கலவை வடை

தேதி: September 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கடலை மாவு -அரை கப்
அரிசி மாவு-அரை கப்
ரவை-அரை கப்
மைதா - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை - கால் கப்
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயத்துடன் உப்பு, நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அந்த வெங்காயக் கலவையில் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மைதா, நறுக் கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொடித்த வேர்க்கடலை, வெள்ளை எள் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வடை மாவு பதத்திற்கு வந்த பின்பு, சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும்


மேலும் சில குறிப்புகள்