சளி மற்றும் முனகல் - 1 மாதம் 10 நாள் - குழந்தை

என் மகன் பிறந்து 1 மாதம் 10 நாள் ஆகிறது. சளி பிடித்துள்ளது, பால் குடிக்கும்போது ஓமட்டுகிறான் மற்றும் தூங்கும் பொது பெரிய ஆளை போல் முனங்குகிறான், இதுக்கெல்லாம் எதாவது வைத்திய முறை உண்டா? என் இப்படி செய்கிறது குழைந்தை. சளியை போக்குவது எப்படி?. அம்மா குழந்தைக்கு பயந்து தலை குளிப்பது இல்லை - தயவு செய்து யாராவது உதவுங்களேன்.

பச்சிளம் குழந்தைக்கு சளி பிடித்தால் மருந்து எதுவும் கொடுக்க முடியாது தான். குழந்தைக்கு பால் புகட்டும் முன்னர் குழந்தையின் மூக்கின் உள்ளே சிறிதளவு தாய்பாலை பீய்ச்சி விடவும் பால் புகட்டிய பின்னர் குழந்தையின் மூக்கின் மேல் சிறிதளவு தாய்பாலை தடவவும். தாய்பாலில் எல்லா சத்தும் இருக்கு அது குழந்தையின் மூக்கடைப்பை நிறுத்தும் ஆற்றலும் வாய்ந்தது. இப்படி செய்து வந்தால் கஷ்டப்பட்டு தூங்கும் போது வரும் முனகல் இருக்காது.
குழந்தைக்கு தலைக்கு ஊற்றிய பின்னர் ஒரு சீரகம், பாதி மிளகு ஐந்து சொட்டு துளசி சாறு சேர்த்து முடிச்சியாக கட்டி சங்கில் தாய்பாலில் ஊறவைத்து கால் சங்கு கொடுக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரலாம்.
ஒரு துளி கற்பூரம் எடுத்து அரை ஸ்பூன் தேங்காய் எண்ணையில் கலந்து நல்லெண்ணெய் விளக்கில் சூடு காட்டி இளஞ்சூடாக இருக்கும் போது குழந்தையின் மார்பில் முதுகில் கழுத்தில் தடவினால் மார்பில் கட்டியிருக்கும் சளி கரைந்து வெளியேறும்.
தாயை உணவில் மிளகு, மஞ்சள் போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள சொல்லுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Thank u for ur nice tips..

U can place a humdifier in ur room to avoid the stuffy nose.. This can remove the dust from d nose and kids can breathe nicely even they are in cold

Roobini Ganesh

என்ன மூக்கில் பால் விடுவதா ....என்ன இப்படி சொல்றீங்க குழந்தை பால் கொடுத்துட்டு ஏப்பம் வரும் போது மூக்கிலும் வாயிலுமாக சேர்ந்து ஏப்பம் விடும் போதுஅதிகப்படியான பால் வெளியேரும் அது சிறிது மூச்சுக்குழலில் சென்றுவிடும் அவ்வாறுசென்றபால் சளி உண்டாக்கும் பிறந்த வீட்டில் நெஞ்சு சளி உண்டாக்கும் குழந்தை மூச்சுவிட சிரமப்படும் கொர் கொர் என்ற சப்தம் வரும் மூகில் இருக்கும் பாலை நம் வாயால் ரொம்பவும் லேசாக உறிஞ்சி எடுப்பார்கள் அப்படி இருகும் போது மூக்கில் பால் விட்டால் மூச்சுக்குழலுக்கு அல்லவா செல்லும் அது ஆபத்தாகத்தானே வரும் நான் இது வரை கேள்விப்பட்டதே இல்லை கண்ணில் விடு வார்கள் காய்ச்சலுக்கு தலையில் தடவு வார்கள் துணியில் நனைத்து பற்று போடுவார்கள் ஆனான் இது போல் கேள்வி படவில்லை

தாய்பாலில் உள்ள ஒரு விதமான என்சைம் உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் பாக்டீரியா தங்க விடாது. அதனால் தாய்பால் கொண்டு சில வகையானவற்றை குணப்படுத்த முடியும். அதில் ஒன்று தான் மூக்கடைப்பு. அதனால் குழந்தையின் மூக்கில் சில துளிகள் விட்டு ஒரு பத்து செகண்ட்ஸ் பிடித்து விட்டால் மூக்கடைப்பு சரியாகும். (மன்னிக்கவும் நான் தான் முதலில் விரிவாக கூறவில்லை). பூச்சுகடி, காதுவலி, டையபர் போடுவாதால் உண்டாகும் ராஷ் மற்றும் பலவற்றை ஆற்றும் சக்தி இந்த தாய்ப்பாலுக்கு உண்டு.

இது நான் ஒன்றும் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. இங்கு குழந்தை பறந்த பிறகு தாய்பாலின் நன்மை, எப்படி புகட்டுவது, எதனால் தாய்பால் கொடுக்கிறோம், அதில் என்ன சத்துக்கள் இருக்கு என்றெல்லாம் சொல்லிகொடுப்பார்கள். தாய்பால் பற்றிய தனி வகுப்பு கூட உள்ளது. இதெல்லாம் நான் ஒரு செமினார் சென்று தெரிந்துக் கொண்டது. அதனால் நீங்கள் தாராளமாக இப்படி செய்யலாம். நான் என் இரண்டு குழந்தைகளுக்கும் எப்படி தான் செய்தேன்.

குழந்தைகள் உறிஞ்சுவதர்க்கும் நாமாகவே விடுவதற்கும் வித்தியாசம் இருக்கு....அவர்களுக்கு அளவு தெரியாது....நாம் அளவோடு தான் செய்வோம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஒரு மாத குழந்தைக்கு மூக்கடைப்பு இருந்தால் Doctors மருந்து ஏதும் தரமாட்டார்கள்.குழந்தையின் ஒவ்வொரு மூக்கின் துவாரத்திலும் ஓரிரு சொட்டு தாய்ப்பால் விடலாம்.இதனால் மூக்கு ட்ரைனெஸ் சரியாகி மூக்கடைப்பு நீங்கும்.

மூக்கடைத்து இருந்தால் குழந்தை பால் குடிக்க கஷ்டப்படும்.இதனால் பால் கொடுப்பதற்கு முன்பாக மூக்கில் ஒரு சொட்டு தாய்ப்பால் விட்டு மூக்கடைப்பு நீங்கியதும் பால் கொடுப்பது நல்லது.ஓரிரு சொட்டு தாய்ப்பால் விடுவதால் சளி பிடிக்காது.இது என் மருத்துவர் என் குழந்தைக்கு சொன்னது.

பெரிய குழந்தைகள் என்றால் சலைன் வாட்டர் விடலாம்.சின்ன குழந்தை என்பதால் தாய்ப்பால் விடுவதுதான் சிறந்தது.தூய்மையானதும் கூட.

மிகவும் நன்றிப்பா நான் கேள்விபட்டதில்லை விளக்கியதற்கு நன்றி

மேலும் சில பதிவுகள்