குளவி கடிக்கு வீட்டு வைத்தியம்

என் மாமாவிற்கு நேற்று குளவி கடித்து விட்டது. வீக்கம் குறையவில்லை. ஏதேனும் வீட்டு வைத்தியம் உள்ளதா? யாருக்கேனும் இப்படிப்பட்ட அனுபவம் இருந்ததா? உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

சுண்ணாம்பு தடவுவாங்க

நிறைய குளவி கடித்து விட்டது

தேன் தடவுங்க பா உடனே சரியாப்போய்டும் குளவி,தேள்,வேற் ஏதாவது விஷபூச்சிக்கும் தேன் சிறந்த வைத்தியம்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

டாக்டர்கிட்டதான் காண்பிக்கனும்

நிறைய குளவி கொட்டினால் டாக்டரிடம் காட்டுவதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

டாக்டர் 2 நாள ஊசி போடுறாரு சரியாகல. சாப்பிட முடியல. வாமிட் வர மாதிரி இருக்காம்.

மூனு நாள் தொடர்ந்துஏழு ஏழு மிளகு காலையில் எழுந்தவுன் சாப்பிட சொல்லுங்கல் ஏதும் விஷக்கடிக்கு இதுதான் சாப்பிடுவோம் விஷம் இறங்கும்னு சொல்லுவாங்க கெடுதலோ சைட் எபெக்டோ கிடயாது

சொல்லிட்டேன் பா சாப்பிடுறென் சொன்னாங்க. ரொம்ப நன்றி பா

//டாக்டர் 2 நாள் ஊசி போடுறாரு சரியாகல.// விஷம் இறங்கணும்ல. எங்க அவசரத்துக்கு சட்னு மாஜிக் மாதிரி குணமாகுமா? தொடர்ந்து டாக்டர் சொல்ற மாதிரியே பண்ணச் சொல்லுங்க. நிச்சயம் சரியாகும்.

//சாப்பிட முடியல. வாமிட் வர மாதிரி இருக்காம்.// இதையும் டாக்டர்ட்ட சொல்லணும். டாப்லட் கொடுக்கக் கூடும். சரியாகிரும், யோசிக்காதீங்க. ஆனா... டாக்டர்ட்ட மருந்து எடுத்தா அந்த மருந்தை மட்டும் ஒழுங்கா எடுக்கணும். அதோட கை மருந்தையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது.

ஒன்றில் கைமருந்து மட்டும்; இல்லாவிட்டால் டாக்டர் கொடுக்கிறது மட்டும் என்று இருக்கட்டும். இரண்டு விதமான மருத்துவத்தை ஒரே நேரம் சேர்த்து முயற்சிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா

மேலும் சில பதிவுகள்