பிஷ்நெட் ஒயர் ஃப்ளவர்ஸ்

தேதி: September 10, 2011

4
Average: 3.9 (8 votes)

 

பிஷ்நெட் ஒயர்
கோல்டன் மணி - பெரியது
கோல்டுநிற கம்பி
கத்தரிக்கோல்
நூல்
பச்சைநிற கம் டேப்
ப்ளேடு

 

பிஷ்நெட் ஒயரில் பூக்கள் செய்ய விரும்பிய நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
ஒயரை 7 செ.மீ அளவுக்கு 6 துண்டுகள் நறுக்கி வைக்கவும். பிஷ்நெட் ஒயர் 6 மெல்லிய ஒயர்கள் சேர்ந்து பட்டையாக இருக்கும். அவற்றை தனித்தனி இழைகளாக கத்திரிக்கோலால் நறுக்கி வைக்கவும்.
10 செ.மீ அளவில் கம்பியை நறுக்கி அதில் ஒரு முனையில் பெரிய மணியை கோர்த்து அந்த முனையை கொண்டே கம்பியை முறுக்கி கொள்ளவும்.
பிஷ்நெட் ஒயர் துண்டுகளில் ஒன்றை எடுத்து அந்த மணியுடன் சேர்த்து பிடித்துக் கொண்டு நூலால் இரண்டு, மூன்று முறை சுற்றி பூத்தொடுப்பது போல் முடிச்சுப்போட்டுக் கொள்ளவும்.
அடுத்தடுத்த ஒயர்துண்டுகளை மேலே சொன்ன முறைப்படி முடிச்சுபோட்டு வைக்கவும். பிஷ்நெட் ஒயர் வழவழப்பாக இருப்பதால் நூல் நழுவிக் கொண்டு வரும். எனவே ஒவ்வொரு முறை முடிச்சுப்போடும் போது நன்கு இறுக்கமாக சுற்றி விட்டு முடிச்சுப் போடவும். நூல் சுற்றிய இடத்திலிருந்து பச்சைநிற கம் டேப்பை பிஷ்நெட் ஒயரில் சுற்றி முடித்ததும் கம்பியிலும் சுற்றி முடிக்கவும்.
பிஷ்நெட் ஒயரைக் கொண்டு மற்றொரு வகை பூ. 10 செ.மீ அளவில் பிஷ்நெட் ஒயரை நறுக்கி மூன்று துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அதில் மேலும், கீழும் ஒரு செ.மீ அளவு விடவும். ப்ளேடால் தனித்தனி ஒயர்களாக பிரித்து வைக்கவும்.
கம்பியில் கோல்டு மணி கோர்த்து முறுக்கி வைக்கவும். பிஷ்நெட் ஒயரை இரண்டாக மடக்கி மணியில் வைத்து பூத்தொடுப்பதுப்போல் முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
மற்ற இரண்டு ஒயரையும் மேற்சொன்ன முறையில் முடிச்சுப்போட்டு கம் டேப் சுற்றி முடிக்கவும்.
அனைவராலும் எளிதாக செய்யக்கூடிய பிஷ்நெட் ஒயர் பூக்கள் ரெடி.
ஒரே நிறத்தில் அல்லது பல வண்ணங்களிலும் இதுப்போல் பூக்கள் செய்து ப்ளவர் வேஸில் கொத்தாக வைக்கலாம். மூன்று பேப்பர் கப்பை ஒன்றாக அடுக்கி ப்ரவுன் நிற பெயிண்ட் செய்து மணலை நிரப்பி வைக்கவும். மேலே மூடுவதற்கு தெர்மாக்கோலை வட்டமாக நறுக்கி அதே நிறத்தில் பெயிண்ட் செய்து கப்பில் பொருத்தி வைக்கவும். செய்துள்ள பூக்களை இதில் சொருகி வைத்து அவற்றிற்கு பொருத்தமான இலைகளை கொண்டு அலங்கரித்து மினி பூந்தொட்டியாக பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு அறுசுவை டீம்

எப்பவும் போலவே, அழகான கலர்ஃபுல் வேலைப்பாடு.

அதுவும் பேப்பர்கப்களை சேர்த்து, அசல் தொட்டி மாதிரியே செய்திருப்பது, அருமையாக இருக்கு.

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி மேடம் நான் சொல்லனும்னு நெனச்சேன் நீங்க சொல்லிட்டிங்க.......

சுலபமான அழகான கைவேலை. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

அருசுவை டீமிற்கு வாழ்த்துக்கள். "என்ன என்ன பூக்கள் வண்ணவண்ண பூக்கள்" அப்படீனு எங்க ஐஸு பாப்பா பாடும் பாட்டு பாடிட்டேன். அப்படியே எங்க பாப்பாக்கும் செய்துதரபோறேன். எளிமையாகவும், வண்ணமயமாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

எளிதான அழகான கை வேலை வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எளிதான அழகான கை வேலை வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நேர்த்தியான வேலைப்பாடு.

மிக அழகாக இருக்கிறது. அருமையான படைப்புகளை தரும் அறுசுவைக்கு நன்றி!!!!!!

ஃப்ளவர் வாஸ்,
பூக்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.ஈசியான செய்முறையும்,விளக்கமும் அருமை.ப்ளாக் கலர் பேக்ரவுன்ட் பூக்களை இன்னும் அழகா காட்டுது.வாழ்த்துக்கள்.

சிம்ப்ளி சூப்பர்!

வழக்கம் போலவே ரொம்ப அருமையா இருக்கு அறுசுவை டீம்! பூக்களின் நிறங்கள் தேர்வு அருமை, அழகு! அதிலயும் அந்த தொட்டி, அது செய்த ஐடியா சூப்பர் போங்க! அசத்திட்டிங்க டீம்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

சீதாம்மா, பிரியா, இமாம்மா, ரேணுகா, ஸ்ரீலதா, கிஃபா தங்கள் பாராட்டிற்கு நன்றி.

பிரியா அரசு இதுவரை பிஷ்நெட் ஒயரில் செய்த கைவினையை விட இதுமிகவும் எளிதானதுதான். உங்க பாப்பாவுக்கு கண்டிப்பாக செய்துக் கொடுங்க. தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

நன்றி ஹர்ஷா, சுஸ்ரீ. பிஷ்நெட் ஒயரில் கிடைத்த நிறங்கள் எல்லாவற்றிலும் மாடலுக்கு ஒன்று செய்தது கடைசியில் பூந்தொட்டியாக மாறிவிட்டது. நவராத்திரி கொழு பார்க்கில் இதுப்போல் செய்து வைக்கலாம்.

பிஷ்னட் ஒயரில் குருவி செய்வது எப்படி என்று யாருகாவது தெரியுமா?

இந்த லிங்க் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/14921 - பிஷ்நெட் ஒயரைக் கொண்டு குருவி செய்வது எப்படி?
http://www.arusuvai.com/tamil/node/15682 -பிஷ்நெட் ஒயரை கொண்டு மீன்கள் செய்வது எப்படி?