அல்சர்

எனக்கு அல்சர் பிரச்சன இருந்தது மருத்துவரிடம் காட்டி 3 மாதம் மருந்து எடுத்து கொண்டேன் .என்ன பிரச்சனைன இப்பவும் சாப்பிட்ட பிறகு
வையிறு எரிசலா இருக்கு என்ன பண்ணலாம். என்ன சாப்பாடு சாப்பிடலாம் . உதவுங்கள் தோழிகலே.

காலையில் எந்திரித்தவுடன் நிறைய தண்ணீர் குடிங்க இதுவே உங்க பாதி பிரச்சனையே தீத்துரும்
பசிப்பதுக்கு முன்பே சாப்ட்டுருங்க
சம்பார் ரசம் தயிர் தினமும் உணவில் சேத்துகங்க இதில் ஏதாவது ஒண்றாவது சேத்துக்கங்க
பிரசவ மருந்து இருக்கு இல்லையா அதைய் ஒரு செட்டு வாங்கி குடிங்க அல்சர் கானாமலேயே போய்ரும்[எனக்கு தெரிந்து ஒருவருக்கு 60வயது இருக்கும் வயித்தில் புன்னு குடித்ததில் முத்தி போச்சு என்று டாக்டரை சொல்லிட்டார் அவருக்கு 5 செட்டு பிரசவ மருந்து குடுத்து போயே போச்சு

]அப்படி இல்லைன்டா சோத்து கத்தாழையே தினமும் ஒரு மூனு துண்டு சாப்புடுங்க நல்ல பலன் கிடைக்கும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்பு சாந்தா குணா,

1. மருந்துகள் டாக்டர் சொன்னபடி தொடர்ந்து சாப்பிடுங்க.
2. பசி எடுப்பதற்கு முன்னால் வேளா வேளைக்கு கரெக்டான நேரத்துக்கு சாப்பிடுங்க. இது ரொம்ப முக்கியம். பசி வந்தால், வயிற்றில் சுரக்கும் அமிலம், அல்சர் புண்ணை அதிகரிக்கும் என்று சொல்வாங்க.
3. டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ்ட் ஆக இருங்க.
4. மணத்தக்காளிக் கீரை(மிளகுதக்காளி கீரை என்றும் சொல்வாங்க) அடிக்கடி உணவில் சேர்த்துக்குங்க. இதை பாசிப்பருப்பும் தேங்காயும் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். வயிற்றுப்புண்ணை ஆற்றும் இந்தக் கீரை.
5. காரம் மிகவும் குறைவாக சேருங்க. அதிலும் மிளகாய்க்கு பதில், மிளகை சேர்த்துக்கலாம்.
6. ஹோட்டலில், வெள்யிடங்களில் சாப்பிடுவதை முடிந்தவரைக்கும் தவிர்த்து விடுங்கள்.
7. ஜ்ங் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், ஊறுகாய், எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் இதெல்லாம் வேண்டாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

தோழி சீதாலஷ்மி நன்றி .

அன்புடன்

சாந்தா குணா

தோழி பல்கிஸ் நன்றி. நீங்க சொன்ன பிரசவ மருந்து புரியல, கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ple.

சாந்தா குணா
பிறசவத்துக்கு பின்பு ஒரு வாரத்தில் வயித்து புண்னு ஆர்வதுக்காக
பிறசவ மருந்து வாங்கி குடிப்போம் இந்தியாவில் மெடிக்கலில் பிறசவ மருந்து கேட்டாலை தெரியுமே
எனக்கெல்லாம் மூண்று பிள்ளைகலுக்குமே இந்தியாவில் இருந்துதான் வாங்கி வந்தாங்க அம்மா
ஒண்று பெரிய பாட்டல் டானிக் இன்னோன்னு சின்ன பாட்டல் டோனிக் ஒரு தேனும் சின்ன பாட்டலில் இருக்கும் அதான் ஒரு செட்டு பிறசவ மருந்து அதில் ஒரு டானிக் ரெத்த கலரில் இருக்கும் விசாரித்து பாருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நன்றி பல்கிஸ் தோழி.
நான் அபுதபில இருக்கேன்.என் அம்மாவிடம் சொல்லி அனுப்ப சொல்லுகிறென்.

Anbudan
Shanthaguna.

மேலும் சில பதிவுகள்