உருளை கிழங்கு பவுடர் எப்படிசெய்வது?

ஹாய் தோழிகளே எனக்கு டெலிவரிக்கு பிறகு கழுத்துகருமை அதிகமாகிவிட்டது,
உருளை கிழங்கு தடவினால் சரியாகும் என்று நிறைய பேர் கூறி இருக்குறீர்கள்,உருளை கிழங்கு தினமும் உபயோகிப்பதுபோல் காய வைத்து பொடி செய்து கழுத்து கருமைக்கு உபயோகிக்கலாமா?
மஞ்சளுடன்,உப்பு,விளக்கெண்ணை கலந்து தடவினால் கழுத்து கருமை மறையுமா?பிளீஸ் பதில் தாருங்கள்

கஞ்சி மாவுதானே உருளை கிழங்கு பவுடர் அதுதான் கடையில் கிடைக்குமே

பிறசவம் ஆன 3 4 மாதத்துக்கு கருமை இருக்கும் கழுத்து வயிரு கை மடக்கும் இடம் இப்படி சில இடங்கலில் சில பேருக்கு இருக்கும் கவலை பட தேவை இல்லை மரைந்து விடும்
வசம்பு பவுடர் முல்தாணி மட்டி பவுடர் கஸ்தூரி மஞ்சல் பவுடர் கோதுமை மாவு இப்படி எல்லாத்திலையும் கொஞ்சம் எடுத்து ஆரஞ்சு பழ சாரு ஊத்தி முகத்துக்கு கழுத்துக்கு போட்டால் நல்லா பளிச்சுன்னு இருக்கும் கருமையும் மரஞ்சுரும் இழுமிச்சை சாரும் ஊத்திக்கலாம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

;) ம்... இப்போ நான் நடுவில மாட்டிட்டேன். ;)) கண்டுக்காதீங்க யாரும். ;)

‍- இமா க்றிஸ்

ஹாய் பல்கீஸ்,
நான் பஹ்ரைன்ல இருக்கேன்ப்பா,நீங்க சொன்ன பொருட்கள் எல்லாம் இங்கே கிடைக்காது,வேறு வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்

தக்காளி வெள்ளரி கிடைக்குமா மஞ்சு இந்த இரண்டு சாருகளேயும் எடுத்து ஒண்ணா கலந்து தினமும் தேய்ங்க முகத்தி கழுத்தில் ஒரு மாத்தில் கருப்பு போய்ரும்
உருளை கிழங்கை தினமும் ஒரு சின்ன துன்டு எடுத்து தோலை சீவிட்டு லேசா நசுக்கி அந்த சாரே முகத்திலும் கழுத்திலும் தேய்ங்க முகத்தில் சுக்கமோ கருமையோ இருக்காம நல்லாருக்கும் இப்போதைக்கு நான் செய்வது இதுதான் மஞ்சு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் பல்கீஸ் வேலை முடிச்சாச்சா எதனைக்கு தூங்க போவீங்க எழுமிச்சை சாறு கேக்கும்னு நினைக்கிரேன்

ஆமா பசரியாக்கா வேலை முடுஞ்சது இனி தூங்க வேண்டும்
எழுமிச்சை சாரு நல்லதுதான் ஆணா தண்ணீர் கலந்துதான் தேய்க்கனும்
நேரடியா எழுமிச்சை சாரே தேய்த்தால் அது ஏசிட் மாதிரி முகம் சீக்கிரம் வீணாகிரும்க்கா..........

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மஞ்சு எல்லாம் ஹார்மோன் மாற்றங்கள் தான்..எனக்கும் இப்படியே இரண்டு பேருடைய டெலிவெரிக்கு பின்னும் இருந்தது சில மாதங்களில் தானா மறைந்திடும்..ஆலிவ் எண்ணை பூசி குளித்தாலும் மாறும் என்கிறார்கள்..ஆனால் சத்தாக சாப்பிட்டு நல்ல தூங்கினாலே நாள் போக மறைந்துடும்

டியர் பல்கீஸ் உங்க குறிப்புக்கு ரொம்ப நன்றி,செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன், தளிகா,உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.
தளிகா என்னுடைய 1 1/2 மாத குழந்தைக்கு உடம்பில் நிறைய வேர்குரு போல் உள்ளது முகத்தில் நெற்றியில் நிறைய பொரிபொரியாக உள்ளது,டாக்டரிடம் கேட்டேன்,அவர் இது 1 விதமான டிரை ஸ்கிந்தான்,கிரீம் தேயுங்கள்,பவுடர் உபயோகிக்கவேண்டாம் என்று கூறிவிட்டார் நானும் 1 வாரமாக கிரீம்,தேங்காய் எண்ணெய் ஊறவைத்து தேய்க்கிறேன்,சிறிது கூட குறையவில்லை,அதிகமாக பரவிக்கொண்டே இருக்கிறது,என்ன செய்வது என்று தெரியவில்லை,ஆலோசனை வழங்குங்கள்

மஞ்சு என் குழந்தைக்கும் இப்படித்தான் இருந்தது.டாக்டர் கிட்ட காட்டினேன்.கால்ரோஸ்(CALROSE) என்ற க்ரீம் கொடுத்தார்,2 நாட்களில் சரியாகி விட்டது.துணியை நன்றாக அலசாவிட்டலும் அலர்ஜி ஆகும். உங்கள் குழந்தையின் துணியை சுடுநீரில் முக்கி வெயிலில் காயப்போடுங்கள்.TRY THIS CREAM. CALROSE OR CALAMYNE LOTION.

குழந்தைகளுக்கான சோப் பொடி வாங்கி துணியை அலசி பாருங்க.குளிக்க கொஞ்ச நாளைக்கு வெறும் தண்ணி மட்டும் ஊற்றி பாருங்க அல்லது லேசாக சோப் போட்டால் போதும்.சில குழந்தைகளுக்கு இருக்கும் பிறகு சரியாகிடும்.இனி ஒரு வேளை தேங்காய் எண்ணை ஒத்துக் கொள்ளலையோ அதையும் டெஸ்ட் பண்ணி பாருங்க

மேலும் சில பதிவுகள்