ரவை அடை

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - 250 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயத்தூள் -சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

கோதுமை ரவையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
நான்கு வகை பருப்புகளையும் தனித்தனியாக தனியாக ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டி பருப்புகளை ஒன்றாகக் கலந்து, கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் ஊற வைத்த கோதுமை ரவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் மாவை அடைகளாக சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்