கிஃப்ட் பேப்பர் வால்ஹேங்கிங்

தேதி: September 14, 2011

5
Average: 4.2 (9 votes)

 

காலண்டர் அட்டை
கருப்புநிற பெல்ட் பேப்பர்
கிஃப்ட் பேப்பர்
பெவிக்கால்
கத்தரிக்கோல்
ஸ்கெட்ச்

 

ஒருபக்கம் சில்வர் நிறமும், மற்றொரு புறம் கோல்டுநிறம் இருப்பதுபோல் கிஃப்ட் பேப்பரை எடுத்துக் கொள்ளவும். மற்றவைகளை தயாராக எடுத்து வைக்கவும்.
காலண்டர் அட்டையின் பின்பக்கத்தில் ஒட்டியிருக்கும் பேப்பரை நீக்கி விட்டு, பெவிக்கால் தடவி பெல்ட் பேப்பரை ஒட்டி வைக்கவும்.
கிஃப்ட் பேப்பரை கிளைப்போல் அரை இன்ச் அகலத்தில் எவ்வளவு நீளம் உங்களுக்கு வேண்டுமோ அந்த அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெட்டும்போதே கிளைப்போன்று சிறிது வளைவாக நறுக்கவும்.
நறுக்கிய பேப்பரில் சில்வர் நிறம் மேலே தெரிவதுப்போல் பெவிக்கால் தடவி அட்டையில் ஒட்டவும்.
இலைகள் செய்வதற்கு 5 செ.மீ அளவில் சதுரப்பேப்பராக நறுக்கி எடுத்துக் கொண்டு அதனை அரை இன்ச் நீளத்திற்கு மடித்துக் கொண்டே வரவும். பின்னர் அவற்றை செங்குத்தாக வைத்துக் கொண்டு கால் இன்ச் அளவுக்கு மடித்து மடித்து வைக்கவும். கத்தரிக்கோலை கொண்டு இலை வடிவில் நறுக்கினால் இதுப்போல் தனித்தனி இலைகள் கிடைக்கும்.
இன்னும் சிறிய கிளைகள் படத்தில் உள்ளது போல் நறுக்கி ஆங்காங்கே இடைவெளிவிட்டு ஒட்டி வைக்கவும். கிளைகளின் ஓரத்தில் பெவிக்கால் தடவி இலைகளை ஒட்டி முடிக்கவும்.
அடுத்து ஒரு கிளையில் பறவை உட்கார்ந்து இருப்பது போல் பேப்பரில் நறுக்கி ஒட்டி வைக்கவும்.
கிஃப்ட் பேப்பரை 50 பைசா நாணய அளவுக்கு வட்டமாக நறுக்கி வலது பக்க ஓரத்தில் கோல்டு பேப்பர் மேல் தெரிவது போல் ஒட்டவும். மேலும் பேப்பரை மெல்லிய சிறு துண்டாக நறுக்கி வட்டத்தை சுற்றி ஒட்டவும்.
8 செ.மீ சதுர அளவுள்ள பேப்பரை நான்காக மடக்கி பட்டர்ஃப்ளை உருவத்தை ஸ்கெட்சால் வரைந்து அதனையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதுப்போல் தனித்தனி துண்டாக பட்டர்ஃப்ளையை எடுத்துக் கொள்ளவும்.
பட்டர்ஃப்ளையின் உடல் பகுதியின் ஓரத்தில் லேசாக பெவிக்கால் தடவி மற்றொரு பட்டர்ஃப்ளை துண்டை ஒட்டி வைக்கவும். இதுப்போல் இன்னுமொரு ஆறு பட்டர்ஃப்ளை செய்து வைக்கவும்.
ப்ரேமில் கீழுள்ள இடைவெளியில் பட்டர்ஃப்ளை வலதுப்பக்க மூலையிலிருந்து கிளையை நோக்கி போவதுப்போல் ஒட்ட வேண்டும். பட்டர்ஃப்ளையின் நான்கு பக்கமும் பெவிக்கால் வைத்து ஒட்டவும்.
கிஃப்ட் பேப்பரில் செய்யக்கூடிய அழகான வால்ஹேங்கிங் தயார். பெல்ட் பேப்பருக்கு பதிலாக கருப்புநிற வெல்வெட் துணியில் செய்து ப்ரேம் போட்டு அன்பளிப்பாக வழங்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நல்ல ஐடியா... சூப்பரா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்,சூப்பரா இருக்கு.நானும் இதை முயற்சி செய்து இருக்கேன்.ஆனா,அலுமினியம் ஃபாயில்,கோல்டு ஃபாயில் வைத்து செய்து இருக்கிறேன்.இது ரொம்ப நல்ல ஐடியா.வாழ்த்துக்கள்.

எங்கேயிருந்துங்க இப்படி எல்லாம் கத்துக்கிறீங்க.... ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க.
வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

Very nice & beautiful

சிம்பிளா, சூப்பரா இருக்கு டீம்.

‍- இமா க்றிஸ்