என் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது நேற்றிழிஉந்து வாந்தி வயிற்றுப் போக்கு இன்று 5 தடவை வாந்தி 2 தடவை வயிற்றுப் போக்கு மிகவும் சோர்வாக இருக்கிறான் இப்போது தான் பல் முலைக்கிது அதனால் இருக்குமா?அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?தாய் பால் கொடுக்கலாமா?அவசரம் உதவுங்கள்
risana
http://www.arusuvai.com/tamil/node/20568
ரிசானா
பசும்பால், தயிர் கொடுக்காதீங்க. தாய் பால் கொடுக்கலாம். நிறைய நீர் குடிக்க வைங்க. முடிஞ்சா இளநீர் கொஞ்சமா கொடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரிசானா
குழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும். அப்போது 5-6 இலையை அரைத்து கொப்ப+ழைச் (நாபியை) சுற்றித் தடவி வர அதிக நன்மையைத் தரும்.
மேலே குடுத்து இருக்கும் வல்லாரை மருத்துவம் ஒரு புக்கில் படித்தேன் வல்லாரை நல்லதுதான் குடுத்து பாருங்க
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்
வாந்தி - வயிற்றுபோக்கு
தோழி ரிஸானா, இங்கே தோழிகளின் ஆலோசனைக்காக காத்திராமல் உடனடியாக ஒரு குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையை அழைத்து சென்று காட்டுஙகள். சாதாரணமாக ஒரு வயது நிறைவடையும் போது குழந்தைகளுக்கு இது போன்ற நோய்கள் வந்து ஆட்டி படைக்கும். கவலைபடாதீர்கள். சீக்கிரமே குணமாகும். குழந்தையின் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தாய் பால் அவாய்ட் பண்ணிட்டு
தாய் பால் அவாய்ட் பண்ணிட்டு வெரும் நெஸ்டம் இரண்டுவேளை குடுங்கள் தாய்ப்பல் கொடுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம் தப்பில்லை மற்றபால் மற்ற உணவு அறவே கூடாது ஒரு நாளில் மாற்றம் தெரியும் மேல் அனுப்பிய லிங்கும் பாருங்கள்
ராபியா,ரிஸானா
இந்த சமயத்தில கண்டிப்பா தாய்ப்பால் அவசியம். என் மகனை இதே ப்ரச்சனைனால ரொம்ப சோர்ந்து போக அட்மிட் பண்ண வேண்டிய நிலமை வந்தது. அப்ப டாக்டர் கண்ட்டினியூவா தாய்ப்பால்தான் கொடுக்க சொன்னார். ஒரு பக்கம் ட்ரிப்ஸ் ஏறிட்டு இருந்தது. தாய்ப்பாலில் உயிர்சத்துக்கள் அதிகம். அது ஜீரணசக்தியையும் மேம்படுத்தும்.
**சிறு குழந்தை சோர்ந்து போனா கண்டிப்பா டாக்டர்கிட்ட காட்டுங்க.**
குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டால் 30 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் ஒரு சிறிய ஸ்பூன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஓ.ஆர்.எஸ் கரைசலை கொடுக்கவும். இதன் மூலம் வாந்தி ஏற்படுதல் நின்று விடலாம். தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்பால் கொடுக்கவும்.
12-24 மணிநேரம் கழித்து வாந்தி ஏற்படுவது இல்லையெனில் இட்லி, பாலில் ஊற வைத்த ரொட்டி, அரிசி கஞ்சி போன்ற மிருதுவான திட உணவுகளைக் கொடுக்கவும்.
Don't Worry Be Happy.
ரிசானா
1. முதலில் குழ்ந்தை நல மருத்துவரை பார்க்கவும்
2. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டாம்
3. தண்ணீர் நிறைய அப்பப்ப கொடுத்துக்கொண்டே இருக்கவும்..நீங்களும் தண்ணீர் நிறைய அருந்தவும்..
4. பல் முளைப்பதால் வாந்தி,பேதி வருவதற்கு எல்லாம் இப்போது முதலிலேயே வாக்சினேசன்ல போட்டுடறாங்க..அதனால நீங்க அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க..
ஜெயா கூறியதைப் போன்று என் பையணுக்கும் 13மாதத்தில் வாந்தி,பேதி வந்த போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டாம் என்றும்,அவன் வேறு எதை சாப்பிடவில்லை என்றாலும் தாய்ப்பால் குடித்தால் போறுமென்றும்(ட்ரிப்ஸ் போட்டபோதும்) டாக்டர்கள் கூறினர்..
இதுவும் கடந்துப் போகும்.
டாக்டரிடம் போனால் முதலில்
டாக்டரிடம் போனால் முதலில் ட்ரிப்தான் போட சொல்வார்கள் இரண்டு நாள் முதல் ஒரு வாரம் வரை ஹாஸ்பிடலில் வைத்து விடு வார்கள்
வயிற்றில் ஏதோசெமிக்காமல் மந்தம்மாக உள்ளது அதை வெளியேரும் வரை நாம் இலகுவான தெம்பும் குறையாத உணவாக கொடுக்கனும்
பால் வயிற்றுக்குள் சென்றவுடனே திரிந்துவிடும் செரிக்க சிரிது அவகாசம் எடுக்கும்
நெஸ்டம் பக்குவப்படுத்தப்பட்ட அரிசி மாவு ஜீரனிப்பதற்கு மிகவும் எளிது
சோர்வும் ஏற்படாது
வயிற்றில் எந்த பிரச்சனைக்கும் சரிவரும்
நான் ஒரு போதும் டாக்டரிடம் சென்றதில்லை அதே போல் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நான் கடை பிடித்து அனுபவத்தில் கண்ட வைத்தியமுறை
ஒரு முறை கடைபிடித்து பார்த்திர்களென்றால் உங்களுக்கே விளங்கி விடும்
ஆனால் அதுவே வயிற்றில் ஏதாவது விழுங்கி சொறுகி இருந்தால் தண்ணீர் போல் பீச்சிக்கொண்டு வெள்ளயாக மிகவும் நாற்றத்துடன் பீச்சி பீச்சி அடிக்கும்
அவ்வாறிருந்தால் 1 டம்ளர் வெந்நீரில் 8 ஸ்பூன் ஜீனியும் 1ஸ்பூன் உப்பும் கலந்து வைத்துக்கொண்டு சிரிது நேரத்திர்கொருமுறை கொடுக்கவும் இதற்கு நெஸ்டம் தண்ணிர் போல கலந்து கொடுக்கவும் பால் லொடுத்தால் ஏற்கனவே வயிற்ற்ரில் உள்ள அடைசலுடன் கூடக்கொஞ்சம் சேரும் நோய் சரிப்பட நாள் எடுக்கும்
அக்கா பால்
அக்கா பால் குடிக்கும்(தாய்பால் மட்டும்)குழந்தை செமித்து மோஷன் போனா எப்படி இருக்கும். செமிக்கலைனா எப்படி மோஷன் போகும். மோஷன் மஞ்சள் நிறத்தில் சளி போன்று போவது எதானால். சளி இருக்கும் போது சளிக்கு மருந்து தந்தால் சளி மோஷன் வழியாக வரும் என்று சொல்வாங்க. மோஷனில் சளி தான் வருது என்று கண்டுபிடிப்பது எப்படி? எனக்கு சொல்லி தர பொரியவங்க இல்லை அதனால் தான் கேட்கிறேன். தவறாக இருந்தால் மண்னியுங்கள்.
Blessy
Semithu iruntha adar manjalaga maavu pol irukum. Semika vilai endral niram maari chali mathiri vilu vilu nu irukum blessy.
Santhegam ketpatharkaga thana intha pakam manipulam keka vendam.