ஆலோசனை தாருங்கள் தோழிகளே

எனக்கு கல்யாணம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது. எனக்கு கடைசியாக 09 .08 .11 . மாத விலக்கு வந்தது . தற்போது இதுநாள் வரவில்லை. நான் 25 .09 .11 அன்று பிரக்னேன்ட் கார்டு வாங்கி டெஸ்ட் பண்ணியதில். நெகடிவ் வந்தது. எனக்கு கவலையாக உள்ளது. நான் இன்னும் 15 நாட்கள் கழித்து பிரக்னேன்ட் கார்டு வாங்கி டெஸ்ட் பண்ணினால் positive ரிசல்ட் வருமா..அல்லது டாக்டரிடம் செக்கப் பண்ணுவது நல்லதா ...நான் தாய்மை அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் ..நீங்க எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் தோழிகளே !

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இப்படி மாதவிலக்கு தள்ளி போவது இயல்பு தான். ஒன்றறை மாததிற்கு மேல் ஆகிவிட்டதால் கன்டிப்பாக pregnancy tester ல் தெரிந்து விடும் சில சமயம் false negativ கூட காட்டலாம். மருத்துவரை அணுகுவது நல்லது... எதற்கும் weight எல்லாம் தூக்க வேண்டாம். doctor கிட்ட பொயிட்டு வந்து நல்ல news ஆ சொல்லுங்க.

BE HAPPY MAKE OTHERS HAPPY

நன்றி கலைநிதி அவர்களே ! தாங்கள் எனக்கு அளித்த பதிலில் கன்டிப்பாக pregnancy tester ல் தெரிந்து விடும் சில சமயம் false negativ கூட காட்டலாம் என்று சொல்வதால் இன்னும் 15 நாட்கள் காத்திருந்து அதன் பிறகு டாக்டரிடம் சென்று காட்டுவது நல்லதா ... எனக்கு நார்மலாக மாதவிலக்கு 9 ஆம் தேதியில் வருவதால் ..அதன் பிறகு டாக்டரிடம் செல்வதா..

normela 28 days cycle irukavangaluku... athu mudinjathum therium pa......... adutha 2days la check panalam.. sometimes irregular period koda varum.. so doctora parunga... mukiyamana visayam... eppo namuku baby form aganumnu god decide pani irukaro apo than nadakum pa... so pray panikiren... dont worry.. further detail contact my mail.. jevanrelax@gmail.com

Muthu wr r u?

கவலை வேண்டாம் . இறைவனின் கிருபையால் கண்டிப்பாக குழந்தை உங்களுக்கு சீக்கிரமே பிறக்கும். நீங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது.

முத்து நீங்கள் கொடுத்த date படி உங்கலுக்கு எற்கனவே 45 நாட்கள் முடிந்து விட்டதல்லவா? அதனால் வேண்டுமானால் ஒரு வாரம் கழித்து மீண்டும் try பண்ணுங்கள்...அடி வயிற்றில் சுருக்கென்ற வலி இருந்தாலோ அல்லது nipplesல் pain இருந்தலோ.. வேலைகளை சற்று கவனமாக செய்யவும். 50 நாட்கள் கடந்த நிலையில் கன்டிப்பாக pregnancy testerல் தெரிந்துவிடும். அப்பிடியும் தெரியவில்லை ஆனால் மருதுவரிடம் சென்றால் கன்டிப்பாக blood testல் தெரிந்து விடும்.. வீன் குலப்பம் எதற்கு மருத்துவரிடம் சென்று conform செய்து கொள்ளலாமே....மருத்துவரிடம் செல்வதானால் 55 நாட்களுக்கு பிறகு தாறலமாக செல்லலாம்....நல்லதே நடக்கும் பயப்படாதிங்க... கடவுள் துணை இருப்பார்.

BE HAPPY MAKE OTHERS HAPPY

ரொம்ப நன்றி ! உங்களுடைய பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேறும் .

உங்களுடைய ஆலோசனை ரொம்ப பிடிச்சிருக்கு ... அதன் படி நடந்துக்கிறேன் ... உங்களுடைய நல்ல எண்ணங்களும், பிரார்த்தனைகளும் என்னை நிச்சயமாக வளப்படுத்தும்

கண்டிப்பக உங்கலுக்காவும் பிராதிகிறேன்..... எனக்கு இது 9ஆவது மாதம்..அதனால் உங்கள் மனதை புரிந்து கொள்ள முடிகிறது. நானும் 8 மாதம் கழித்து தான் எதிர் பார்த்து எதிர் பார்த்து பிறகு pregnant ஆனேன்.. அந்த அனுபவத்தில் தான் இதெல்லாம் கூற முடிகிறது. relax ஆ இருங்க நம்ம குழந்தை நம்மை விட்டு எங்கும் செல்லாது. தர வேண்டிய நேரத்தில் கடவுள் கன்டிப்பாக தருவார். (nalla pray pannunga, god never leave our hand).

BE HAPPY MAKE OTHERS HAPPY

வாவ் ! கலைநிதி ... உங்களுக்கு 9 - வது மாதம் நல்ல செய்தி சொல்லிருகிங்க .. வாழ்த்துக்கள் !...
அடுத்து உங்களுக்கு அழகான செல்ல குழந்தை உங்க கிட்ட.இருக்கும் .. ரொம்ப சந்தோசமா இருக்கு ... நல்ல படியாக நடக்கும் ....
உங்களுடைய வாழ்கையில் சந்தோஷம் நிறைந்து இருக்கும் . இறைவனிடம் வேண்டிகிட்டேன்.

மேலும் சில பதிவுகள்