்.

Comments
பென்சில் ஹோல்டர்
சூப்பர் டீம். எனக்கு நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க. தாங்ஸ்.
- இமா க்றிஸ்
சணல் பென் ஹோல்டர்
ஆகா இப்ப்டியெல்லாம் பன்னலாமா.ரொம்ப அழகாக இருக்கு டீம் வாழ்த்துக்கள்.
ரேவதி, பத்மா
சம கியூட்... சூப்பர் ஐடியா... வித்தியாசமாவும் அழகாவும் இருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பென்சில் ஹோல்டர்
வித்தியாசமான குறிப்பு எல்லோராலும் கண்டிப்பா ஈஸியா செய்ய முடியும் வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
குறிப்பு
சுப்பர் குறிப்பு :) நன்றி team
வாழ்க வளமுடன்
பவித்ரா
வாழ்க வளமுடன்
பவி
பென்சில் ஹோல்டர்
சூப்பர் ரொம்ப அழகா வித்தியாசமாக உள்ளது.
சணல் பென் ஹோல்டர்
டீம்.....உங்க கிட்ட பிடித்ததே....துல்லியமாக அளவுகளை சொல்லி கற்றுக் கொடுப்பது தான்.....மீண்டும் ஒரு அருமையான க்ராஃப்ட்....கீப் அப் த குட் வொர்க்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
அறுசுவை டீம்,
அறுசுவை டீம்,
அழகான ஹோல்டர்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
பென்சில் ஹோல்டர்!
புதுமை + அருமையான தயாரிப்பு! குழந்தைகளோட சேர்ந்து பண்ணுவதற்கு ஏற்ற, எளிமையான குறிப்பு! வாழ்த்துக்கள் அறுசுவை டீம்!
அன்புடன்
சுஸ்ரீ
Pen Stand
Romba azhaga seidhu irukkinga
vaazhthukkal
sanal pen holder
Simply superb...am expecting artificial jewels making...
with regards
Freeda Franklin
simply superb.
simple and easy to made it.i thank to arusuvai team for that your great job.
lavan kumar
very nice and super
அனைவருக்கும் நன்றி
இமாம்மா நன்றி. ஓ இதிலிருந்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருச்சா ரொம்ப சந்தோஷம் நீங்க உங்க ஐடியாவில் முயற்சி செய்வதை அனுப்பி வைங்கமா
இனியா வாழ்த்துக்கு ரொம்ப
ரொம்ப நன்றி வனிதா
ஆமாம் ரேணுகா ஈஸியா செய்யலாம். வாழ்த்துக்கு நன்றி
பவித்ரா நன்றி
நன்றி முத்துலெஷ்மி
ரொம்ப நன்றி லாவண்யா, உங்களை போன்றவர்களின் பாராட்டுகளும் உற்சாகம் வார்த்தைகளும் தான் நிறைய செய்ய உத்வேகமா இருக்கு.
நன்றி கவிதா
நன்றி சுஸ்ரீ. ஆனால் சணலை நறுக்கும் போதுலாம் கொஞ்சம் கவனமாக இருத்தல் அவசியம்.
நித்யா வாழ்த்துக்கு நன்றி
ஜெனி அறுசுவையில் ஏற்கனவே சில செயற்கை ஆபரணங்கள் செய்முறை இருக்கே
www.arusuvai.com/tamil/node/19858
www.arusuvai.com/tamil/node/19613
இதை தவிர இன்னும் சிலது இருக்கு நீங்க முன்பு உள்ள பக்கங்களில் பாருங்க.
ரொம்ப நன்றி சுமதி
வாழ்த்துக்கு நன்றி லவன்குமார்