முந்திரி கார பிஸ்கட்

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

மைதா மாவு - கால் கிலோ
பச்சை மிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
பேக்கிங் பவுடர் - அரை டேபிள்ஸ்பூன்
வறுத்த சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 

பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், உப்பு, அரைத்த மசாலா விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு மறுபடியும் பிசிறி, பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
இதை பெரிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி இடுவது போல் பெரியதாகவும், அதே சமயம் மெல்லியதாகவும் இடவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். தேய்த்து வைத்துள்ள மாவை, பாட்டில் மூடியால் வட்டமாக கட் செய்யவும். அதை முந்திரி வடிவ துண்டுகளாக கட் செய்யவும்.
இதை காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக ஆனவுடன் எடுத்து, ஆறியவுடன் சாப்பிட்டால், நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

முந்திரி சேர்க்கறதில்லையா? ஹிஹிஹி முந்திரி வடிவமா?

ஆறியவுடன் எனக்கு அனுப்பிடுவீங்கள்ல? வெயிட்டிங்கு...

:)