பீன்ஸ் பருப்பு உசிலி

தேதி: September 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீன்ஸ் - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு


 

துவரம் பருப்பு, கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுத்து ஆறவைக்கவும்
பீன்ஸை மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலையைச் தாளித்து உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு 2 நிமிடம் கிளறவும்.
பின் வேக வைத்தக் காயைப் போட்டு 2 நிமிடங்கள் நன்றாகக் கிளறி தேங்காய் தூவி இறக்கவும்.
பீன்ஸ் பருப்பு உசிலி பரிமாற தயார்


மேலும் சில குறிப்புகள்