தேதி: October 1, 2011
மெகந்தி கோன்
புள்ளி வைத்து அதனை சுற்றி, ஒரு வட்டம் வரையவும். அதன் மேல் கோடுகளும், மீண்டும் அதனை சுற்றி வட்டமும் வரைந்து கொள்ளவும். ஒரு புள்ளிக்கு செய்தது போலவே, நான்கு புள்ளி வைத்து அதே போல் வரைந்து முடிக்கவும்.

நான்காவது புள்ளியின் ஓரத்தில் இருந்து, இழை போன்ற ஒரு டிசைன் வரையவும். அதனுள் புள்ளிகளும், அதனை சுற்றி கோடுகளும் போட்டு நிரப்பவும்.

உள்ளங்கையில் ஒரு பூ வரைந்து, அதனை சுற்றி மாங்காய் பிஞ்சு டிசைன் வரையவும். அதனை கோடுகளால் நிரப்பவும்.

அந்த மாங்காய் பிஞ்சினை சுற்றி, மயில் போன்ற டிசைன் வரையவும். மயிலை சுற்றி சின்ன சின்ன வட்டம் வரைந்துக் கொள்ளவும்.

மயிலை சுற்றி தோகை போன்று வரையவும், மயிலின் தலை பகுதியில் கொண்டை போன்று பூ ஒன்றை வரையவும். இவை அனைத்தையும் புள்ளிகள் மற்றும் கோடுகளால் நிரப்பவும்.

அந்த மயிலின் மேல் பகுதியில் இருந்து, அடுத்த மயிலை தொடங்கவும். படத்தில் உள்ளது போல் சிறு முத்துக்கள், வட்டம் போன்ற டிசைன் வரைந்து அதனை நிரப்பவும்.

விரல் பகுதியில் புள்ளிகளும், அதனை சுற்றி அரை வட்ட பூ, கோடுகளும் போடவும்.

மற்ற விரல்களுக்கு இழை போன்ற கொடி வரைந்து அதன் மேல் வளைவுகளை வரையவும்.

கையின் கீழ் பகுதியில், படத்தில் உள்ளது போன்று டிசைன் போடவும்.

அதனுள் தேவையான டிசைன் போட்டு நிரப்பவும், அதன் மேல் பகுதியில் இழை வரைந்து அதன் மேல் கொடி வரையவும்.

எளிதில் போடக்கூடிய அழகான ரிச் டிசைன் இது. இன்னும் பெரிதாக போட விருப்பப்பட்டால், மேலும் மயில்கள் வரைந்து தொடரலாம்.

Comments
suganthi
Simply super peakcock desin.keep it up. regards.g.gomathi.
சுகந்தி :-)
எப்படி சுகந்தி இப்படி சொல்லவே இல்ல :-) சூப்பர் டிசைன்.... சிம்பிள் டிசைன் ஆனா ரொம்ப ரிச்சா இருக்கு...
KEEP SMILING ALWAYS :-)
சுகி
பாத்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் நீங்கதான்னு;)
எனக்கு இந்த ஃபில்லிங் டிசைந்தான் ரொம்ப பிடிக்கும். மயிலும் அழகா இருக்கு..;-) வாழ்த்துக்கள்;-)
Don't Worry Be Happy.
சுகந்தி
சூப்பர்பா அழகா இருக்குபா வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
unavu
chicken super
சுகந்தி
சூப்பர் டிசைன்... போட சிம்பிள் ஆனா பார்க்க ரொம்ப க்ராண்ட் டிசைன். கியூட்டா போட்டிருக்கீங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுகி
டிசைன் ரொம்ப அழகா இருக்கு சுகி.
ஃபோட்டோ மட்டும் இன்னும் கொஞ்சம் க்ளியரா வந்திருக்கலாம்.
- இமா க்றிஸ்
மயில் போல...
சுகி,
மருதாணியில் மயில் டிசைன் சூப்பரா இருக்கு! நல்லா மெனக்கிட்டு போட்டு இருக்கிங்க, அழகா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
சுகி
ரொம்ப அழகா இருக்குடா வாழ்த்துக்கள்
சுகி
இந்த டிசைன் ரொம்ப அழகாக ரிச்சா இருக்கு சுகி வாழ்த்துக்கள். போட்டோஸ் தெளிவா இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.
மெஹந்தி டிசைன்
மெஹந்தி டிசைன் ரொம்ப அழகாக இருக்கு சுகந்தி
Jaleelakamal
nice design...
nice design...