கருத்துக்கள், பதில்கள் வந்திருப்பதை தெரிந்து கொள்வது எப்படி?

அறுசுவை தளத்தில் பாராட்டக்கூடிய அம்சங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால், எனக்கு ஒரு குறை. நிறையக் குறிப்புகளின் கீழே நான் என்னுடைய சந்தேகங்கள், கருத்துக்களை கேட்டு, சொல்லி வருகின்றேன். ஆனால், எந்தக் குறிப்பில் நான் என்ன பதிவு செய்தேன் என்பதை (வயதாகிவிட்டதால் ) நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை. Registered members மட்டும்தான் கருத்து தெரிவிக்கும் வசதி இருப்பதால், அவர்கள் பதிவு, அதற்கு வரும் பதில் இவற்றை track செய்து அதை தனியே ஒரு பக்கத்தில் வெளியிடலாமே..

நான் login செய்து உள்ளே வந்து என்னுடயை tracker பக்கத்தினை பார்த்தால், கடைசியாக எனக்கு வந்துள்ள பதில், நான் கடைசியாக கேட்ட கேள்வி அனைத்தும் அதில் வரவேண்டும். இப்படி இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். தேவையில்லாமல் எல்லாப் பக்கத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

இது சாத்தியமானது என்று நம்புகின்றேன். கணினி வல்லுனர் உங்களால் முடியாததா..

கருத்துக்கு நன்றி பிரவீன். "உங்களால் முடியாததா" என்பது எனது தலை தாங்க இயலாத பனிக்கட்டி (ஐஸ்) :-)

இது அவசியம் கவனிக்கப்படவேண்டியப் பிரச்சனை. பெயர்பதிவு செய்த எல்லா உறுப்பினர்களுக்கும் tracking page ஒன்று வைப்பதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. குறிப்புகள் கொடுப்போருக்கு இது அவசியம் தேவை. எந்தெந்த குறிப்புகளுக்கு என்னென்ன பின்னூட்டம் வந்துள்ளது என்பதை அவர்கள் எளிதாக அறித்து கொள்ள tracker மிகவும் உதவியாக இருக்கும். இல்லையென்றால் அவர்கள் அனைத்துக் குறிப்புகளையும் திறந்து பார்வையிடவேண்டும். அவர்கள் வழங்கிய குறிப்புகளின் எண்ணிக்கை அதிகமான பிறகு, தினமும் எல்லாப் பக்கங்களையும் திறந்துப் பார்த்தல் என்பது கடினமான வேலை. இவர்களுக்காக ஒரு tracker page உண்டாக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

இப்போது நீங்கள் குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும் போது, அத்தகையப் பக்கம் இருந்தால் பதிவு செய்த உறுப்பினர்கள் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. முயற்சி செய்கின்றேன். நிச்சயம் கஷ்டமான வேலை கிடையாது. கொஞ்சம் நேரம் மட்டும் செலவாகும். கண்டிப்பாய் விரைவில் அந்த வசதியை கொண்டு வருகின்றேன். உங்களது பயனுள்ள ஆலோசனைக்கு மீண்டும் நன்றி.

Tracker Page உருவாக ஆலோசனை கொடுத்த சகோ. ப்ரவீனுக்கும் அதை உடனே ஏற்றுக் கொண்ட அண்ணன் பாபுவுக்கும் மிக்க நன்றி!
அறுசுவை தளத்திற்கு வரும்போதெல்லாம் என்னுடைய குறிப்புகளை திறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். இனி அது சுலபமாகிவிடும் என்பதில் ரொம்ப சந்தோஷம்!

Intranet இ-மெயில் போல வைக்கலாம். So that நாங்க தனியாகவும் தொடர்பு கொண்டு எங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ள easy -ஆக இருக்கும்.

நன்றி.

நன்றி...

தங்களது ஆலோசனை மிகவும் பயனுள்ள ஆலோசனைதான். அதில் உள்ள நடைமுறைப் பிரச்சனைகளை இதன்மூலம் தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

நீங்கள் குறிப்பிட்டு உள்ளது சாத்தியமே. பல Forum களில் அந்த வசதி இருக்கும். அதனைக் கொண்டு வருவதும் எளிதானதுதான். ஆனால், யாருக்கெல்லாம் அந்த வசதியை பயன்படுத்தும் அனுமதியைக் கொடுப்பது என்பதில் சிக்கல் உள்ளது. அனைவருக்கும் அனுமதி கொடுத்தால், இணையத்தை தவறாகப் பயன்படுத்தவும், அதன் மூலம் தேவையற்ற விளம்பரங்கள் செய்யவும் பலர் முற்படுவர்.

இந்தத் தளத்தில் உள்ள feedback form மூலமாக மட்டும் தினமும் 25 க்கும் மேற்பட்ட (தேவையற்ற) விளம்பர மடல்கள் எனக்கு வந்து சேருகின்றன. அதனைத் தவிர நான் வெளியிட்டுள்ள எனது மின்னஞ்சல் முகவரி, மற்ற முகவரிகளுக்கும் நூற்றுக்கணக்கில் junk mails வந்து குவிகின்றன. அவற்றை நீக்குவது, block செய்வது என்பதிலேயே நிறைய நேரம் செலவழிகின்றது. இது போன்ற பிரச்சனைகளை அனைவரும் சந்திக்க நேரிடலாம்.

இதனைத் தவிர privacy என்ற ஒரு விசயம் உள்ளது. சிலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அஞ்சல்கள் வருவதை விரும்புவதில்லை. தொடர்பு கொள்வதையும் விரும்புவதில்லை.

சமையல் பற்றின சந்தேகங்கள், கருத்துக்களைத்தான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்றால், அவற்றை மன்றத்தில் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தங்களது தனிப்பட்ட சொந்த விசயங்களை பரிமாறிக் கொள்ள விரும்பினால், அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிக் கொள்ளலாம். ( privacy policy யின்படி நாங்கள் மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியை வெளியிடுவது கிடையாது. )

இதில் சாதகமான விசயங்களை விட பாதகமான விசயங்கள் நிறைய இருப்பதால், அந்த வசதியைக் கொண்டு வருவதில் அதிக நாட்டம் இல்லை. அந்த வசதி இருந்தாகவேண்டும் என்றக் கட்டாயச் சூழல் உருவாயின் அதனை நிச்சயம் கொண்டு வருவோம்.

அறுசுவையில் members-ஆக உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடிவது போல, இ-மெயில் போன்ற வசதி. நாம use பண்ணும் web மெயில் போல அல்ல.......

so, மெயில் ஏதேனும் வந்துள்ளதா என்று தினமும் பார்க்க வசதியாக இருக்கும்.

இது என்னுடைய கருத்து.

நீங்கள் குறிப்பிட்டு உள்ளது
போல problems வரும் என்று நான் யோசிக்கவில்லை. ஆமாம் அது போன்ற problems வந்தால் கஷ்டம் தான்.

நன்றி...

உண்மையிலேயே நீங்கள் தெரிவித்தது நல்ல ஆலோசனை. அதில் நிச்சயம் தவறு இல்லை. ஆனால் ஒரு நல்ல வசதி, சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், அந்த வசதியை கொடுக்காமல் இருப்பதே நலம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நீங்கள் intranet email போல் என்று குறிப்பிட்டு இருந்ததை வைத்து உங்களின் கேள்வியைப் புரிந்து கொண்டேன். அதற்குதான் நான் அளித்திருந்த பதிலும். இந்த வசதியை (email member facility) forum போன்றவற்றில் கொடுத்து இருப்பார்கள்.

உறுப்பினர்கள் மட்டும் பயன்படுத்தும் வசதி கொடுத்தாலும், intruders எல்லோரும் members ஆக உள்ளே நுழைந்து அந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவர். அறுசுவையில் உறுப்பினர் ஆவது என்பது மிகவும் எளிதான விசயம் என்பதால். இதனால் நிறையத்தளங்கள் பிரச்சனைகளை சந்தித்து உள்ளன.

உதாரணத்திற்கு ஒன்று கீழே கொடுத்துள்ளேன்.

<a href="http://live.theshoppie.com/topic.asp?TOPIC_ID=830" target="_blank"> இந்தப் பக்கத்தினைப் பார்க்கவும்.</a>

இந்தப் பிரச்சனையை சரிசெய்யவும் வழிகள் காணலாம். அதற்கென நேரம் நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். அப்படி நேரம் செலவழிக்குமளவிற்கு இந்த வசதி அவசியம்தானா என்பதில்தான் எனக்கு சந்தேகம். அதனால்தான் "நிச்சயம் தேவை என்ற நிலை வரும்போது அவசியம் கொண்டு வருகின்றேன்" என்று குறிப்பிட்டு இருந்தேன்.

Instant messenger (Chat) போல் உறுப்பினர்களுடன் உடனுக்குடன் கருத்துக்கள் பரிமாறும் வசதி கொண்டு வரலாம். அதற்கு இப்போது நாங்கள் வைத்திருக்கும் server உதவுமா என்றுத் தெரியவில்லை.

அறுசுவை இன்னும் கொஞ்சம் வளரட்டுமே, எல்லா வகையிலும் :-). அதன்பிறகு நீங்கள் கேட்கும் அத்தனை வசதிகளையும் நாங்கள் உடனுக்குடன் செய்து கொடுக்கின்றோம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த tracker page வசதியை தற்போது இணைத்துள்ளேன். பெயர்ப்பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

இந்தப் பக்கத்தில் நீங்கள் அறுசுவையில் பதிவு செய்த கருத்துக்கள், குறிப்புகள் மற்றும் மன்றத்தில் கேட்ட கேள்விகள் அனைத்தும் பட்டியலிடப்படும். சமீபத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பதிவுகள் அல்லது பின்னூட்டம் கண்ட பதிவுகள் பட்டியலில் முதலில் தோன்றும். இதன்மூலம் எந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டம் வந்துள்ளது என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

கூட்டாஞ்சோற்றில் பங்களிக்கும் சகோதரிகள், இனி அனைத்துக் குறிப்புகளையும் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பக்கம் தங்களின் தேவையை தற்காலிகமாக பூர்த்தி செய்யும் என்று நம்புகின்றேன். சிரமங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

பாபு அண்ணன் அவர்களுக்கு!

இப்போதுதான் எல்லா குறிப்புகளையும் திறந்து பார்த்துவிட்டு Home Page-க்கு வந்தேன்.Tracker page வசதியைப்பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது! மிக்க நன்றி!

அன்புள்ள பாபு!

பின்னூட்டம் பற்றிய என் கருத்துக்கு, தங்கள் பதில் கடிதத்தில் எழுதியிருந்தபடி மிக விரைவில் மிக அழகாக வடிவம் கொடுத்திருக்கிறீர்கள். இந்த tracker வசதி மிகச் சிறப்பாக இருப்பதுடன் ஒரு சில பக்கங்களிலேயே அந்தந்த குறிப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களை அறிந்து கொள்ளக்கூடிய வசதியுடன் இருப்பது மிகவும் நன்றாக உள்ளது.

அறுசுவை மேன்மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்!!

நன்றி தலைவரே! அவசியமான வசதி இது. இனித் தேவையில்லாமல் எல்லா பக்கத்தையும் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும் சில பதிவுகள்