விமான பயணம்(கத்தார் டு சென்னை)

வணக்கம். நான் இப்பொழுது 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன். நான் இங்கு வெளிநாட்டில் உள்ளேன். இந்நிலையில் என்னை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் என் கணவர் ரொம்ப பயப்படுகிறார். அதனால் நாங்கள் இந்தியா செல்வதாக திட்டமிட்டு உள்ளோம். இந்நிலையில் நான் விமான பயணம் செய்யலாமா? அனுபவம் உள்ளவர்கள் பதில் தாருங்கள்.

நீங்கள் சென்னையில் நேரடியாக இறங்கி அங்கிருந்து 2,3-மணி நேரம் காரில் பயணம் என்றால் போகவேண்டாம்.அருகில் உள்ள பயனம் மட்டும் போகவும்.16-வாரங்கள் களித்துதான் நீண்ட பயணம்.இது என் அனுபவம்.டாக்டரிடம் உங்கள் உடம்பு நார்மலாயிருக்கா, வீக்கா இருக்கான்னு check பன்னிட்டு போகலாம்.வாழ்த்துக்கள் நீங்க work பன்னுதீங்களா சும்மாதான் கேட்டேன்.நானும் கத்தாரில்தான் இருக்கேன்

நான் சென்னையில் இருந்து கிளம்பி கடலூர் வரை போக வேண்டும். நான் வேலைக்கு போகவில்லை. வீட்டில்தான் இருக்கிறேன். நீங்கள் கத்தாரில் எந்த இடத்தில் இருக்கீங்க? உங்கள் பதிலுக்கு நன்றி.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

ப்ரியா கடலூர் வரைன்னா எவ்வளவு தூரம்னு பார்ர்த்துக்கங்க.நான் மதினா கலிபா சவுத்தில் இருக்கேன்.நீங்க எங்க இருக்கீங்க

நான் வக்ரா வில் இருக்கிறேன்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

hi u can better can go after 3 months.its is safe to travel after 4 months and before 7 months. beter u can ask ur dr.

even i am from doha

Congrats. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா ? என்னை மறந்திருக்க மாட்டீர்கல் என்று நினைக்கிறேன் . Now where r u?. I am also in qatar . take care

முதல்ல வாழ்த்துக்களை பிடிங்க. இதில் சந்தேகம் ஏதும் இல்லை... 3 மாதம் முடியும் முன் பயணம் கட்டாயம் கூடாது. டாகடரி கேட்டா “You can travel at your own risk"னு சொல்லி முடிச்சுடுவாங்க. கரு ஸ்டெடியா நிக்கனும்... அதுக்கு மூன்று மாதம் ஆகும். 3 மாதத்துக்கு பின்னும் டாகடரை பார்த்து உங்கள் உடல் நிலையை பரிசோதித்து பின் பயணம் செய்யுங்கள். கவலை வேண்டாம்... இன்னும் 1 மாதம் தானே... காத்திருந்து நல்லபடியா பயணம் செய்து ஆரோக்கியமா ஊர் வந்து சேருங்க. உங்களுக்காக எங்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்