பச்சைமிளகாய் சாம்பார்

பச்சைமிளகாய் சாம்பார்

தேதி: June 28, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

சாதாரணமாக மிளகாய்த் தூள், மல்லித்தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து செய்யப்படும் சாம்பார்களில் இருந்து இது சற்றே வித்தியாசமானது. காரத்திற்கு இங்கே பச்சை மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது. பொடி எதுவும் சேர்க்காததால், இந்த சாம்பாரின் வண்ணமும் மாறுதலாக இருக்கும்.

 

கத்தரிக்காய் - 2
முருங்கைகாய் - 2
அவரைக்காய் - 3
பச்சை மிளகாய் - 8
துவரம் பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - 12
பெரிய வெங்காயம் - பாதி
தேங்காய் பூ - 3/4 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தக்காளி - பாதி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

கத்தரிக்காய், முருங்கைகாய் இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவரைக்காயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
ஒரு பாத்திரம் அல்லது ப்ரஷர் பானில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, அதில் பருப்பைக் கொட்டி மூடிவைத்து சுமார் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
பருப்பு வேக வைத்தல்
பருப்பு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கள் மற்றும் சின்ன வெங்காயத்தையும் அதில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
காய்கள் வேக வைத்தல்
பின்னர் மூடியைத் திறந்து, கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். உப்பையும் சேர்க்கவும். கரண்டியால் கலக்கி விட்டு வேகவிடவும்.
காய்கள் வேக வைத்தல்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டுத் தாளிக்கவும்.
தாளித்தல்
பின்னர் பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலைப் போட்டு சற்று நேரம் வதக்கவும்.
காய் வதக்குதல்
வதக்கியவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பச்சைமிளகாய் சாம்பார்
இரண்டு நிமிடங்கள் சென்ற பிறகு, அரைத்து வைத்துள்ள தேங்காய், பச்சை மிளகாய் விழுதினை சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும். சுமார் 4 நிமிடங்கள் வேக விட்டு இறக்கிவிடவும்.
பச்சைமிளகாய் சாம்பார்
இப்போது பச்சை மிளகாய் சாம்பார் தயார். சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையானது.
பச்சைமிளகாய் சாம்பார்

இந்த குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. தேன்மொழி செல்வம். பழங்கால சமையலில் மிகவும் திறன் மிக்கவர். இந்த சாம்பார் அளவு ஐந்து நபர்களுக்கு சரியாக இருக்கும். தயாரிப்பதற்கு அதிக பட்சம் 30 நிமிடங்கள் ஆகலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வீட்டில் இருப்பது போலவே கரி படிந்த சாதாரண பாத்திரங்களை கொண்டு ஈஸியாக சமைக்க கற்றுத்தரும் இந்த பகுதி அனைவருக்குமே மிகவும் பயனுள்ளது. வீட்டில் சமைப்பதை பக்கத்தில் இருந்து பார்ப்பது போல இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Dear moderator,

This thread is very simple and illustrated with colorful quality photos for the beginners to see the outcome of the posted recipe. thanks for ur hardwork to make it happen!

My request is, Can u make this page as printer friendly like other recipes.

ஆரம்பத்திலேயே அந்த வசதியுடன்தான் இந்த பகுதியைத் தொடங்க வேண்டும் என்று முயற்சித்தேன். இதற்கான print module மாற்றி அமைக்கும்போது சில பிரச்சனைகள் வந்தது. படங்கள் இல்லாமல் கொடுப்பது எளிதாயிற்று. படங்களுடன் கொடுப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. அவற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் இருந்தேன். ஏற்கனவே இந்த பகுதி ஆரம்பிப்பதில் தாமதம் இருந்ததால், அதை விட்டுவிட்டு தொடங்கிவிட்டேன். மீண்டும் முயற்சி செய்கின்றேன். நிச்சயம் இந்த வாரத்திற்குள் சரி செய்து விடுகின்றேன்.

பச்சைமிளகாய் சாம்பார் வைத்தேன். நன்றாக இருந்தது. பொங்கலுக்கும் நன்றாக இருக்கும்னு நினைக்கரேன்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.