பார்முலா மில்க், வாக்கர் சந்தேகம்

என் மகனுக்கு (16.9)8 மாதம் முடிகிறது....அவனுக்கு பார்முலா மில்க் பழக்கலாம் என்று நினைக்கிறேன் நான் டுபாயில் இருக்கிறேன் எந்த பார்முலா மில்க் பழக்கலாம்?எது சிறந்தது?அதர்க்கும் டாக்டரை கன்ஸல்ட் பன்ன வேண்டுமா?
என் மகன் இன்னும் உட்காரவில்லை எதயாவது பிடித்துக் கொண்டு எழுந்து நிக்கிறான் அவனுக்கு வாக்கர் உபயோகிக்கலாமா?
this product isnot suitablefor the who cant sit or can walk alone என்று வார்னிங் உள்ளது வாக்கரில்

சிமிலாக் 6 + வாங்கி பாருங்க..சின்ன டின் வாங்குங்க.குழந்தை தானாக உக்கார பழகட்டும் சில குழந்தைங்க அப்படியே நின்று நின்று பிறகும் உட்கார பழகும்.சோஃபாவின் மூலையில் சாய்ந்து உட்கார வைத்து பாருங்க கொஞ்ச நேரம் இப்படி தினமும் செய்து வரலாம் சும்மா ஒரு 3 நிமிஷம்..சீக்கிரமே உட்கார பழகிடுவார்..வாக்கரை தவிர்த்தால் நல்லது
உங்கள் குழந்தை எதையும் எளிதில் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் என்றால் நீங்களாக்வே சும்மா 2 ஸ்பூன் ஃபார்முலா மட்டும் கொடுத்து பார்க்கலாம்..அடுத்த நாள் ஒரு 4 ஸ்பூன்..பிறகு மெல்ல ஒரு நாலு நாளில் 1/2 கப் என்று அதிகரிக்கலாம்..அல்லது சில உணவுகள் உடம்புக்கு சில குழந்தைகளுக்கு சீக்கிரம் ஒத்து போகாது அப்படியென்றால் எதற்கும் ஒரு வார்த்தை டாக்டரிடம் கேட்டுக்கலாம்..இருந்தாலும் ஃபார்முலா பெரிசா குழந்தைகளுக்கு எதுவும் செய்யாது

அன்பு ரிஸானா,

இதற்கு முன்னால் ஒரு இழையில் வாக்கர் உபயோகிப்பது நல்லதில்லை என்று படித்த ஞாபகம் இருக்கு.

இங்கே தமிழ் நாட்டில் பழக்கத்தில் இருக்கும் நடை வண்டி உபயோகிக்கலாம். ஆனா, அது உங்களுக்கு அங்கே கிடைக்குமான்னு தெரியல.

அன்புடன்

சீதாலஷ்மி

ரிசானா நலமா
இன்னம் நீங்க நெஸ்டம் குடுக்க ஆரம்பிகலையா நான் 4 மாததிலேயே நெஸ்டம் குடுத்துருவேன் குழந்தகளுக்கு பசி நல்லா தாங்கும்
நய் நய்ன்டு அழுகமாட்டாங்க
முட்டை தினமும் அரை அவியல் குடுங்க

நான் என் மகனுக்கு குடுப்பதை சொல்ரேன் அரோக்கியமான உணவு
100கிராம் பாதாம்
100 கிராம் முந்திரி
100கிராம் உளுந்து
100 கிராம் பொட்டு கலை
100கிராம் கோதுமை
200கிராம் ஓட்ஸ்
5ஒகிராம் நிடக்கடலை
20கிராம் வெந்தயம்
இதுஎல்லாம் போட்டு வீட்டுலையே பொடி பண்ணி கோல்லல்ம்
இதில் 4ஸ்பூனோ 5ஸ்பூனோ போட்டு கஞ்சி வச்சு குடுதால்
நல்ல தெம்பு கிடைக்கும் நான் இந்த கஞ்சி வய்க்கயில் 5 கிச்மிஸ்சயும் நய்த்து போடுவேன் மரந்துடாம சீனியும் போட்டுக்கங்க
என் மகன் ஏழு மாதத்தில் நடக்க ஆரம்பித்து விட்டான்
ரிசானா நீங்க வாக்கர் பத்தி கேட்டு இருந்தீங்க
இந்த கஞ்சியே குடுங்க தினமும் அடுத்த மாதமே சொந்தமாகவே நடக்க ஆரம்பித்து விடுவார் ஆமீன் ஆமீன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எங்கள் பப்பு கு பார்க்கும் டாக்டர் வால்கர் ல் விட வேண்டாம் என்றார்..காரணம்
1 .வேகமாக போய் இடித்து கொள்வார்கள் அல்லது விழுந்து விடுவார்கள்.
2 .வால்கர் இல் விடும் போது கால் லைட் ஆக bend ஆஹா சான்ஸ் உளது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றார்.
3 .குழந்தைக தானா நடக்க பழகறது பெஸ்ட்.

எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் முதல்முறையாக 7 மாதத்தில் நடந்த பிள்ளையின் அம்மாவிடம் பேசுகிறேன்...இணையத்தில் 6 மாத குழந்தை ஏழு மாத குழந்தை நடப்பதை தான் அதிசயமாக வீடியோ போட்டு பேசியிருக்கிறார்கள்.

தளிகா என் மகன் பெரியவனும் 7 மாத்தில் நடக்க ஆரம்பித்து 8 மாத்திலாம் ஓடவே ஆரம்புச்சுட்டான்
என் ஆண் பிள்ளேகல் 2 பேருமே தவக்கவே இல்லை உக்காந்த உடன் நடந்துட்டாங்க
ஏன் நானே 7 மாத்திலேயே நடந்து விட்டாதாக அம்மா சொல்லுவாங்க
என் அக்கா அண்ண்ன் பிள்ளேகல் எல்லாருமே 7 மாதம்தான்

இப்படி பல குழந்தைக்ளே பாத்தும் இருக்கேன்
நீங்க
';;;;lll//.... எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் முதல்முறையாக 7 மாதத்தில் நடந்த பிள்ளையின் அம்மாவிடம் பேசுகிறேன்...''''[[]]
சொல்ரது எனக்கு ஆச்சரியமா இருக்கு தளிகா மேடம்
உங்களிடம் பேசனும் என்று ரெம்ப நாள் நினைத்து இருந்தேன் nanri

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ரொம்ப நன்றி தளிகா உங்க பதிலுக்கு.........இன்று சோஃபாவின் மூலையில் சாய்ந்து உட்கார வைத்து பார்த்தேன் நான் ஏதாவது வேலை செய்யும் போது தான் அவனை வாக்கரில் விடுவேன் 1/2 மணிநேரம் அதுவும் கூடாதா??தனியா கஸ்டமாக உள்ளது ஃபார்முலா நீங்க சொன்ன மாதிரி ட்ரை பன்றன் உங்க குழந்தை வளர்ப்பு படித்தேன் அருமை........

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ரொம்ப நன்றிங்க உங்க பதிலுக்கு நடை வண்டி எப்படி இருக்கும்?இங்கு கிடைக்காது என்று நினைக்கிறேன்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

பல்கீஸ் நான் நலம் நீங்க நலமா?முட்டை தினமும் கொடுக்கலாமா?நெஸ்டம் ரைஸ் இங்கு கிடைக்குமா?ஜூஸ் குடிக்கவே மாட்டேங்குறான் எப்படி கொடுப்பது?நீங்க இலங்கையா?திரிபோஷ எத்தனை வயதில் கொடுக்கலாம்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

நன்றிப்பா உங்க பதிலுக்கு

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மேலும் சில பதிவுகள்