தங்கத்தின் விலை கிடு கிடு வென்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் சேமிப்பு எந்தெந்த வழிகளில் என்று பார்ப்போம்.தோழிகள் வாருங்கள் விவாதிப்போம்
தங்கத்தின் விலை கிடு கிடு வென்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் சேமிப்பு எந்தெந்த வழிகளில் என்று பார்ப்போம்.தோழிகள் வாருங்கள் விவாதிப்போம்
தங்கமே தங்கமே
ஆமா அசிமா தங்கத்தின் விலையே இன்ன விலை என்று சொல்ல முடியாத அளவுக்கு போய் கொண்டு இருக்கிரது
இப்போ பெருநாள் முடிந்த பிறகு மூண்று பிள்ளேகளும் பெருநாள் காசு சேர்த்து வச்சுருந்தாங்க ஒவ்வொரு வருசமும் அம்மாவுக்கு தேவை படுது தாமா என்று ஐஸ் வச்சு செலவாக்கிருவேன்
இந்த வருசம் என் பொண்ணு எதாவது ஒரு ஜாமான் வாங்கி தந்துருமா என்று கண்டிசன் போட்டுட்டா
சரி தங்கமே வாங்கிருலாம்டு ஒரு தோடு வாங்குனேன்
நான் வாங்கயில மலேசியா வெள்ளி =171.40 தா இருந்தது ஒரு கிராம்
இரண்டு நாள் கலித்து அந்த பக்கமா போகயில இன்னைக்கு என்ன வ்லைன்டு கேக்குரேன் =176.50 என்கிறார் இரண்டு நாளிலேயே இவ்வள்வு வித்தியாசமா இருக்கு
நான் ஒரு முடிவு பண்ண்ட்டேன் மாதம் மாதம் குரைந்த பச்சம் ஒரு கிரமாவது தங்கமாவே [சங்கிலியோ தோடோ இல்லை வெரும் தங்கம்] வாங்கிரனும் என்று
இது நல்ல முடிவு என்று நான் நினைக்கிரேன் அருசுவை தோழிகளும் இப்படி செய்து பயன் பெருங்க நீங்களும் ஐடியாஸ் குடுங்க
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்
ஆமாம் தங்கத்தின் விலை
ஆமாம் தங்கத்தின் விலை சென்ற வருடத்தைவிட இந்த வருடம் தார்மாராக உயர்ந்துகொண்டே செல்கின்றது.தங்க ஆய்வு குழுவின் கருத்துப்படி இன்வரும் காலங்களில் இவ்விலை இன்னும் உயரும் எனவும், தங்கத்தை யாரும் விற்றுவிடாதீர்கள், யார் தங்கத்தினை சேமித்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் மிகச் சிறந்த வருமானத்தை பெற்றுக்கொள்வரென்ரும் கூறுகின்றனர்.தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இவ்விலை உயர்வுக்குக் காரணமாகவுள்ளது. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்திலேயே முதலீடு செய்வதனால் அதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. அடுத்துவரும் 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை நாம் அனைவரும் அதிசயிக்கத்தக்க விலையில் இருக்கக்கூடுமெனவும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. என் கருத்து என்னவெனில் பணத்தை சும்மா வங்கியில் போட்டிருப்பவர்கள் , தங்கத்தில் காயினாக அல்லது சிறிய பிஸ்கட்களாக வாங்கி வைத்தீர்களானால், உங்களுடைய மிதலீடு பணமாக வைத்திருத்தலைவிட பல பல மடங்கு உயர்ந்துகொண்டு செல்லும். நகைகளும் வங்கலாம் ஆனால் அதில் செய்கூலி, சேதாரம் என்ற பிரச்சினைகள் உள்ளது.பிஸ்கட் வாங்கும்போது அதில் 9999 என்ற எண் உள்ளதாவென பார்த்து வாங்குங்கள்.ஏனெனில் அதுவே உயர்தர தங்கம் என்ற பொருள்.எனவே தங்கத்தை உங்களிடமுள்ள பணத்தைப்பொறுத்து எந்த வடிவத்தினாலும் சரி சேமிப்பதே எதிர்காலத்தை நோக்கிய நமது புத்திசாலித்தனம்.....
தங்கநகை கடையில் மாதந்தோறும்
தங்கநகை கடையில் மாதந்தோறும் தங்கத்தை கிராமாகா சேமிக்கலாம்
adi maram kolirnthalthan nooni maram valarum
சரியான முடிவு!!!! நாங்கள்
சரியான முடிவு!!!! நாங்கள் வசிப்பது துபாயில். ஒரு உண்டியல் வைத்து நாங்கள் வரவிலும், செலவிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகித்தை(%) உண்டியலில் போட்டு விடுவோம். பின்னர் ஒரு குறிப்பிட்ட அளவு ஆனதும் கோல்டு காயின் வாங்கி வைத்து விடுவோம்.வங்கியில் போட்டு வைப்பதை விட இது லாபகரமனது. நகை விலை ஏறினாலும் நாம் கவலைப்பட தேவையில்லை.தேவைபட்ட போது கோல்டு காயின் ஐ கொடுத்து நம் விருப்பம் போல நகை வாங்கி கொள்ளளாம்..சிறு துளி பெரு வெள்ளம் என்பது இதற்கும் பொருந்தும்.அது மட்டும் இலலாமல் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்ப்தை பொருத்து நமது உண்டியல் பணமும் கூடிக்கொண்டே வரும்.
தங்க நாணயம்
தோழிகளுக்கு வணக்கம்,
என் பெயர் வாணி செல்வின், நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். இங்கு எந்த வங்கியில் தங்க நாணயம் வாங்கலாம், தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்
நன்றி
yes
Yes balkis its good idea. i ii start next month. every month i ll buy one grm gold.
2months before my husband also think like this.