8 மாத குழந்தைக்கு கால் ஒல்லியாக உள்ளது.

8 மாத குழந்தைக்கு கால் ஒல்லியாக உள்ளது.
என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது. நன்றாக தவழ்கிறாள். ஆனால் முட்டிக்கு கீழ் இடது கால் வலது காலைவிட கொஞ்சம் ஒல்லியாக உள்ளது. பாதமும் அப்படிதான் உள்ளது. இன்னும் அவள் நிற்க ஆரம்பிக்கவில்லை. எனக்கு மிகவும் கவலையாகவும், பயமாகவும் உள்ளது. இது சரி ஆகிவிடுமா, அல்லது மருத்துவரை அனுகவேண்டுமா, ஏதும் மசாஜ் செய்ய வேண்டுமா

pls help me.அவளுக்கு constipation problem இருக்கு.motion இருகி போய் இருக்கு, motion இறுகி blood டோட வருது, இளகிபோக என்ன குடுப்பது. motion போகும்போது மிகவும் அழுகிறாள்

கால் பற்றி - மருத்துவரிடம் இப்பொழுதே காட்டி ஆலோசிப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

make sure that she drinks enough water and avoid solid foods until it gets normal.also you can add some butter in the food which u give her such as soup, mashed vegetables.avoid carrot it can also make motion tight.if the situation continues better you go to the doctor.

குழந்தையின் கால் பற்றிய சந்தேகத்தை நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடன் கெள்ளுங்கள்.

மேலும் சில குழந்தைகள் ஒரு வயது நிரம்பும் போதும் கூட எழுது நிற்க மாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாதிரி இருக்கும்.

சில குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்தவுடனே கான்ஸ்டிபேஷன் பிரச்சனை வரும். (நீங்கள் குழந்தைக்கு திட உணவு ஆரம்பித்து விட்டீர்க்களா, இன்னமும் தாய்பால் தரீங்களா? இல்லையா.....தெரிந்தால் மேலும் விரிவாக பதில் சொல்ல வசதியாக இருக்கும். )நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் அதிகபடியான நார் சத்துள்ள காய்கறிகள் (பீன்ஸ், கொத்தவரங்காய், கீரை...) பழங்கள் (சாத்துக்கொடி, ஆப்பிள், ஆரஞ்....) மாதிரியானவைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். உங்களுக்கு ப்ருன்ஸ் ஜூஸ் கிடைத்தால் வங்கி குழந்தைக்கு கொடுக்கவும். இருந்தாலும் மலத்தில் இரத்தமும் சேர்ந்து வருகின்றதென்றால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசிக்கவேண்டும். அவர்கள் பரிசோதித்துவிட்டு எதாவது டேர் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.நான் தாய்ப்பால் கொடுக்கிறேன். கடந்த 4 நாட்களாகதான் திட உணவு கொடுக்கிறேன். இன்று மருத்துவரிடம் செல்லலாம் என்று இருக்கிறோம்.அவளுக்கு 8 மாதம் ஆகிறது, ஆனால் இன்னும் எழுந்து நிற்கவில்லை,மிகவும் கவலையாக உள்ளது.

மேலும் சில பதிவுகள்