பூர்ண கொழுக்கட்டை

தேதி: September 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

வெல்லம் - கால் கிலோ
பச்சரிசி மாவு - கால் கிலோ
கடலைபருப்பு - ஒரு டம்ளர்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - மூன்று தேக்கரண்டி


 

வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
கடலை பருப்பை 15 நிமிடம் ஊற விட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதை பாகுடன் சேர்த்து உப்பு சேர்த்து கிளறவும்.
பாகுடன் நன்றாக மிக்ஸ் ஆனதும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.
நன்றாக தண்ணீர் இல்லாமல் வாணலியில் ஒட்டாமல் வரும். அப்போது தனியே எடுத்து ஆற வைக்கவும்.
பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியின் காம்பால் கிளறி பின் பொறுக்கும் சூட்டில் கையால் பிசைந்து வைக்கவும்.
மாவை கையில் வைத்து விருப்பத்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக்கவும். அதனை இட்லி பாத்திரத்தில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சூடான சுவையான பூர்ண கொழுக்கட்டை ரெடி.

மாவு பிசைய தண்ணீர் ரொம்பவும் சூடாக இருக்க கூடாது குறைவான சூடாகவும் இருக்க கூடாது, நடுத்தர சூடாக இருந்தால் தான் கொழுக்கட்டை வேகும் போது உடையாமல் வரும். கையில் தட்டும் போது கொஞ்சம் எண்ணெய் சேர்த்து தட்டவும். கையில் ஒட்டாமல் வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு... வித்தியாசமான பூரணம் வைக்கறீங்க. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Romba nalla kurippu kumariakka

இதே மாதிரி தான் நானும் செய்வேன் அக்கா நல்லா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

கொழுக்கட்டை சூப்பர். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வனி நீங்க எம்மாதிரியான பூரணம் வைப்பிங்க.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் மீனா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் இளையா என்ன ரொம்ப நாளா காணாம போய்ட்டிங்க நீங்களும் இம்முறையில் தான் செய்விங்களா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் தேன் கண்டிப்பா செய்து பாருங்க ரொம்ப ஈசியா இருக்கும்.என் அம்மா பேர் கூட தேன்மொழி தான்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி பூர்ண கொழுக்கட்டை நல்லா வித்தியாசமா இருக்கு நாங்க மடக்கு கொழுக்கட்டையின்டு சொல்வோம் கருபட்டி தேங்காப்பூ வய்த்து செய்வோம்
விருப்ப பட்டியலில் சேர்த்துட்டுதான் வாரேன் செய்துட்டு சொல்றேன் குமாரி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எங்க வீட்டுலையும் இப்படிதான் செய்வோம். பாகு காய்ச்சி செய்யறதுனால மறுநாள் வைத்திருந்து சாப்பிடலாம்.

குமாரி நல்லாயிருக்கு பா நாங்களும் வேற மாதிரிதான் செய்வோம் பா துருவிய தேங்காய் வெல்லம் இல்லனா சக்கரை அப்படியே கலந்து பூர்ணம் வெப்போம்பா இல்லனா வெல்லம் கூட எள்ளும் பொடி செய்து வைக்கலாம் இப்டியும் செய்வோம் நல்லாயிருக்கும் உங்க கொழுக்கட்டைக்கும் வாழ்த்துகள்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் பல்கீஸ் விருப்பபடியலில் சேர்த்தாச்சா அப்போ செய்து பார்த்துட்டு பிடித்ததா என்று சொல்லுங்கள்.வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் வினோ ஆமாம் நீங்க சொல்றது போல மறுநாள் வைத்திருந்து சாப்பிடலாம் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரேணு நலமா? நீங்கள் வேறுமுறையில் செய்விங்களா?எள்ளு சேர்த்து நான் செய்தது இல்லை உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

intha murayil seithu parkiren

நல்ல குறிப்பு..
ஒப்பிட்ல தான் இந்த பூரனம் வைத்து அம்மா செய்வாங்க. இது வித்தியாசமா இருக்கு.
சரி.. மாவு கடையிலேயே வங்கியதா? இல்லை நீங்க அரைத்ததா?
நைசா இருக்கனுமா?

வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Nice kolukkattai seithu parkiren.

குமாரி,
கொழுக்கட்டை...வினாயக சதுர்த்தி ஸ்பெஷலா? ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க. கடலைப்பருப்பில் பூரணம் வைத்து செய்ததில்லை.வெல்லமும்,வேர்க்கடலையும் தான் வைப்போம்.உங்க முறையில் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்

ஹாய் கமலா கண்டிப்பா செய்து பாருங்க நல்லா வரும்.நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரம்யா.மாவு கடையில் வாங்கினேன் பச்சரிசி மாவு .நைசாதான் இருக்கும் கடை மாவு, செய்து பாருங்க வாழ்த்துக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஜானு செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஆமாம் அன்பு :)
கடலை பருப்பு பூரணம் வைத்து செய்து பாருங்க நல்லா இருக்கும்.,வாழ்த்துக்கு நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கொழுக்கட்டை கொஞ்சம் கடினமாக உள்ளது. எங்கெ தவறு செஇதென் என்று தெரியவில்லை?
உதவுங்கள்.

அப்படினா நீங்க மாவை இன்னும் கொஞ்சம் தளர்த்தியாக பிசையலாம். மாவு பிசைவதில்தான் பதம் உள்ளதுன்னு சொல்வாங்க.செய்து பார்த்ததுக்கு நன்றி மா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪