புதிதாக பிறந்த குழந்தையை பற்றி கூறுங்கள்

ஹாய் தோழிகளே,
என் குழந்தைக்கு 24 நாட்கள் ஆகிறது,பிறந்ததிலிருந்து இதுவரை,இரவு தூக்கம் இல்லை அவளுக்கு,பகலில் தான் தூங்குகிறாள்.இரவு தூங்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
முழித்து இருக்கும் போது கீழே படுக்க வைத்தால் ஒரே அழுகைதான்,கையில் வைத்து இருந்தால் பேசாமல் இருப்பாள்,அதற்கு என்ன செய்வது?எத்தனை மாதம் வரை குழந்தைகள் அடிக்கடி மலம் கழிப்பர்கள்?
எந்த மாதம் குழந்தைகள் முகம் பார்ப்பார்கள்,எந்த மாதம் குழந்தைக்கு தலை நிற்கும்?எந்த மாதம் குழந்தை குப்புற விழும்?குழந்தைகள் பற்றிய விவரங்களை தயவு செய்து கூறுங்கள் தோழிகளே?

அன்பு மஞ்சு,

குழந்தைகள் முதலில் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் அழுதுட்டே இருப்பாங்க. கவலைப்படாதீங்க. கொஞ்சம் திக்கான போர்வை கொண்டு, குழந்தைக்கு கதகதப்பாகப் போர்த்தி விடுங்க. போர்வை போர்த்தி, பின் நம் உடலோடு சேர்த்து, அணைத்தாற்போல வைத்துக் கொண்டு இருந்தால், கொஞ்சம் தூங்குவாங்க.

ஒரு நாளைக்கு 10 தடவை கூட குழந்தை மலம் கழிக்கும். வேறு எதுவும் அஜீரணக் கோளாறு இருந்தால், ஸ்மெல் அடிப்பதில் தெரிந்து விடும். சாதாரணமாக் இருந்தால், பயம் தேவையில்லை.

30 நாட்களுக்குப் பிறகு, 60 நாட்களுக்குள் நல்லா முகம் பார்க்கத் தெரியும். தலை நிக்கறதுக்கு 4 மாசம் ஆகும். 4 மாதத்தில் அவங்களாகவே குப்புற விழுவாங்க.

முகப்பில் தளிகா எழுதியிருக்கும் குழந்தை வளர்ப்பு பற்றிய தகவல்கள் இருக்கு. பாருங்க. வேறு எதுவும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்க.

இன்னும் மற்ற தோழிகளும் வந்து சொல்வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

பிறந்த குழந்தையல்லவா அவங்க தந்திர மந்திரங்கள் எல்லாம் கண்டுபிடிக்க்க கொஞ்ச நாள் ஆகும்..மேலே சீதாலக்ஷ்மி அவங்க சொல்லியிருக்காங்க பாருங்க.
இரவு குழந்தையின் கால்,பாதம் ,விரல்,கை என மெல்லியதாக வருடி வருடி மசாஜ் போல செய்து விட்டு பாருங்க..இரவு படுக்க வைக்கும் முன் சூடான நீரில் முக்கி பிழிந்த சுத்தமாக துணி கொண்டு துடைத்து தூங்க வச்சு பாருங்க..அல்லது மேல் கழுகி பாருங்க.மெல்லிய இசை போட்டு விட்டு பாருங்க..கைய்யை காலை கட்டினாற்போல் ஒதுக்கி போர்த்தி தூங்க போட்டு பாருங்க..அதாவது பேபி ப்லான்கெட்டின் சதுர வடிவத்தில் ஒரு மூளை குழந்தையின் தலைக்கு வருமாறு குழந்தையை படுக்க வைத்து குழந்தையின் இரு கைகளையும் நேரே நிமிர்த்து ப்லான்கெட்ட்டின் ஒரு மூலையை டைட்டாக மடக்கி குழந்தையினை சுற்றி காலுக்கு கீழ் உள்ள மீதி துணியை மேல் நோக்கி மடக்கி மற்றொரு ஆகம் மீதமுள்ள துணிஅயைஅயும் சுற்றி போர்த்தினால் குழந்தை ஆடாமல் அசையாமல் அப்படியே தூங்கும்..ஆனால் சில நாட்கள் ஆகிவிட்டதால் இது இப்போ சந்தேகம் தான்...பிறந்தது முதலே இப்படி பழக்கினால் நல்லா தூங்குவார்கள்..
மாலையில் நீங்கள் எங்கோ அங்கு படுக்க வைத்து கொஞ்சம் ஆள் நடமாட்டம் பேச்சு இதையெல்லாம் கேட்டு முழிக்க விடுங்கள்..

ரொம்ப நன்றி தோழிகளே,
என்னுடைய பிரச்சனையை முழுமையாக சொல்கிறேன் அதற்கு பிறகு தீர்வு சொல்லுங்கள்,என்னுடைய பொண்ணு தொட்டில்ல போட்டால் கால்மணி நேரத்திற்கு மேல் தூங்கவே மாட்டாள். பகலில்,இரவில் நான் என்னுடைய கட்டிலில் தான் படுக்க வைத்துக்கொள்வேன்,பகலில் குளிப்பாட்டி,பாலூட்டி பெட்டில் போட்டால் துணி லைட்டாக போர்த்தி விட்டால் நன்றாக தூங்கிவிடுவாள்,காலையில் 9 மணிக்கு தூங்க தொடங்கினால் 2 மணிக்கு தான் எழுவாள்,நடுவில் 2 மணி நேரம் கழித்து பால் குடுப்பேன்,பிறகு தூங்கிவிடுவால்
அதன் பின்னர் எழுந்தபிறகு 1 மணி நேரம் முழித்து இருந்து பிறகு தூங்குவாள்,இரவு 7 மணி வரை சிறிது சிறிதாக தூங்குவாள்,பின்னர் இரவு 9 மணி வரை முழித்து இருப்பாள்,அதன் பின்னர் 1 குட்டி தூக்கம் தான்,அதன் பின்னர்,தூங்கவே மாட்டாள்.
இரவு கையில் வைத்து இருந்தால் நன்றாக தூங்குவாள்,கீழே பெட்டில் படுக்க வைத்தால்,முழித்து ஒரே அழுகைதான்,நானும் கையில் எவ்வளவு நேரம் வைத்து இருப்பது,திரும்ப அவள் பெட்டில் ஆழ்ந்து தூங்கும்போது விடிந்துவிடும்.

பகலில் மட்டும் பெட்டில் நன்றாக தூங்குகிறாள்,இரவில் கையில் வைத்து இருந்தால் தான் தூங்குகிறாள் இது எதனால்?
அவளுக்கு DUST ALLERGY இருக்கிறது,
சீதா மற்றும் தளிகா மேடம் நீங்கள் தான் எனக்கு 1 வழி சொல்ல வேண்டும்

பின்குறிப்பு:
***********
இரவு நன்றாக குழந்தைக்கு போர்த்திவிட சொல்லி இருந்தீர்கள்,ஆனால் இங்கு இப்பொழுது வெயில் காலம், எங்கள் வீட்டில் எல்ல அறையிலும் ஏசி தான் உள்ளது, படுக்கையில் இருந்து அவளை எடுக்கும் போது அவள் உடல் சூடாக இருக்கிறது,அவள் முதுகில் சிறு சிறு வேர்குரு இருக்கிறது,துணியினால் உடலை நன்றாக மூடினால் உடம்பு சூடாகாதா?
மேலும் அவள் அடிக்கடி உடம்பை முறுக்கிகொண்டே அழுகிறாள் இது எதனால் உடலை முறுக்குகிறாள்

ஹாய் மஞ்சு எப்படி இருகீங்கப்பா? நான் என் பொண்ணு பிரந்ததில் இருந்து ஒரே பிஸிப்பா அது தான் அருசுவைய வந்து பார்ப்பேன் எதுவும் எழுதுரது இல்ல.என் பொண்ணும் இப்படி தான் கையில இருந்த தான் பேசமா இருப்பா.என்ன சாப்பிடகூட விடமாட்ட.ஒரு அன்ரி வந்து சொன்னாங்க அவளுக்கு கை சூடு பழகிட்டா அது தான் அப்படி என்று .அழுதாலும் தூக்க வேணாம் சொல்லுவா எனக்கு தாங்காது அவ சும்மா சிணுங்கினலே போதும் என்ன வேலை இருந்தாலும் போட்டுட்டு ஒடி வந்திருவந்திருவேன்
அம்மா அச்சே (அதுவும் புது அம்மா)
அன்புடன்
துஷி தருன்

அது வியர்குருவாக இருக்கும் என்று எனக்கு தோனவில்லை..எதுக்கும் டாக்டரிடம் கேளுங்க..பச்சிளம் குழந்தைகளுக்கு சில சமயம் இப்படி வியர்குரு போல தோன்றும் ஆனால் அது மறைந்து விடும்..பிறந்து ஒரு மாதம் வரை கூட கதகதப்பாக வைத்திருக்கலாம்..ஏ சீ குறைத்து போட்டுட்டு ப்லான்கெட்டால் சுற்றி விடுங்க..அல்லது ஃபேன் மட்டும் போட்டு மெல்லிய ப்லான்கெட்டால் சுற்றுங்க...ரொம்ப சூட்டில் விட வேண்டுமென்றில்லை..குழந்தையின் விரல் நுனியை பிடித்தால் இளம்சூடாக இருக்க வேண்டும் குளிர்ந்து போயிருந்தால் அறை குளிர்ச்சியாக உள்ளது என்று அர்த்தம்.
என் முதல் குழந்தை இப்படியே தான் இருந்தாள் ஆயிரதெட்டு டிப்ஸ் பார்த்து நானும் செய்து பார்த்தேன் எதுவும் பலனளிக்கவில்லை..கொஞ்சம் வளர்ந்த பின் சரியாகி விட்டது...உடம்பை முறுக்கி கொண்டு ஏன் அழுகுது என்று தெரியவில்லை...எங்கள் ஊரில் இடம்பிரி வலம்பிரி என்று இரண்டு வகை நாட்டுமருந்தை உரைத்து தாய்ப்பாலுடன் சில சொட்டு குழந்தையின் நாக்கில் தேய்ப்பார்கள் இப்படி குழந்தை முறுக்காது என்பார்கள்..நீங்கள் எதற்கும் கொஞ்சம் பாத்து சாப்பிடுங்க..காரம் கம்மி பண்ணி ஜீரகத் தண்ணி குடிச்சு பாருங்க..அல்லது ஓமம் வறுத்து காய்ச்சி குடிச்சு பாருங்க...குழந்தைக்க்கு கேஸ் ட்ரபில் இருக்காது.
இருபக்கமும் தலையணை வைத்து நீங்க போடும் ஷால் அல்லது துணி எதாவது விரித்து அதன் மேல் நடுவில் நாம கைய்யால் பிடிச்ச மாதிரி டைட்டா படுக்க விடுங்க..சில சமயம் அம்மா தான் தூக்கி வச்சிருக்காங்க என்று நினைத்து பேசாம இருப்பாங்க...பேபி ஷாப்பில் குழந்தையை ஆட்டி விடும் எதாவது தொட்டில் வாங்கி பாருங்க ..கடைசியாக அதான் வழி.என்றாலும் மனசு விட வேண்டாம் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு மூன்று மாதம் வரை கூட எதாவது வயிறு சம்மந்தமாக அசவுகரியம் இருக்கும்..கொஞ்சம் வளர்ந்ததும் எல்லாம் சரியாகிடும்
ஆக மொத்தம் உங்கள் பாப்பாவுக்கு பகல் இரவும் இரவு பகலுமாக நினைத்து வைத்திருக்கிறது சாவதானமாக தான் மாற்ற முடியும்..வலுக்கட்டாயமாக தூங்க விடாமல் இருக்க முடியாது..இரவு பகலை மாற்ற பாருங்க..என் மகள் பிறந்து பல நாள் ஸ்ட்ரோலரில் போட்டு தூங்க வைத்திருக்கிறென் இரவில்..ஏனென்றால் அவள் பயனம் செல்கையில் ஸ்ட்ராலரில் தூங்குவாள்..அது போல் இரவில் வீட்டுக்குள்ளேயே நடந்து விட்டு அவள் கண்ண்டை அடடித்தால் அடுத்த நொடி நான் கண்ணை மூடுவேன் அது 10 நிமிஷ தூக்கம் என்றாலும்.நீங்க உடம்பை கவனிச்சுக்குங்க

mailk la gova seivathu eppadi

டியர் தளிகா,
எனக்காக பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி,நீங்க சொன்ன மாதிரி இன்றைக்கு செய்து பார்த்துட்டு நாளை சொல்லுகிறேன்

மேலும் சில பதிவுகள்