ஸ்பூன், நைஃப் ஹோல்டர்

தேதி: September 21, 2011

4
Average: 3.5 (8 votes)

 

உருளைவடிவ குழாய்
சாக் பவுடர்
பெவிக்கால்
தண்ணீர்
பேப்பரிக் பெயிண்ட் - கருப்பு மற்றும் மஞ்சள் நிறம்
ப்ரஷ்
தேங்காய் எண்ணெய்

 

தேவையான எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி சாக்பவுடருடன் அரை தேக்கரண்டி பெவிக்கால் தேவையான அளவு தண்ணீர் கலந்து பிசையவும்.
ரொம்ப இறுக்கமாக இல்லாமல் மிருதுவாக இருக்க வேண்டும். கடைசியில் கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்தால் சாக்பவுடர் கையில் ஒட்டாமல் வரும்.
உருளைவடிவ குழாயின் உள்பக்கம், வெளிப்பக்கத்தில் கருப்பு நிற பேப்பரிக் பெயிண்டை அடிக்கவும். குழாயின் அடிப்பக்க அளவுக்கு வட்டமாக கார்ட்போர்டு அட்டையை நறுக்கி எடுத்துக் கொண்டு அதன் இருப்பக்கத்திலும் பெயிண்ட் செய்யவும். பின்னர் குழாயின் அடியில் பெவிக்கால் தடவி இந்த அட்டையை ஒட்டி வைக்கவும்.
குழாயின் முன் பக்கத்தில் பெவிக்கால் கொண்டு ஆணின் முக அமைப்பை முதலில் வரைந்துக் கொள்ளவும்.
பெவிக்கால் வரைந்த இடத்தில் சாக்பவுடர் மாவு உருண்டையிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லியதாக திரட்டி புருவம், கண், மூக்கு, மீசை, வாய், காது ஆகிய பகுதிகளை ஒட்டி முடிக்கவும்.
ஆணின் உருவத்திற்கு மஞ்சள் நிற பேப்பரிக் பெயிண்ட் அடிக்கவும். சாக்பவுடர் மாவை மெல்லியதாக திரட்டி குழாயின் மேல் வட்டத்தை சுற்றி பெவிக்கால் வைத்து ஒட்டவும். அதன் மீது பேர்ல்நிற பேப்பரிக் பெயிண்டை அடிக்கவும்.
படத்தில் உள்ள பெண்ணின் முக அமைப்பை போல் குழாயின் பின் பக்கத்தில் இதுப்போல் சாக்பவுடர் மாவினால் ஒட்டி மஞ்சள்நிற பெயிண்ட் செய்யவும். பொட்டு பிங்க் நிறத்தால் வைக்கவும்.
ஆண், பெண் உருவம் கொண்ட 2 இன் 1 ஹோல்டர் ரெடி. இதில் ஸ்பூன், கத்தி போன்றவை போட்டு வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வித்தியாசமான ஐடியா, நல்லா இருக்கு டீம். பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

நல்ல ஐடியா உபயோகமான நல்ல குறிப்பு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Romba azhaghana and useful thing.Main thing enna theriyuma antha face than romba romba romba azhagha iruku. Congratulations.......!

ஐடியா நல்லாயிருக்கு.....

ஆண் பெண் வித்தியாசம் காட்டிருப்பது நல்லாயிருக்கு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அறுசுவை டீம்,

அழகான ஹோல்டர்ஸ்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இமாம்மா, ரேணுகாதேவா, கெளதமி, லாவண்யா, கவிதா தங்களின் பாரட்டிற்கு நன்றி.

அருமை