
தேதி: June 26, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காரைக்குடி பக்கம் செய்யப்படும் முருங்கைக்காய் பொரியல் இது. கேரளாவிலும் இதைப் போன்ற செய்முறையில் முருங்கைக்காய் கொண்டு ஒரு விதப் பொரியல் செய்வர்.
முருங்கைக்காய் - 10
துருவிய தேங்காய் - ஒரு கப்
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - பாதி
சோம்பு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - ஒரு மேசைக்கரண்டி







முருங்கைக்காயில் நார்ச்சத்து ( Fibre ) அதிகம் உள்ளது. வைட்டமின் சி ( Vitamin C )நிறைந்தது. குளோரின் (Chlorine), கந்தகம் (Sulphur), பொட்டாசியம் (Potasium)போன்ற சத்துக்களும் சற்று அதிகம்.