நாம் உண்ணும் உணவில் கலந்துள்ள நஞ்சால் குழந்தைக்கு ஊட்டும் தாய்ப் பால் கூட விஷமாகிட்டது என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.
காய்கறிகள், பழங்கள்,அரிசி முதலான நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாவற்றிலுமே நஞ்சு கலந்துள்ளது. அதைவிட கொடுமையானது நாம் அணியும் ஆடைகளை கூட நஞ்சு விட்டு வைக்கவில்லை. ஆடைகளில் கலந்திருக்கும் நஞ்சானது நமது வியர்வை சுரப்பிகளின் மூலம் நம் உடலை அடைகிறது.
அறுசுவை சகோதரிகளே நீங்கள் மனது வைத்தால் இயற்கையான முறையில் உங்கள் வீட்டின் தோட்டத்திலேயே நஞ்சு கலக்காத காய்கறிகளை விளைவித்து பயன் பெறலாம். அதற்கான ஆலோசனைகள் இங்கே வழங்கப்படும்.
ரேவதி பாபு
//சகோதரா எங்கள் வீட்டு தண்ணீர் மிகவும் உப்பு அதை செடிகளுக்கு உபயோகிக்கலாமா மேலும் தண்ணிரின் தன்மையை மாற்ற முடியுமா//
உப்பின் தன்மையை மாற்ற முடியாது சகோதரி. நீரில் எந்த வகை உப்பு உள்ளது என்பதை நீரின் ஆய்வு மூலம் தெரிந்து கொண்டு எந்த வகை செடிகளுக்கு அந்த நீரை விடலாம் என்பதையும் நீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அன்புடன்
THAVAM
farzbat
//நான் தஞ்சாவூர் பகுதியை சார்ந்தவள் என் வீட்டின் சந்து பகுதி 2 1/2 அடி அகலமும் 100 அடி நீளமும் உள்ளது எனக்கு அதில் மரம் அல்லது செடிகள் வளர்க வேண்டும் என்று ஆவல் உள்ளது என்ன மரம் வளர்ப்பது , அப்படி வளர்க்கும் மரம் அருகில் உள்ள வீட்டை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் ... தயவு செய்து ஆலோசனை கூறவும்.//
ச்கோதரி 2 1/2 அடி அகலத்தில் மரம் வளர்க்க முடியாது... அப்படி வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் விட மாட்டார்களே... அதனால் காய்கறி செடிகள் வைக்கலாம், பூச்செடிகள் வைக்கலாம்.
அன்புடன்
THAVAM
shirley
//அவரை செடி nalla valarudu AANA பூ varala ennum Enna seivadhu?. 6 months mela aagiduchu//
அவரை செடி இனிதான் பூ பூக்க ஆரம்பிக்கும். நுனிகளை கிள்ளி விட்டால் இன்னு அதிகமாக படர்ந்து பூக்கள் பிடிக்கும். எந்த வகை அவரை போட்டிருக்கீங்கன்னு தெரியலை.. பந்தல் இரகம், குத்து ரகம் என இரண்டு ரகங்கள் இருக்கின்றன.
நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறை இருந்தால் கூட பூ பூக்காமல் இருக்கலாம். ஸ்டேன்ஸ் மைக்ரோ புட் எனும் நுண்ணூட்ட சத்து பாக்கெட் கடைகளில் கிடைக்கும். அல்லது சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும் நுண்ணூட்ட சத்துக்கள் கிடைத்தால் அதைக்கூட வாங்கலாம். பத்து லிட்டர் நீருக்கு 50 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம். பூக்கள் நன்றாக பிடிக்கும்.
அன்புடன்
THAVAM
sheeba.mangai
//என் வீட்டில் பெரிய தோட்டம் போட்டுள்ளேன். நிறைய பெரிய கட்டெறும்பு வந்து தண்டிலுள்ள சாறு,பூவிலுள்ள சாறு உறுன்ஞுவதால் செடியே குறுகி விடுகிறது.marunthu adiththum bayanillai.enna saiya? naan arusuvaikku puthusu.viraivil tamilil ezhuthukiren. sorry.//
சகோதரி நன்கு கவனித்து பாருங்கள்... எறும்பு எப்போதுமே சாறு உறிஞ்சாது. செடிகளின் மேல் இருக்கும் பூச்சிகள் மட்டுமே எறும்பு சாப்பிடும். செடிகளின் தண்டை துளைப்பது வேறு பூச்சிகள் அல்லது புழுக்களாக இருக்கலாம். ஆகையால் செடிகளில் புழுக்கள் ஏதாவது இருக்கிறதா என கவனியுங்கள். அதற்க்கு தகுந்த மருந்தை சொல்கிறேன்.
அன்புடன்
THAVAM
pandal raham
pandal raham
God is good
குறைந்த இடத்தில் செடி வளர்ப்பது
நன்றி அண்ணா, மாதுளை ,சப்போட்டா, கொய்யா ,கருவேப்பில்லை , முருங்கை போன்ற செடி வகைகளை வைக்கலாமா ?
a
a
தவமணி சார்
செம்பருத்தி,மஞ்சள் அரளி பூக்களில் கருப்பு பொடி போல் உள்ளது. அதன் மேல் கட்டெறும்பு நிறைய அடர்த்தியாக குவிந்துள்ளது. மற்றும் மாவு பூச்சியும் நிறைய உள்ளது.எறும்பு பொடி,கரையான் மருந்து,வேப்பம் எண்ணை- சோப்பு கரைசல் எல்லாம் போட்டும் ஒரு வாரம் தான். பின் பழையபடி ஒரே எறும்பு தொல்லை தான். பாதி பூவையும் தின்று விடும்..செடியை கட்டையாக வெட்டி விடுவது,பின் தளிர் விடுவது,பின் கட்டெறும்பு என்று வெறுத்து விட்டது தோட்டத்துக்கு போனாலே கஷ்டமாக இருக்குது.புழு ஏதும் இல்லை.எறும்பும் பெரிய பெரிய எறும்பு.தயவுசெய்து என் செடியை காப்பாற்றுங்கள்.20 வருடமாக செடி வளர்க்கிறேன்..புழு ஏதும் இல்லை.
god is love
தவமணி சார்
இந்தபக்கம் காய்கறிகள் பத்தி மட்டும் தான் கேக்கனுமா? பூச்செடிகள் பத்தியும் கேக்கலாமா? நான் நைட் க்வீன்னு ஒரு பூச்செடி வச்சிருக்கேன்.இரவுதான் மலர்ந்து மணம் வீசுது.பகல் நேரம் செடியில் பூ இருப்பதே தெரியலியே?அப்படித்தான் இருக்குமா வாசனை ரொம்ப நல்லா இருக்கு.
farzbat
சகோதரி, இருக்கிற குறைந்த இடத்தில் மர வகைகளை வளர்ப்பது சிரமம். உங்களுக்கு மட்டுமல்ல பக்கத்தில் குடி இருக்கும் மற்ற வீட்டுக்காரர்களுக்கும் இதனால் தொல்லைகள்தானே...
அதனால் காய்கறி செடிகள் பூச் செடிகள் போன்ற செடி வகைகளை மட்டும் வளர்ப்பதுவே நல்லது என்பது என் கருத்து.
அன்புடன்
THAVAM