காகித கூடை

தேதி: October 5, 2011

5
Average: 4.1 (14 votes)

இக்காகித கூடைகளை தடித்த காகித அட்டையிலோ அல்லது கடதாசியிலோ தேவையை பொறுத்து செய்யலாம். இந்த கூடையினை பலவாறு உபயோகப்படுத்தலாம்,
1. பிறந்தநாள் வைபவங்களின்போது அல்லது பார்ட்டிகளின் போது சிறுவர்களுக்கு சாக்லெட், இனிப்பு அல்லது சிறு விளையாட்டு பொருட்கள் போட்டு கொடுக்க பயன்படுத்தலாம்.
2. அல்லது செயற்கைப் பூக்கள் வைத்து அலங்கார பொருளாக வைக்கலாம்.
3. அல்லது நாணயங்கள், பேனா, பென்ஸில் போன்றவற்றைப் போட்டு வைக்க உபயோகிக்கலாம்.

 

வர்ண காகித அட்டை
கத்தரிக்கோல்
ஸ்டேப்ளர்
ரூலர்
கோனர் பஞ்ச் (corner punch)
க்ளூ
ஸ்டிக்கர்ஸ்

 

காகித கூடை செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
காகித அட்டையில் 9" X 9" (or 6" X 6" or 3" X 3" etc.) அளவுள்ள சதுர துண்டு வெட்டவும்.
இதனை குறுக்கு பக்கமாகவும், நெடுக்கு பக்கமாகவும் மடித்து (ஒன்பது 3" X 3" சதுரங்கள் வரும்) எதிர் எதிர் பக்கங்களில் படத்தில் காட்டியவாறு வெட்டவும்.
இந்த அட்டையின் நான்கு மூலைகளையும் கோனர் பஞ்சால் அல்லது கத்தரிக்கோலால் வளைத்து வெட்டவும்.
படத்தில் காட்டியவாறு இரண்டு மூலைகளையும் நடுவில் வரும் சதுர துண்டோடு இணைத்து ஸ்டேப்ளர் பண்ணவும். இவ்வாறு இரண்டு பக்கமும் செய்யவும். கூடை போல வரும்.
காகித அட்டையில் 3/4" அளவுள்ள நீளமான துண்டு ஒன்றை வெட்டி முனைகளில் க்ளூ தடவி கூடையின் உள்புறமாக வளைத்து கைப்பிடி போல ஒட்டவும். அல்லது ஸ்டேப்ளர் பண்ணவும்.
ஸ்டேப்ளர் பின்னை மறைத்து விரும்பிய ஸ்டிக்கர் ஒட்டி விடவும்.
சுலபமாக செய்யக் கூடிய காகித கூடைகள் தயார். இதனை குழந்தைகளைக் கொண்டே செய்விக்கலாம். மிகவும் ஆர்வமாக செய்வார்கள். ஸ்டேப்ளர் பண்ணுவதை மட்டும் பெரியவர்கள் செய்யலாம். வளர்ந்த பிள்ளைகளாயின் அவர்களே செய்து கொள்வார்கள். அல்லது ஸ்டேப்ளருக்கு பதில் க்ளூ வைத்து ஒட்டலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் அழகான வேலைப்பாடு.

ரொம்ப ரொம்ப கியூட் கூடைகள். அழகான கைவேலை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very nice & very cute kids like this very much

நாளை இங்கு குழந்தைகள் தினம்.... செஞ்சு அசத்திடறேன்.
நன்றி.

சுப்பர் நர்மதா.
இது... சின்னப்பொம்பிளைட பிறந்தநாளுக்குச் செய்ததோ!! ;)

‍- இமா க்றிஸ்

நர்மதா காகித கூடை சூப்பர். குட்டீஸ் ஏற்ற குறிப்பு தான் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

ஹாய் நர்மதா, சூப்பர் க்யூட் கூடைகள். செய்முறை கூட ரொம்ப ரொம்ப சுலபமாக இருக்கு.

க்யூட்டா அழகா இருக்குபா சூப்பர்ப் கூடை வாழ்த்துகள் கண்டிப்பா செஞ்சிட்டு சொல்றேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப அழகான கூடைகள் :-) செய்ய எளிமையா இருக்கு. வாழ்த்துக்கள்...

KEEP SMILING ALWAYS :-)

நர்மதா,
காகித கூடை ரொம்ப க்யூட்டா இருக்கு! :) செய்வதற்கும் ரொம்ப சுலபமா இருக்கும்போல் தெரிகிறது, கட்டாயம் என் பசங்களோட சேர்ந்து செய்து பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

தோ ஹாலோவீன் வந்து விட்டது. அதுக்கு ஏற்ற மாதிரியே குழந்தைகள் வைத்து செய்ய அருமையா ஒரு கிராப்ட்....எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நர்மதா,
அழகு..செய்யவும் சுலபம்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பின் அறுசுவை டீம் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
-நர்மதா :)

hello very very............super idea.i will try this

Oh spr mem..........

Hi

மிகவும் அழகா உள்ளது.

இதை என் அக்காவின் மகன் பிறந்த நாளுக்கு செய்யலாம் என்று உள்ளேன்.

கைவினை பகுதியில் வருபவற்றை விருப்பமான விளக்கப் பட பகுதி,மற்றும் விருப்பமான பகுதியில் செர்ப்பது எப்படி.

கருத்து தெரிவிக்க, அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம் என்று தான் இருக்கிறது.

நீங்களாவது சொல்லுங்க pa

சுகன்யா சமையல் குறிப்பு பகுதிக்கு மட்டும்தான் அந்த ஆஃப்ஷன் இருக்கு. கைவினை பகுதிக்கு இல்ல.

நன்றி vinoja

சூப்பரா இருக்கு...நிலா...
இப்படியான கைவேலை ரொம்ப பிடிக்கும் எனக்கு

என்றும்
தோழமையுடன்
எப்.நிஹாஸா....

this is so nice n easy to prepare.naan idhai seidhu paarthuviten, so cute. thk u.idhu madhiri innum niraya innovative ah seidhu impress panna my best wishes madam

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)